ரேடியோ அலைகள் பற்றி தெரிஞ்சுக்கலாம்!
ரேடியோ அலைகள் - விளக்கம்
ரேடியோ அலைகள் மின்காந்த அலை வகையைச் சேர்ந்தவை. பெரும்பாலும் தகவல் தொடர்புக்காகவே பயன்படுகின்றன. இன்றும் நாம் பயன்படுத்தும் டிவி சேனல்கள், போன்கள், ரேடியோ ஆகியவை இந்த ரேடியோ அலைகளின் மூலமே செயல்படுகின்றன. ரேடியோ அலைகளைப் பெறும் ரேடியோ அதனை ஒலி அலையாக மாற்ற ஏ.ஆரின் இனிய கீதத்தை நாம் கேட்கிறோம்.
மின்காந்த அலைக்கற்றையை ஏழு பகுதிகளாக பிரிக்கலாம். குற்றலைகள், அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதா கதிர்கள், ஒளி அலைகள், எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் ஆகியவை இதில் அடங்கும்.
ரேடியோ அலைகள் மிக நீளமான அலைநீளம் கொண்டவை. ஒரு மில்லிமீட்டரிலிருந்து 64 மைல்களுக்கு பயணிக்கும். அதாவது நூறு கி.மீ தொலைவுக்கு. 3 கிலோ ஹெர்ட்ஸிலிருந்து 300 பில்லியன் ஹெர்டஸ் வரை அல்லது 300 ஜிகாஹெர்ட்ஸ் வரை.
BandFrequency range Wavelength range
Extremely Low Frequency (ELF)<3 kHz>100 km
Very Low Frequency (VLF)3 to 30 kHz10 to 100 km
Low Frequency (LF)30 to 300 kHz1 m to 10 km
Medium Frequency (MF)300 kHz to 3 MHz100 m to 1 km
High Frequency (HF)3 to 30 MHz10 to 100 m
Very High Frequency (VHF)30 to 300 MHz1 to 10 m
Ultra High Frequency (UHF)300 MHz to 3 GHz10 cm to 1 m
Super High Frequency (SHF)3 to 30 GHz1 to 1 cm
Extremely High Frequency (EHF)30 to 300 GHz1 mm to 1 cm
இதனை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் என்ற இயற்பியலாளர் 1870 ஆம் ஆண்டு மேம்படுத்தி மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். 1886 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஹெய்ன்ரிச் ஹெர்ட்ஸ் என்ற இயற்பியலாளர் மேக்ஸ்வெல்லின் தியரிகளைப் பயன்படுத்தி ரேடியோ அலைகளை உருவாக்கி காட்டினார். வீட்டில் இருந்த லெய்டன் ஜார், இன்டக்சன் காயில் பயன்படுத்தி ரேடியோ அலைகளை அனுப்பி, பெற்று தன் சோதனையில் வெற்றி பெற்றார். இதன் விளைவாக ரேடியோ அலைகளின் ஒரு நொடி சுழற்சி வேகம் ஹெர்ட்ஸ் என குறிக்கப்படுகிறது.
நன்றி: லிவ் சயின்ஸ்