இயக்குநர் ஏஞ்சலோ பைலோஸ் நேர்காணல்
இயக்குநர் ஏஞ்சலோ பைலோஸ் நேர்காணல்
தக்காளிகளை
வளர்ப்பது
ஜிடியன்
பாச்மன் – 1984
தங்களுடைய
வேலையில் நேர்த்தியான வடிவமைப்புக்கும் அதன் உள்ளடக்கத்திற்குமான முரண்பாடுகள்,
போராட்டங்கள் சில சமயங்களில் எதிர்கொண்டிருக்கிறீர்களா? இது குறித்து நீங்கள் கூற
விரும்புவது என்ன?
அவை
பற்றி நான் சிந்தித்ததே இல்லை. பித்து பிடித்தது போல் நேர்த்தி தேவை என்று விரும்பும் ஒருவர்
அதனைச்செய்ய கடும் முயற்சியையும், உழைப்பையும் அதை ஈடுசெய்ய கொடுக்கவேண்டும். நான்
இவை தேவைப்படும் இடங்களாக, படப்பிடிப்பிற்கான இடங்கள், அரங்குகள், படப்பிடிப்பு
நேரங்கள் போன்றவற்றைக் கூறுவேன். ஒளிப்பதிவாளர் இதிலுள்ள சிக்கல்களை
குறைத்துவிடுகிறார் என்பதால் பிரச்சனையில்லை. இறுதியில் அவை மிக எளிதாக மூச்சினை
உள்ளிழுப்பது போலாகிவிடும். நீங்கள் கூறுவது போலான தருணங்கள் மிகவும் அரிதானதே.
ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சிதெராவிற்கு பயணம் படத்தில் மூன்று தொடர்ந்த
காட்சிகள் முதியவர் நடனமாடுவதைக் காட்டுவது போல் இருக்கும். அது ஒரு மயானத்தில்
எடுக்கப்பட்டது. மூன்று காட்சிகளும் ஒரு கோணத்தில் அமைந்திருக்கும். முதலாவது
நடனம் தொட்ங்குவதையும், இரண்டாவது, நடனத்தின் தொடர்ச்சியாகவும், அந்த சூழலையும்,
சுற்றி இருப்பதைக் காட்டுவதாகவும், மூன்றாவதில் மகன் வந்து ‘‘ நீ வீட்டினை
திறப்பதற்காக ஒரு பெண் உனக்காக வாசலில் காத்திருக்கிறாள்‘‘ என்று கூறுவான்.
மூன்றாவது காட்சி தொலைவை அழுத்தமாக்கி சிறிது விலகலாக மாறி காட்டும். எனக்கு
இந்தக் காட்சிகளில் சில சிக்கல்கள் இருந்தாலும் இறுதியில் இவற்றை ஏற்றுக்கொண்டேன்.
ஒளிக்கு எதிராக அமைந்த தொடர்ச்சியான காட்சிகளாகும். ஒளிக்கு எதிராக அமைந்த
காட்சிகள் மனதினால் உணரும் தனி அழகினைக் கொண்டுள்ளன. இது பெர்க்மனின் ‘ ஏழாவது
அடையாளம்‘ படத்தில் கூட நீங்கள் காணமுடியும்.
... அல்லது பூமியில் படத்தின் இயக்குநர் டொவ்சென்கோ
நிலவொளிக்கு எதிராக அமைத்த நடனக்காட்சி உள்ளது.
மிகச்சரியே.
கேள்வி என்னவென்றால் அத்தரத்தினை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது மறுத்து
புறக்கணிக்கிறீர்களா என்பதுதான். இறுதியில் நான் அதை ஒப்புக்கொண்டேன. குறிப்பாக
இரண்டாவது காட்சியில் கதாபாத்திரத்தை ஆகாயத்தோடு சில வழிகளில் தொடர்புடையதாக காட்ட
நினைத்தபோது பின்புற ஒளியமைப்பு பெரிதும் பயன்பட்டது.
காட்சிரீதியான
பிம்பங்கள் எந்த வகையில் உள்ளடக்கத்தினை மட்டுமே குறிக்கிறது? அடையாளக்குறியீடு
போல ? திரைமொழியில் நீங்கள் பேசும்போது பார்வையாளர்கள் அதைப் புரிந்துகொள்ள
முடியுமா?
