இளைஞர்களின் குரல்!
ashoka.org |
கவிதா குல்ஹாத்தி (19,பெங்களூரு)
எனக்கு அப்போது பதினைந்து வயது. திடீரென பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு. அப்போதுதான் ஒரு செய்தியைப் படித்தேன். உலகெங்கும் பதினான்கு மில்லியன் லிட்டர் நீர் உணவகங்களில் வீணாவதை அறிந்தேன்.
இதைத் தடுக்க வொய் வேஸ்ட்( Why Waste) என்ற அமைப்பைத் தொடங்கினேன். ’கிளாஸ் ஹாஃப் புல்’(Class Halfful) என்ற திட்டத்தை அமைப்பின் முதல் திட்டமாக தொடங்கினோம். நாங்கள் ஒருங்கிணைந்து பெங்களூருவிலுள்ள உணவகங்களுக்குச் சென்று, வாடிக்கையாளர்களுக்கு அரை டம்ளர் நீரை மட்டுமே வழங்க கோரினோம். நாங்கள் சிறுவர்கள் என்பதால் இச்செயலை சாத்தியமாக்க போராட வேண்டியிருந்தது.
whywasteorg.com |
இன்று, தேசிய உணவ அசோசியேஷனின் ஆதரவைப் பெற்று எங்கள் நோக்கங்களை ஒரு லட்சம் உணவகங்களுக்கு மேல் பிரசாரம் செய்து வருகிறோம். இன்று கல்வி கற்க பல்வேறு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனாலும் நான் என் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறேன். நாம் இளமையிலேயே நிறைய சாதிக்க முடியும். முப்பது அல்லது நாற்பது வயதானபின்தான் உலகில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதல்ல.
எங்களுடைய வொய் வேஸ்ட் அமைப்பில் அனைவரின் வயதும் இருபதிற்குள்தான். ஒருவர் மட்டும் 50 வயதுக்காரர், அவர் சமூக வலைத் தளத்தில் இயங்குகிறார்.
அஞ்சு வர்மா |
அஞ்சு வர்மா(16, ஹரியானா)
ஹரியானாவின் தாலபுத் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். அப்போது, பள்ளியில் என்னுடைய நண்பர்கள் வீட்டுப்பாடம் முடிக்காமல் தினசரி தண்டனை பெற்று வந்தனர்.
ஏன் என்று கேட்டபோது, வீட்டு வேலைகள் அதிகமாக உள்ளது என்று சொன்னார்கள். இம்முறையில் பெற்றோர்களைச் சந்தித்து வேலைகளை குறைத்து மாணவர்களை படிக்க விட கோரினேன். இப்படி இருவருக்கு உதவியபின்னர், இதை ஏன் அப்படியே விட வேண்டும் என்று தோன்றியது. புல்லாந்த் உடான் என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கினேன். எங்கள் கிராமத்தை சர்வே செய்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தோம். நான் செய்யும் பணிகளை என் பெற்றோரும் ஆதரித்தனர். இன்று 500 கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்க உதவியுள்ளோம்.
www.jagran.com |
பணிகளின் தொடக்கத்தில் என்னுடன் சேரக்கூடாது என்று தங்கள் மகள்களை பெற்றோர் தடுத்தனர். இப்போது, தங்கள் மகள்களை சாதனையாளர் கொண்டாடுவதும் அதே பெற்றோர்தான். அதேசமயம் எனக்கு கொலைமிரட்டல்கள், அவமானங்களும் நேர்ந்தது உண்டு. ஹரியானா முழுக்கவே குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே என் ஆசை.
(நன்றி: புகைப்படம் பிஜய்கோஷ்(அஞ்சு வர்மா)(பிஸினஸ்லைன்))
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா