லவ் இன்ஃபினிட்டி: என்னை அறிந்தால்...






dylan dog




லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: டேனியல், வில்லியம்சன்

சுய புலம்பல்கள் போதும். நான் எழுதாவிட்டால் தமிழ் இலக்கியம் என்னாகும்? சொல்லுங்கள். இதோ என் படைப்பு

இந்த 17 வயதுகளில் பாதியை
சோகங்களே சுவைத்துவிட்டன
சின்னஞ்சிறு வயதில்
பொம்மைகளோடு நான் அதிகம்
 பேசியதில்லை. 
வெறும் தனிமையின் சுவடுகளோடுதான்
என் சுவாசமெல்லாம். 

எந்தையும் தாயும் எனக்கு எல்லாமே கொடுத்தார்கள்
ஆனால் கொடுக்க மறந்தது அன்புதான்.
நான் வாங்க மறந்தேன்
அவர்கள் கொடுமைக்காரர்கள் அல்லர். 


எனினும் அன்பால் என்னை 
கொடுமைப்படுத்தவேண்டும் என்று 
நான் நினைத்தேன். 

திட்டுகள் வாங்கி வாங்கி 
பழக்கமான என் காதுகள்!
மரத்துப்போன என் மனசு!
இறுகிப்போன முகம்
எதையோ இடையறாது தேடும் கண்கள்

இவ்வாறுதான் இருந்தேன் அகவை பத்து வரை. 

பின்னர் புத்தகங்கள் என் புலன்களைத் திறக்கும்
சாவியானது. 

படிக்கும்போது கவலைகள் 
எல்லாம் பஞ்சுபோல சுகமாய் தோன்றியது. 
நண்பர்களின் சூழலில் நான் மட்டும் தனியாய்!
அப்போதே எல்லாம் எனக்குத் தெரியும் என்ற 
கர்வமெனக்கு முள்முனையளவு துளிர்த்துவிட்டது. 

குறும்புத்தனங்களுக்கு குறைவில்லை என்னிடம்
உடம்பில் காயங்கள் ஏற்படுத்திக்கொள்வேன். 
மற்றவர்களைப் போல நான் இல்லையே!
என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு உண்டு.

கறுப்பு நிறமான எனக்குள் நெருப்பு ஆறு 
உள்ளே ஓடுவது யார்க்கும் தெரியாது. 
அவமானங்களால் கூனிக்குறுகிப் போவேன். 
எனக்குள் நான் அரசன் என்பது யாரும் அறியாதது. 

எட்டு தாண்டி பதினான்கில் கால் பதித்தேன்.
எனது ஊர்ப்பள்ளி படிப்பு முடிந்து காவிரிக்கரையில் 
கால்பதித்தேன். 
ஆம். என் மேல்நிலைக்கல்வி அங்குதான் மரநிழலில் தொடங்கியது. 

முரட்டு முற்களால் குத்தப்பட்ட நான் என் இதயத்திலிருந்து வழியும் குருதியைத் துடைத்துக் கொள்வேன். 
இதயத்தை இதமாக்கிக் கொண்டேன்.
ஆவேசமான வார்த்தைகளைக் கேட்டு பழகியதால் 
அன்பான வார்த்தைகளைப் பேச பழக முயற்சித்து வந்தேன். 
ஊசி குத்தினால் பூவிற்கு வலிக்கும்.
பூவாக நான் இருந்தபோது வலித்தது. 

என் இருளடைந்த மனதிற்குள் இருந்த கவிஞனை வெளிச்சத்திற்கு இழுத்து வந்தது நண்பர்கள்தான். 

ஒரு நாள் நண்பன் எழுதிய காமெடி கவிதையை விமர்சிக்க வாக்குவாதம் வளர கவிதைப் பந்தயம் உருவானது. முடிவு பண்ணிவிட்டேன். ஆனால் எப்படித் தொடங்குவது?
பத்திரிகையில் வந்த கவிதையை என் கவிதை என்று சொல்லிக் நண்பர்களை ஏமாற்றினேன். 
ஆனால் என் மனசாட்சி உறுத்தியது. 
ஏன் நம்மால் கவிதை எழுத முடியாதா?

என்னுள் அதுவரை அலைகழித்த உணர்ச்சிகளை எல்லாம் கருவாக்கி காகிதங்களில் ஏற்றி கவிதை என பெயரிட்டேன்.
பின்தான் தெரிந்துகொண்டேன். இதா கவிதை!

இதுதான் ஆச்சரியமாக இருந்தது, கூடவே ஆனந்தமாகவும்தான்.

(காதலைச் சொல்லுவேன்)