இந்தப்பிரச்சனைக்கு
தீர்வு இருக்கிறதா என்று தெரியவில்லை. குறிப்பிட்ட வகை திரைப்படங்களை நான்
உருவாக்குகிறேன் என்றால் அதற்கேற்ப மொழி கொண்டிருக்கும் உள்ளடக்கம் குறித்த
ஆராய்ச்சியில் தேடுதலுடன் நான் ஈடுபட்டால் மட்டுமே அக்காட்சியில் பார்வையாளர்கள்
ஒரு முடிவிற்கு வரமுடியும். பார்வையாளர்கள் சிறிது சிரமத்துடன்தான் இதைச்
செய்யமுடியும். இது நாம் தரும் அளவு எவ்வளவு என்பதைப் பொறுத்தது.
பார்வையாளர்களுக்கு எனது படம் குறித்து விளக்கம் அளிக்க விருப்பமாக இருக்கிறேன்
மேலும் இரண்டாவது மூன்றாவது நிலைகளாக அவற்றை நான் உருவாக்குகிற போது மேம்பட்ட
தன்மை கொண்ட தீவிர பார்வையாளர்களை நான் காணமுடிகிறது. முதல் நிலை பார்வையாளர்கள்
படத்தினை அறிவது என்பதை இவர்களோடு ஒப்பிடும்போது எளிதானதாகவே இருக்கிறது.
குறைந்தபட்சம் நான் என்ன கூற விரும்புகிறேன் என்பதையாவது புரிந்துகொள்வார்கள்;
ஆனால் இம்முயற்சியில் எந்த அளவு வெற்றிபெற்றேன் என்பது என் முன் இன்னும் ஒரு
கேள்விக்குறியாகவே நிற்கிறது.
என்னால்
கணினி போல் செயலாற்ற முடியாது மேலும் அனைத்தையும் திட்டமிட முடியாது. மிகவும்
நுட்பமான சிக்கலான தகவல்களைக் கொண்ட படங்களை உருவாக்கும் அவற்றை நம்பும்
இயக்குநர்களின் குணத்தோடு, நான் ஒன்றிணையவில்லை. என் இயல்பு இதனை கேள்வி
கேட்கிறது. பார்வையாளர்களின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயக்குநர்
இம்முறையில் திட்டமிட முடியும். சிறிது நகைச்சுவை, சிறிது உணர்ச்சிகரம் என
பக்குவமாக சரியான மின்னணு கலவையாக இதனை உருவாக்கி கணக்கிட்டு அதனை படமாக சரியோ,
தவறோ உருவாக்கிவிட முடியும். இது பற்றி நான் சிந்திக்கவே இல்லை. எ.கா. ஃபெலினியின்
படங்கள் இது போலத்தான் இருக்கும்.
மீண்டும்
சினிமாவுக்குள் நீங்கள் நுழைவதற்கான கேள்வியாக இது இருக்கலாம். அதிக அளவு பணம்
செல்வு செய்து அதை பெரும்பான்மை மக்கள் பார்க்கவேண்டிய தேவை
திரைப்படத்திற்கிருக்கிறது. இந்த கலவையான ஊடகத்தில் வேலை செய்ய விரும்பாதவர்களும்
இருக்கிறார்கள். சிலர் என்ன கூறுகிறார்கள் என்றால் முதல்நிலை பார்வையாளர்கள்
அதைத்தாண்டி நகரவேண்டும் என்று கூறுகிறார்கள். சினிமா என்பதை சிந்தனைகளுக்கான
ஊடகம் என்று உறுதியாக நம்பி இயங்குகிற நீங்கள் இக்கேள்விக்கு ஆம் என்று கூட பதில்
பகிரலாம். உண்மையில் குறிப்பிட்ட வளர்ந்துவரும் மக்கள் தங்களின் உணர்வுநிலை
கருத்துநிலைக்கு வருவது காரணமாக இருக்கலாம். ஆனால் அப்படி நிறையப்பேர் இல்லை என்று
சில தருணங்களில் தாங்கள் வருந்துவது உண்டா?
