பூமராங்கைக் கண்டுபிடித்தது யார் தெரியுமா?

ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி
பூமராங்கை கண்டுபிடித்தது யார்?
மரத்தில் அமைந்த ஆயுதமான பூமராங்கை கண்டுபிடித்தது யார் என்று கூறுவது கஷ்டமான காரியம். இதனை முதலில் பயன்படுத்தியதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பழங்குடிகளைக் குறிப்பிடுகிறார்கள்.
துடன்காமன் சமாதியில் தந்தத்தில் செய்த பூமராங்கை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதோடு போலந்தில் 23 ஆயிரம் ஆண்டு பழமையான பூமராங்கை கண்டறிந்தனர். இது முன்னர் பறவைகளை வேட்டையாடப் பயன்படுத்தினர்.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்