சர்க்கரை சாப்பிடும்போது என்னாகிறது?
birdee |
சர்க்கரை சாப்பிடும்போது என்னவாகிறது?
சர்க்கரை பிடிக்காதவர்கள் யார் உண்டு. அனைவருக்கும் சர்க்கரை மீது தனி ஆசை உண்டு. அமெரிக்காவின் பென்சில்வேனியா, உலகின் சாக்லெட் தலைநகரம் என்று அழைக்கப்படும் அளவு புகழ்பெற்றது. சர்க்கரை உணவுகளை சாப்பிடத் தொடங்குவதால் ஏராளமான பிரச்னைகளை உடலுக்கு ஏற்படுகின்றன. இதன் பாதிப்புகள் பலருக்கும் ஏற்பட, அதன் தாக்கத்தை அனைவரும் உணரத் தொடங்கியுள்ளனர்.
நரம்பியல் அறிவியலில், உணவு என்பது இயற்கையான பரிசாக கூறப்பட்டுள்ளது. உயிரினமாக நாம் வாழ்வதற்கு, சாப்பிடுவதும், பாலுறவும் முக்கியமானது. மூளையின் முன்புறத்திலுள்ள நியூக்ளியஸ் அகும்பென்ஸ், சாக்லெட் கேக்கை சாப்பிடலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. இதிலுள்ள டோபமைன் எனும் ஹார்மோன், கேக்கின் சுவையை மூளையில் பதிந்து வைத்துக்கொண்டு மீண்டும் அதனை உண்ணுமாறு தூண்டுகிறது.
இதிலும் கூட இனிப்பை மட்டுமே அதிகம் தேர்ந்தெடுப்போம். காரணம் ஆதிகாலத்து உணர்வுதான். இயல்பாகவே இனிப்பு என்பது சரியான உணவாகவும், கசப்பு என்பது விஷம் எனவும் நம் மூளையில் பதிந்துள்ளது. இது பல்வேறு தலைமுறையாக நம் ஜீனில் பதிந்து வந்துள்ள விஷயம். எனவேதான் நாம் கசப்பு சுவையுள்ள பொருட்களை விட இனிப்பான பொருட்களை பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறோம்.
அமெரிக்கர்கள் தினசரி 22 டீஸ்பூன் சர்க்கரையைப் பயன்படுத்துகின்றனர். இங்கிலாந்தில் சராசரியாக ஒருவர் 238 டீஸ்பூன் சர்க்கரையை ஒரு வாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். நிகோடினைப் போலவே சர்க்கரையும் அப்பழக்கத்திற்கு அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. பொதுவாக சர்க்கரை சாப்பிட்டு பழகிய எலிகள், மிக எளிதாக ஓபியம், மற்றும் கோகைன் பழக்கத்திற்கு அடிமையாயின.
காரணம், டோபமைன் ஹார்மோனை சர்க்கரையும் போதைப்பொருட்களைப் போலவே தூண்டுகிறது. எனவே இதுதொடர்பான முழுமையான ஆய்வுகள் வந்தால்தான் இதன் பாதிப்பு தெரியும்.
நன்றி: க்யூரியாசிட்டி