அது
குறித்து நான் கவலைப்பட முடியாது. ஒவ்வொரு நாளும் புதிய தன்மையிலான மனிதர்கள்
பிறந்துகொண்டே இருக்கிறார்கள். அமெரிக்கத் திரைப்படங்கள் தானியங்காக பலரையும்
கவர்ந்து இழுக்க காரணம் அவர்களால் பெரும்பாலான மக்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது
என்பதால்தான். இவர்கள் தவிர மற்றக் குழுவினரான சினிமா பார்க்கும் மக்களும் ஒவ்வொரு
நாளும் உருவாகி வருகிறார்கள்.
தங்களின்
படங்கள் குறிப்பிட்ட மனிதர்களை மனதில் கொண்டு உருவாக்கியவையா?
ஏதேனும்
ஒருவரை; என்னுடைய படங்களை வாங்குபவர்கள் அதிகம் இல்லை. ஆனால் குறிப்பிடத்தக்கவராக
உள்ளார்கள் என்று கூறலாம். கலை என்பது மக்களோடு சில விஷயங்களை
பரிமாறிக்கொள்வதற்கான அழுகை அல்லது தவிப்பு என்பதைத் தாண்டி வேறு ஏதாவது
செய்யமுடியும் என்று நான் நம்பவில்லை.
தகவல்களை
பரிமாறிக்கொள்வதற்கான அழுகை அல்லது தவிப்பு என்பது கலைக்கு மிகச்சிறந்த அழகான
வரையறை என்று கூறலாம். பிறகு ஏன் இசை, ஓவியம், எழுத்து, பேச்சு ஆகியவற்றைத்
தேர்ந்து எடுக்காமல் அதிக செலவு பிடிக்கும் கலைவடிவத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
இந்தக்கேள்வியை
நானே சிலசமயங்களில் என்னைக் கேட்டுக்கொள்வேன். அநேக வேளைகளில் நான் திரைப்பட
பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது என்னை பெரும் புத்திசாலி போல
நினைத்துக்கொண்டிருந்தேன். அதை அப்படியே தொடர்ந்தேன். அப்படியே தொடர்ந்தும்
விட்டது.
வேறு
வார்த்தைகளில் கூறுவதென்றால் இதனை நீங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்று
கூறலாமா?
இல்லை.
மனிதனுக்கு உணவு வழியாக உள்ளிறங்கி உணரும் சுவை போன்றது. சினிமா ஒரு நோய் போன்றது.
இதனை ஒருவர் ஏற்றுக்கொள்ளாதபோது நல்லது. மிகவும் சிக்கலான தருணங்களை கடந்த
காலத்தில் கொண்டிருந்தேன். ஆனால் சினிமா மிகவும் வலிமையானது. ஒருவர் அது இல்லாமல்
வாழ முடியாது எனுமளவு. ஒன்றை வெளிப்படுத்துவதற்கான வழி மட்டுமல்ல; வாழ்க்கையின்
ஒரு வெளிப்பாட்டு வடிவம் அது.
புதிய படத்தில் அலெக்ஸாண்டரின் கதாபாத்திரம் வேறுபட்ட சுயத்தை உடையதாக
குறிப்பிட்ட நிலையில் ஏன் இருக்கிறது? அவருடைய அலுவலகத்தில் பயணிக்கும் வீரர்கள்
சுவரொட்டி ஒட்டபட்டுள்ளது. மேலும் என்னுடைய தன்மையில் முக்கியமான சிறந்த படங்களாக
நான் கருதும் திரைப்படங்கள் சுயசரிதைகளாகத்தான் உள்ளன. இதற்கு எ.கா உங்களுடையதும்,
ஃபெலினியுடையதும், தர்கோவ்ஸ்கியினுடையதும் என கூறமுடியும். மூன்று பேரில்
நீங்கள்தான் வெற்றிகரமாக இத்துறையை தன் வயப்படுத்தி இத்துறையில் இயங்குகிறீர்கள்
என்று நினைக்கிறேன். ஆனால் அலெக்ஸாண்டரின் கதாபாத்திரத்தில் சக்தி குறைந்துள்ளது
போல படுகிறது. அவரது வாழ்வின் உண்மையைக் கூறுவது போல மௌனம்
பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உங்களுக்கு நிகழ்ந்தவற்றோடு
தொடர்புள்ளவைதானா? 8 ½ என்பது தங்களுடைய கதைதானா?
