வெள்ளையர்களின் இனவாதம் - ஒரு அலசல்




The new face of hate: Neo-Nazis hold a shocking swastika burning ritual in Georgia | Daily Mail Online
dailymail






வெள்ளையர்களின் இனவாதம் பரவுகிறதா?


நியூசிலாந்தில் மசூதி மீது தாக்குதல் நடத்திய வெள்ளை இனவெறியர் பிரெண்டன் டாரன்ட், அதனை கேமராவில் படம்பிடித்து ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். அவரின் தாக்குதலின் நோக்கம், அகதிகளை அரசு அனுமதிப்பது தொடர்பானது. ஆனால் இதனை இனவெறியாக பதிவு செய்து மக்களுக்கு காட்சிபடுத்திய அந்நாட்டினை அதிரவைத்துள்ளது.


இணையம் என்பது மக்கள் தொடர்புக்கு எவ்வளவு தூரம் உதவுகிறதோ, அதேபோல மோசமான விஷயங்களுக்கும் வதந்திகளுக்கும் உதவுகிறது. தற்போது இந்த இனவாத வெறி இணையம் வழியாக அமெரிக்கா, ரஷ்யா, கனடா என பரவி வருகிறது.

இதற்கான தொடக்கம் 1940 ஆம் ஆண்டு நடந்தது. அக்கால கட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பாவில் பாசிஸ்டுகளும் நியோ நாஜிக்களும் வெள்ளை இனவாத கருத்துக்காக போராடினர்.


கிறிஸ்ட்சர்ச் தாக்குதலை நடத்திய டாரன்ட், பின்பற்றிய வழிமுறை ஆங்கிலேயரான ஆஸ்வால்ட் மோஸ்லே என்வரின் கருத்தாக்கத்தை ஒத்தது.  இவர் பயன்படுத்திய ஐரோப்பியர்கள் என்ற சொல்லாக்கம், 1940 ஆம் ஆண்டு அமெரிக்கரான நியோ நாஜியான ஃபிரான்சிஸ் பார்க்கர் யாக்கி என்பவர் உருவாக்கியது.

1972 ஆம் ஆண்டு வெள்ளை இனப்படுகொலை என்ற வார்த்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பிரபலமானது. இதனை ரினாட் காமஸ் என்ற எழுத்தாளர் பிரபலப்படுத்தினார்.


வெள்ளையர்களின் இனவெறிக் கருத்துக்களை இணைக்க GAB, Stormfront என்ற வலைத் தளங்கள் பயன்படுகின்றன. ஏன் இந்த திடீர் பயம்? அகதிகளின் எண்ணிக்கையால் வெள்ளையர்களின் அரசியல், பொருளாதார அதிகாரம் கையைவிட்டு போய்விடுமோ என்ற பயம்தான் பெருகிவரும் வன்முறைத் தாக்குதல்களுக்கு காரணம்.


வெள்ளை இனவெறியர்கள் அனைவரும் ஒன்றுபோலவே இருப்பதில்லை. இவர்களில் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள், யூதர்களுக்கு எதிரானவர்கள், முதலாளித்துவவாதிகள், சோசலிசவாதிகள் என பல்வேறு பிளவுகள் உண்டு. ஆனால் இவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரே புள்ளி, அகதிகள் நமக்கு எதிர்கள் என்ற கருத்துதான்.


நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்











பிரபலமான இடுகைகள்