மாற்றுப்பாலினத்தவரை ஒடுக்கும் ஜப்பான் அரசு!
ஜப்பானில் அரசின் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுப்பாலினத்தவர் |
மாற்றுப் பாலினத்தவர்களுக்கு கட்டாய அறுவை சிகிச்சை! - ஜப்பானின் புதிய விதி!
நேர்காணல்: கனோ டோய்
மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ஜப்பானில் மாற்றுப்பாலினத்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
ஜப்பானில் வாழும் மாற்றுப்பாலினத்தவர்கள் இன்னும் வெளிப்படையாக அடையாளம் காணப்படவில்லை. முறையான அரசு, அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
மேலும் அரசு, மாற்றுப்பாலினத்தவர்களுக்கு எந்த சலுகைகளையும் வழங்க முன்வரவில்லை. அரசின் ஆவணங்களில் தங்களுடைய பாலினத்தை மாற்ற முயல்பவர்களுக்கு பாலின அடையாள குறைபாடு கொண்டவர் என்ற பிரிவில் அவர்களுக்கு விதிகளை மீறிய அறுவைசிகிச்சை செய்யும் ஜப்பான் அரசு முயற்சிக்கிறது.
ஜிட் சட்டம் என்ன சொல்கிறது?
இச்சட்டம் அமலாகி பதினைந்து ஆண்டுகளாகின்றன. இதன் மூலம் மாற்றுப்பாலினத்தவர் தன் பாலினத்தை மாற்றிக்கொள்ள முடியும். அதை இச்சட்டம் அனுமதிக்கிறது.
அது சரிதானே? என்ன பிரச்னை உள்ளது?
பிரச்னை சட்டம் அல்ல; சட்டத்தின் உள்ளே உள்ள கட்டுப்பாடுகள். இப்பிரிவில் தற்போது மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதில் இளைஞர், முதியவர், குழந்தைகள் பெறாதவர், மணம் ஆனவர், ஆகாதர் என்ற விதிவிலக்குகளே கிடையாது.
மாற்றுப்பாலினத்தவர்கள் தம் பாலினத்தகுதிக்கான அறுவை சிகிச்சையை விரும்பவில்லையா?
நான் கூற வந்தது, அறுவை சிகிச்சை மூலமான மாற்றத்தை மிகச்சிலரே விரும்புகின்றனர். ஏனெனில் இது மிகப்பெரிய வாழ்வை மாற்றும் முடிவு. சட்டம் அனுமதித்தாலும் மருத்துவத்தில் உள்ள சில முறைகளால் அச்சம் கொள்பவர்கள், இம்முறையைத் தேர்ந்து எடுப்பதில்லை. அடையாளம், ஆவணங்களில் அழைக்கப்படும் பாலினம் என குழப்பிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை.
இது எப்படி அவர்கள் வாழ்வை பாதிக்கிறது?
ஜப்பானில் கல்வி, மருத்துவம் என அரசின் சேவைகளை பயன்படுத்த உங்களது அடையாள எண்ணை பயன்படுத்தும் நிர்பந்தம் உள்ளது. அப்போது மாற்றுப்பாலினத்தவர்கள் பல்வேறு அவமானங்களைச் சந்திக்கின்றனர். பாலினம் தொடர்பான கேள்விகள் பிறர் முன்னால் கேட்கையில் அதனை எதிர்கொள்வது கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.மருத்துவர்கள் பலருக்கும் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான சிகிச்சைகள் குறித்து ஏதும் தெரியவில்லை.
என்னென்ன சிகிச்சைகள் செய்யப்படுகின்றன?
மாற்றுப்பாலினத்தவர்களுக்கு முதலில் உளவியல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அரசு சலுகையுடன் சிகிச்சை செய்ய நீங்கள் உங்களுக்கு குறைபாடு உள்ளது என்பதை ஏற்று கையெழுத்திட வேண்டும். இதனை குறைபாடு என்று அமெரிக்காவிலுள்ள மருத்துவ அமைப்புகள் கூட கூறவில்லை.
டோக்கியோவில் இதுபோன்ற சிகிச்சைகள் செய்யும் மருத்துவமனைகள் நிறைய உண்டு. ஆனால் கிராமங்களில் இது மிகவும் சிரமம். இதற்கான சிகிச்சைகளை பெற்றோர் அனுமதியுடன்தான் மேற்கொள்ள முடியும். மருத்துவர்கள் கூட இதுபற்றி அறியாமல் உள்ளதால் சிகிச்சை பெறுவதால் குழப்பம் நிலவுகிறது.
நன்றி: மனித உரிமைக் கண்காணிப்பகம்