ஆமாம். நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன். நம்பிக்கையற்ற தருணங்களை சில நேரங்களில் கடப்பது மிகவும் கடினமான ஒன்று.
திரைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கும் பல சமயங்களில் படத்தயாரிப்பை கைவிட்டுவிட
நினைத்திருக்கிறேன். மக்கள் தொடர்ந்து ஏன் திரைப்படத்தினை உருவாக்க
இவ்வளவு காலமாகிறது என்று கேட்கிறார்கள். இதற்கு நியாயமான பதில்கள்
இரண்டு உண்டு. முதலாவது, முக்கியமான நடிகருக்கு
உடல்நிலை சரியில்லாதபோது நாங்கள் அவருக்காக காத்திருப்பது. இரண்டாவது
காலநிலை மாறுபாடு. திரைப்படத்தினை உருவாக்குவதற்கான சூழல் என்பது
எப்போதும் சாதகமானதாக இருக்காது என்றாலும் அதிலிருந்து முன்னகர்ந்து உருவாக்கக் காரணம்
இது ஒரு அடையாளம் கூட. பிறகு படம் குறித்த கேள்விக்குறியோடு உற்சாகமாக
அதனை நிறைவு செய்ய முயற்சிப்பேன். தாமதத்திற்கு உண்மையான காரணம்
இதுதான். எனக்குள்ளாக பிரச்சனைகளைக் கொண்டு இருக்கிறேன்.
சினிமா உருவாக்குவது என்பது எனது தொழிலல்ல. திரைப்படத்தொழில்நுட்பம்
அறிந்தவனாக என்னை எப்போதும் உணர்ந்ததேயில்லை. வேறு வழிகளில் என்னால்
வாழ முடியும். பிறகு ஏன்? சிலரோடு பேச,
தொடர்பு கொள்ளவா? கேன்ஸ் விழாவிற்குச் செல்லவா?
பயணிக்கவா? இயக்குநரின் வாழ்க்கையை வாழ?
இல்லை. இவை எவையும் அல்ல. இப்படத்தின் தயாரிப்பின்போது எனது உள்ளே இதை நிறுத்திவிட்டு நாட்டிற்குச் சென்று
அமைதியாக எதையும் செய்யாது இரு என்று எனது அகம் கூறியது. இப்படம்
உருவாகி வந்த காலம் நான் தனிப்பட்ட வாழ்க்கையின் சிதைவுகளில் துயருற்றிருந்தேன்.
இப்போது எளிதாகக் கூறக்கூடியது – அனைவரும் என்னை
மன்னித்துவிடுங்கள் என்பதுதான். ஆனால் இப்படம் என்னோடு ஏதோவொன்றில்
இணைந்துவிட்டது.
படத்தின் பெரும் பலமாக நாம் நினைப்பது கூட அது தள்ளிப்போடுவதன்
காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் இல்லையா?
படத்தின்
சூழலின் ஏமாற்றங்களினால் கடுமையாக பாதிக்கப்படும் சூழலில் நான் வாழ்கிறேன். நாம்
அனைவரும் இதனைக் கடந்து வந்திருப்போம்தான். ஆனால் நான் இதனை மிகவும் முக்கியமானதாகக்
கருதுகிறேன். நான் அதிகமான முறை வலுவாக எதிர்கொண்ட அதிர்ச்சி இதுதான். எனவே அது
படத்தில் முக்கியமான பங்காற்றியுள்ளது.
பலரும் படத்தில் வரும் சிறு நடனம் தொடர்பான காட்சிக்கு அர்த்தம் தேடும்விதமாக கேட்கும் கேள்வியினை இதுவாகத்தான்
இருக்கும் என்று கருதிக்கேட்கிறேன். வாழ்விற்கான உறுதி, தொடர்ந்த நிலை என்று
அதனைப் புரிந்துகொள்ளலாமா?
சிறுவர்களின் விளையாட்டிலிருந்து
எடுக்கப்பட்டது அக்காட்சி. கருப்பு, வெள்ளைக் சதுரக் காய்கள் அதில் இருக்கும்.
