லவ் இன்ஃபினிட்டி: நட்பே துணை
Pinterest/andrzej nowak |
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: சரஸ்
உன்னுடைய Book போடணும்கிற ஆசை நிறைவேறியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா பெரிய வருத்தம் என் பேர்ல வந்த கவிதை. கடவுளே! அந்த கவிதை நான் எழுதல. படிச்சதை புக்கில் Note பண்ணி வெச்சிருந்தேன். Atleast நீ என்கிட்ட ஒருமுறை கேட்டிருக்கலாம். இன்னும் மனசுக்குள் அது பெரிய உறுத்தலா இருக்கு. உமா அண்ணிக்கிட்ட கேட்டேன், Book பத்தி. ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்க. அதிலிருந்த mistakes பத்தி சொல்றதா சொன்னாங்க. நான் கேட்டுச் சொல்றேன்.
உன்னுடைய Diary யை கொடுத்து விடட்டுமா? உன்னை நேர்ல பார்த்து கொடுக்கணும்னு நினைச்சேன். நான் என்னுடைய டைரியில் எழுதறமாதிரியே உன்னுடைய டைரியில் எழுதிட்டேன். அப்புறம்தான் இதை Loosuதனமா எழுதறேன்னு நினைச்சேன். படித்த கவிதைகள், Wordings சில எழுதியிருக்கேன். அப்பப்ப என்னென்ன தோணுதோ அதையெல்லாம் எழுதினேன்.
என்னைப் பத்தி ஏதாவது வருத்தம் உள்ளதா? அப்படின்னு எழுதியிருந்தாய். அப்படி எதுவும் கிடையாது. சில கேள்விகள் உன்னிடம் எனக்கு புரியவில்லை. நீ Diary இல் எழுதிக்கொடுத்த கவிதையை Friends படிச்சாங்க. நிறைய கேள்விகளை என்னிடம் அடுக்கினாங்க. எல்லோருடைய கண்ணோட்டமும் ஒரே மாதிரி இருக்காது. So Dont Consider it. உன்னைப் பார்த்து நிறைய பேசணும், கேள்விகள் கேட்கணும்.
நான் எழுதினதுக்கான உன்னோட பதில் கடிதம் படிச்சதும் எனக்கு மனசு கஷ்டமாயிருச்சுடா. ரொம்பவே ஃபீலிங்கா இருந்துச்சு தெரியுமா? இன்னும் ஒரு வருஷம் கழிச்சு எனக்கு Marriage செஞ்சிடுவாங்க. நாள் சீக்கிரம் போய்க்கிட்டே இருக்கு. நான் M.sc பண்ணுவேன் அப்படிங்கறது 98% சாத்தியமில்லை. அப்பா ரொம்பவே கஷ்டப்படறார். இன்னும் அவங்கள கஷ்டப்படுத்த விருப்பமில்லை. முடிஞ்சவரைக்கும் பார்க்கலாம். எல்லாம் நன்மைக்கே.
Very Well. அப்புறம் அம்மா எப்படி இருக்காங்க? நான் ரொம்ப கேட்டதாகச் சொல்லு. ஆத்தா வீட்டிற்கு வந்துட்டுப் போனதா அம்மா சொன்னாங்க. தம்பி எப்படி இருக்கான்? நல்லா படிக்கிறானா? அவனுக்கும் Lr எழுதணும்ணு நினைக்கிறேன். அடுத்த தடவை எழுதிக் கொடுக்கறேன். அவனுக்கு வாங்கின Gift இருக்கு. எடுத்துட்டு வரலை. உனக்கு ஏதாவது Books வாங்கணுமா? Own Book(Kavithai or Novel(bala)) ஏதாவது வேணும்னா Book names எழுதிக்கொடு. என்னால் முடியும்போது வாங்கிக் கொடுக்கிறேன்.
அன்புடன்
உன்
Kavi
கவி எப்பவுமே கனிவோட உரிமையோட பேசுவ. செக்ஸ் உட்பட அவகிட்ட நான் ஃப்ரீயா பேசுவேன். இல்லைனா 'M' கிட்ட காதல் தூது சொல்ல அனுப்புவேனா?
தான் நெனைச்சத சாதிக்கிற மூர்க்கமான துடிப்பு அவகிட்ட உண்டு. ஆனா கவனமா பேசணும். ஒரு வார்த்தை விட்டதுக்கு போடா அப்படின்னு ஒரு வாரம் பேசாம இருந்திருக்கா. கோபம் இருக்கிற இடத்துலதான் கொண்டாட்டமும் இருக்கும். புத்தகம், சாக்லெட்டுன்னு பிரியமானான்னா அதனை நம்மாள தாங்கிக்க முடியாது. என்னமோ என்னைச் சுத்தி இருக்கிற பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் என்னை செதுக்கிட்டே இருக்காங்க.
காதல், நட்பு லேபிள்களை விட்டுடுங்க. மானங்கெட அப்பா என்னைத் திட்டுனாலும் அவரோட ஆண்மையை உலகத்துக்கு சொன்னது என்னோட குரல்தான். அதனால, கேட்ட காசு பிலிப்ஸ் டிவி மேல எப்பவுமே இருக்கும். அம்மாவுக்கு, நான் மாநிறமா பொறந்ததுல அப்படியொரு சந்தோஷம். எங்க வீட்டுல ஆத்தாவையும் என்னையும் தவிர்த்து மத்தவங்க எல்லாருமே கருப்பு. பெருமையான பாமர குடும்பத்தின் முதல் அக்கவுண்ட்ஸ் பட்டதாரி. இதெல்லாம் உண்மையில் எனக்கு பெருமையான்னு எனக்கு தெரியல.
(காதல் சொல்லுவேன்)