தேர்தல் வீதி 2019

Image result for election 2019
kerala kaumudi


தேர்தல் வீதி


பலரும் இந்த தேர்தலில் ஆளும் கட்சி தோற்று மற்றொரு கட்சி ஆட்சிக்கு வரும் என நினைக்கிறார்கள். அதற்கு வாய்ப்பிருக்கிறதா?

1977 -2002 காலத்தில் அரசுகள்(70%) பல கலைந்து போயின. காரணம், அரசுகளின் செயலின்மை, வாக்குறுதிகள் நிறைவேற்றாமை என பல காரணங்கள் அதற்கு உண்டு. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக நிலைமை மாறி வருகிறது. கோபமாக உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த வாக்காளர்கள் இன்று முதிர்ச்சியடைந்தவர்களாக மாறியுள்ளனர்.

இளைய வாக்காளர்கள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று பதவிகளை அனுபவித்து வரும் எம்பிக்களில் பலர், இந்திய வாக்காளர்களின் தோராய வயதைவிட அதிக வயது கொண்டவர்கள். இந்தியாவில் தற்போது 59 சதவீதம் இளைஞர்கள்(25-40) உள்ளனர். ஆனால் இதே வயதில் உள்ள எம்பிக்களின் வயது 15 சதவீதம்தான். மீது 85 சதவீத எம்பிக்கள் வெவ்வேறு வயதுப் பிரிவைக் கொண்டவர்கள். ஆனால் இதனால் வாக்காளர்களிடையே, வேட்பாளர்களிடையே பெரும் இடைவெளி உள்ளது.

பெண் வாக்காளர்கள்

தேர்தலில் பெண்கள் பங்கேற்கும் அளவு அதிகரித்து வருகிறது. இது அடுத்த மக்களவைத் தேர்தலில் மேலும் அதிகரிக்கும். வரலாற்றுச் சாதனை கூட. உஜ்வாலா எனும் இலவச சிலிண்டரை பாஜக கொடுத்ததே பெண்களின் வாக்குகளைப் பெறத்தானே! ஆண்களை பெண்களை நம்பியே களமிறங்குகிறது பாஜக. ஆனால் ஆண்களின் வாக்குகள் பாஜகவுக்கு முக்கியம். பெண்கள் வாக்களித்தால் குறைந்த சீட்டுகள் கிடைக்கும். எனவே, இரண்டு பேரையும் கவர பாஜக முயற்சித்து தினசரிகளில் சாதனை விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.

2019 ஆம் ஆண்டு மட்டும் 21 மில்லியன் பெண் வாக்காளர்கள் காணாமல் போயுள்ளனர். இதன் அர்த்தம் ஒவ்வொரு தொகுயிலும் 39 ஆயிரம் பெண்கள் காணவில்லை என்பதுதான்.


நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (பிரணாய் ராய், தோரப் சோபரிவாலா)









பிரபலமான இடுகைகள்