பொய்களை உலகிற்கு சொல்வதே எங்கள் கடமை!



Image result for fake news
bbc




இந்தியாவில் மோடி, பிரேசிலில் பொல்சனாரோ, ஹங்கேரியில் விக்டர் ஆர்பன்  உள்ளிட்ட உள்ளிட்ட வலதுசாரி தலைவர்கள் அரசியல் சூழலையே மாற்றியுள்ளனர். இவர்களின் தலைமையிலான இந்த அரசுகளுக்கு இடையிலுள்ள பொதுவான தன்மை, மக்களுக்கு ஆதாரமில்லாத பொய்களை, கட்டுக்கதைகளை கூறுவது. எதற்காக? தங்களுடைய நிர்வாகச் செயலின்மையை மறைப்பதற்காகத்தான்.

அதனை அம்பலப்படுத்துபவர்களும் இவர்களுக்கு இணையாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம்.


கோவிந்தராஜ் எத்திராஜ்
பூம் லைவ்

பாகிஸ்தான் இணையத்தளமாக வேர்ல்டு நியூஸ் அப்ஸர்வர், சொன்ன பொய்யை அம்பலப்படுத்தினார். அதில் அமெரிக்க தளவாட நிறுவனமான லோக்கீத் மார்ட்டின் இந்தியா மீது  தவறான செய்திகளை பரப்பியதற்காக வழக்கு தொடரவிருப்பதாக செய்தி வெளியிட்டது வேர்ல்ட் நியூஸ் வலைத்தளம்.

ஃபேக்ட்செக்கர்.இன்

கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி 35 விமானநிலையங்களை கட்டியதாக கூறியதை சூப்பர் டூப் என நிரூபித்தார்.
 2014 -2018 ஆம் ஆண்டில் வெறும் ஏழு விமானநிலையங்களை மட்டும் கட்டியுள்ளதை வெளிப்படுத்தியது இந்த இணையதள சாதனை. இந்தியாஸ்பென்ட் எனும் தளத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் நடத்தி வருகிறார். அதில் அரசின் பொருளாதார வளர்ச்சி, திட்ட இலக்கு, என்ன பயன்கள் என்பது குறித்த ஆராய்ச்சி அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

த்ருவ் ரதி

யூட்யூபர்

2016 ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் அரசு சாதனைகள் பற்றிய போலிச்செய்திகளை வெளிக்கொண்டு வந்தார்.

பிரதிக் சின்கா
ஆல்ட் நியூஸ்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலீடாக பாகிஸ்தானில் பாலகோட்டில் இந்திய அரசு தாக்குதல் நடத்தியதாக கூறியது. இத்தாக்குதலை நடத்தியது இந்திய விமானப்படை என்பது அரசின் கருத்து. இதில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் போலியானது என்றும், கெட்டி இமேஜஸ் தளத்தில் 2015 பதிவேற்றப்பட்ட து என கண்டுபிடித்து சொன்னது ஆல்ட் நியூஸ் தளம்.

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்