நீங்கள் காய்களின் நகர்த்தலில் பிரிக்கப்படும் கட்டங்களில் பயணிப்பது மிக கடினமான
ஒன்று. இயலாது என்றும் கூறலாம்.
சிறுவயது நினைவுகளில்
உண்மையில் ஒருவருடனான உறவு குறித்ததில் அதன் சிதைவு குறித்தவை நன்றாக
பதிந்திருப்பதை நான் பார்க்கிறேன். நடனமானது அவனைச் சுற்றியுள்ள பெண் காதல் நாடகம்
மேலும் பலவற்றைத்தாண்டி உயிர்வாழ உதவுவதோடு அவனை சிறிது குளிர்வாக வைத்திருக்கிறது
இல்லையா?
படத்தினை உருவாக்குவதற்காக திட்டமிட்டு
தயாராகிற நேரத்தில் அவன் என்னிடம் விடைபெற்றுச்செல்ல முனைந்தான். அவன்
விலகிச்சென்ற தருணம் என்பது படத்திற்காக நாங்கள் கிளம்பிச்செல்லவேண்டிய நாள்தான்.
சிதெராவிற்கு பயணம் என்பது அவன் உருவாக்கவேண்டிய படம்தான். அது முதல் நிலை என்று
கூறலாம். ஆனால் நிலை இங்கு தெளிவாக உள்ளது. அவன் பயணத்தை செய்யாமல் விடை
கொடுத்தான் என்றால் அது சாத்தியமாகலாம். அவனது வீட்டிலுள்ள மனைவி,
அவனைச்சுற்றியுள்ளவர்கள் என அனைவருமே அவன்தான் எனலாம். அவனது பதில் கூறும்
கருவியில் அவன் விட்டுச்செல்லும் செய்தி ‘‘நான் சிதெராவிற்கு போகிறேன்’’ என்பதாக
இருக்கும்.
ஆனால் உறுதியாக நீங்கள் திரைப்படங்களை உருவாக்குகிறீர்கள்?
எனக்குள் உள்ள பேரார்வம் அடுத்த திரைப்படத்தை மிகவேகமாக உருவாக்க முனைகிறது. இப்போது செய்தது போல எப்போதுமே மிக மோசமான படத்தினை நான் உருவாக்கக் கூடாது என்று நினைக்கிறேன். இது ஒருவகையான தாராளமயமான விடுதலை என்று கூறலாம்.
இந்தப்படம் குறித்து சில கேள்விகள் எனக்குள்ளது. இது மெகாலக்
சாண்ட்ரோஸ். தி ஹண்டர்ஸ் போன்ற படங்களை ஒத்ததல்ல. இந்த இரண்டிலும் உள்
முரண்பாடுகளை ஆன்மா தன்னில் சந்திப்பது போல் உள்ளது. சிதெராவிற்குப் பயணம் எனும்
படத்திலும் கூட வயதான மனிதரை இறப்பிற்காக அனுப்புவதில் cosomol/nausica துணையாக வருகிறதா?
அலெக்ஸாண்டர் இரு
வயதான மனிதர்களை தொலைவிற்கு அனுப்புவது என்பது ஒரு தாராளமான தன்மையைக்
குறிக்கிறது. தொப்புள்கொடியை அறுப்பது போல என்று கூறலாம்.
இறக்க அவர்களை
அனுப்புவது என்பது இறப்பிலிருந்து அவர்களை விடுவிப்பது போன்ற கம்யூனிச சிந்தனையின்
விளைவா?
இதனை மிகவும் எளிமையாக
ஒரு விஷயச்சுருக்கம் என்று குறிப்பிடலாம். வரலாற்றுக் கட்டம் முழுக்க நாடகம் போல
உண்மைகளை வெளிப்படுத்துகின்ற காலம் என்று கூறலாம். நான் முன்னரே கூறியுள்ளதுபோல
உண்மைகளை அறியத்தருகிற காலம் அது. மாயைகள் தொலைந்து போகின்றன. என்னைப்
பொறுத்தவரையில் இப்படத்தில் அவன் இறுதியில் தெளிவடைகிறான். அடையாளம் குறித்த
சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அவன் தன்னைத்தானே கண்டடைகிறான். இறுதியில் அவன்
தெளிவாகிறான்.