இயக்குநர் ஏஞ்சலோ பவுலோஸ் நேர்காணல்

ஏஞ்சலோ பவுலோஸ் நாம் அதனை அரசியலுக்கான உருவகம் என்று கருதலாமா? அரசியல் விஷயங்களுக்கான விளக்கம் கருத்துகள் அனைத்து இடங்களிலும் உள்ளது. ஆனால் அதனை அதிகம் செய்துவிடக் கூடாது. இந்தக்கோணத்தில் வயதான மனிதர் ரஷ்யனாக அல்லது கிரீக் ஆக இறக்கிறார் என்பதல்ல. அவர் எந்த மொழியினைப் பயன்படுத்தி இருந்தாலும் வார்த்தைகள் ஒன்றுதான் அழுகிய ஆப்பிள்தான் அது. படப்பிடிப்புக்கான இடங்களைக் காண ஒர வீட்டிற்குள் சென்றபோது இந்த விஷயம் விபத்தாக எனது மூளையில் பளிச்சிட்டது. யாரோ ஒருவர் தளத்தில் தவறவிட்டுப் போன ஆப்பிள்கள் மெல்ல கெட்டுப்போகத் தொடங்கி இருந்தன. அந்த வாசனை ஆற்றல் கொண்டதாக, இணக்கமானதாக, வெம்மை கொண்டதாக மனித வாசனையாக இருந்தது. கவிதைப் பொருளின் தத்துவமாக சாரச்சுருக்கமாக படம் முழுவதும் பரவியிருக்கிறது. சிதெராவிற்குப் பயணம் என்பதில் படத்திற்குப் படம் என்பதாக இயக்குநரும் நாடு கடத்தப்பட்டவர் போல தன் வீட்டிற்குத் திரும்பி 32 ஆண்டுகளாக இல்லாத தன் நாட்டினை திரும்ப அறிவதாகக் கொள்ளும் இது பல்வேறு தன்மைகளைக் கொண்டுள்ளது. ஒருவரின் அடையாளத்தை உடல்ரீதியாக அல்லது உணர்வுரீதியாக அல்லது அடையாளமாக கண்