நாட்டின் சகிப்புத்தன்மை சிதைந்து அச்சம் கூடியுள்ளது



Image result for mahesh elkunchwar
Youtube





மகேஸ் எல்குஞ்ச்வர், விஜய் டெண்டுல்கருக்கு அடுத்து பெரிதும் மதிக்கப்படும் நாடக ஆளுமை. அண்மையில் மகிந்திரா எக்சலன்ஸ் ஆஃப் தியேட்டர் விருதை, வாழ்நாள் சாதனைக்காக வென்றிருக்கிறார். 


விஜய் டெண்டுல்கர், விஜயா மேத்தா, சத்யதேவ் துபே ஆகியோர் மகாராஷ்டிராவில் நாடக இயக்கத்தை உருவாக்கி இருக்கியிருக்கிறீர்கள். இப்போதுள்ள நாடகங்களை எப்படி புரிந்துகொள்கிறீர்கள். 


வெளிப்படையாக சொல்வதென்றால், எனக்கு அதுபற்றி எந்த கருத்துமில்லை. நான் தற்போது நாக்பூரில் வசித்து வருகிறேன். இதனால் நாடக இயக்கங்களோடு பெரியளவு தொடர்புகள் கிடையாது. எனக்கு இருக்கும் தற்போதைய ஆதங்கள், எழுத்தாளர்களும் இயக்குநர்களும் நாடகத்தில் ஆழமாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை எனபதே. விஜய் டெண்டுல்கர் ரங்காயன் எனும் குழுவை உருவாக்கி நாடகங்களை உருவாக்கி வந்தார். பிறரும் அப்படித்தான்.


விமர்சகர்கள் உங்களை விஜய் டெண்டுல்கருடன் சேர்த்துத்தான் பேசுகின்றனர். ஒருவகையில் நீங்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளீர்கள். இதில் உங்களை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறீர்கள்?


எனக்கு ஆச்சரியமே என்னை நீங்கள் விஜய் டெண்டுல்கருடன் ஒப்பிடுவதுதான். நாடகங்களை அணுகும் பார்வையில் இருவருமே வேறுபட்டவர்கள். வாழ்க்கை என்பதே எங்களுடைய முன்னுரிமையாக இருந்த து. நான் விரும்பினாலும் அவரைப் போல எழுதுவது சாத்தியமில்லை. விஜய் டெண்டுல்கர் பலருக்கும் இன்ஸ்பிரேஷனான ஆளுமை. நான் பின்பற்றுவது விஜயா மேத்தாவைத்தான்.


எங்கள் இருவருக்கும் நாடகம் குறித்த ஐடியாக்கள், எதை சொல்லவேண்டும் என்பதில் நிறைய ஒற்றுமைகள் இருந்தன.


நாட்டில் நிலவிவரும் சகிப்புத்தன்மையற்ற நிலை பற்றி தங்கள் கருத்தென்ன?


வேதனையாகவும், கையறு நிலையிலும் இருப்பதாக உணர்கிறேன். இது, தனிப்பட்ட ஒருவரைப் பற்றியதோ சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரைப் பற்றியதோ அல்ல. நாம் புனிதமாக நினைத்த பல்வேறு விஷயங்கள் தொடர்ச்சியாக உடைந்து வருகின்றன. மெல்ல நாடு தீவிரமான வன்முறை நோக்கி சென்று வருகிறது. முஸ்லீம்களையும் கிறிஸ்துவர்களையும் நண்பர்களாக கொண்டிருந்தால் அவர் தேச விரோதியாக மாறி விடுவாரா? எனக்கும் கூட அப்படி இருக்கின்றனரே. 2017 ஆம் ஆண்டு ஜூனைத் கான் ரயிலில் படுகொலை செய்யப்பட்டார். அப்போதிலிருந்து இங்குள்ள சிறுபான்மையினர் மத்தியில் நாமும் ஒருவரை நம் குடும்பத்தில் பலி கொடுக்க வேண்டுமா என்று அச்சப்படத் தொடங்கிவிட்டனர்.


ஏறத்தாழ நாடகங்கள் எழுதுவதை நீங்கள் நிறுத்தி விட்டீர்கள். தற்போது கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள். தியேட்டருக்கு வெளியே உங்கள் செயல்பாடுகளை செய்யத் தொடங்கியது ஏன்?

நாடகம் என்பது பல்வேறு மூளைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு. இன்று நான் நாடகத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டேன். தற்போது என் அனுபவங்களை கட்டுரையாக மக்களுக்கு கண்ணுக்குத் தெரியாத வாசகர்களுக்கு பகிர்கிறேன். இன்று எனக்கு வரும் கடிதங்களை எழுதியவர்கள் யார் என்றே எனக்கு தெரியாது. அவற்றை விருப்பத்துடன் படித்து வருகிறேன். வாசகர் - எழுத்தாளர் உறவு எனக்கு புதிய ஒன்றாக உள்ளது.

நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா