நேர்காணல்: உலர்ந்த ஆப்பிள்: சிதெராவிற்கு பயணம் -

உலர்ந்த ஆப்பிள்: சிதெராவிற்கு பயணம்
மிட்செல் குரோடன்ட் / 1985

தமிழில்  லாய்ட்டர் லூன்
















நன்றி கூறத் தொடங்கும் காட்சியில் தொடங்குவோம். இது ஒரு புராணம் போலான மாயை கோணம் என்று கூறலாமா?

அக்காட்சி என்னைப் பொறுத்தவரையில் இசையோடு சேர்த்து கனவுலகிற்கு அழைத்துச் சென்று வெளிப்புறமாக அதனைக் காணச்செய்வது போலத்தான். கனவுபோல் விரியும் காட்சியின் காரணம் அது தன்னுள் முக்கியமான கருவைக் கொண்டுள்ளது என்று கூறலாம். பின் தொடரும் காட்சி சிறுவன் வேறொரு கிரகத்தில் இறங்குவது போல அமைந்திருக்கும். உண்மையைக் கூறவேண்டுமெனில் உங்களுக்கு இக்காட்சி பற்றிய சரியான காரணத்தை தூண்டுதலை என்னால் விளக்கி கூறமுடியவில்லை. அம்முறையில் செய்ததன் காரணம் அது எனக்கு பிடித்திருந்தது. அதற்கான தீர்க்கமான தர்க்கரீதியான காரணங்கள் எதையும் என்னால் இதற்காக கூறமுடியவில்லை.

சிறுவனும் ஜெர்மன் படைவீரரும் வரும் பகுதி என்பது சிறுவயது நினைவுகளா?

ஆமாம், இது மிகத்தெளிவாக நினைவுகள் என்று குறிப்பிடும்படி எடுக்கப்பட்டு இயக்குநரின் குரல் ஒலிக்கும். அந்தக்காட்சியின் இறுதியில் சிறுவனுக்கு விதிகள் கூறப்படும். கேமரா ஜன்னலின் வழியே நகரத்தின் பரந்த விரிவான பரப்பை காட்டும். ஒரு மனிதன் விழித்தெழுவான், சிறுவன் அவன் பெயர் அலெக்ஸாண்டர்; கனவுக்காட்சியில் அவனுடைய பெயர் ஸ்பைரோஸ் என்றிருக்கும். பின்னர்தான் கண்டறிந்தோம் அப்பெயர் அவனுடைய தாத்தாவின் பெயர் என்று . நாயகனான அவனின் சிறுவயதை இயக்கநராக புனைவாக சரியாக வெளிப்படுத்த விரும்பினேன். திரைப்படத்தில் ஒரே பெயர் பயன்படுத்தப்படுவது இருவேறு அடையாளங்களை குறித்தது என்பதை பார்வையாளர்கள் முன்னாலேயே உணர்ந்துகொள்ள முடியும்.

படத்தில் முக்கியமான தீம் இசை வெகு முன்னதாகவே அறிமுகம் செய்யப்பட்டு விடுகிறதே?

உண்மைதான் பட இயக்குநர் தன் ஸ்டூடியோ சென்று வானொலியை உயிர்ப்பிக்கிறார். நாம் கான்சர்ட்டோ கிராலே போல் விவால்தியைக் கேட்கிறோம். இந்த இசையானது தொடர்ந்து ஒலித்து, ஒலித்து விரைவிலேயே முதியவர் ஒருவருக்கான இசையுடன் கலந்துவிடுகிறது. இறுதியில் அந்த இரு கருத்து இசைத்துண்டுகளும்  வயதான முதியவர் வாசிக்கும் வயலின் கருவியில் இசைக்கப்படுகிறது. அது ஒரு வயதான பெண்மணிக்கான காதல் அழைப்பு. படத்திற்குள் வரும் படம் என்பதில் மட்டுமல்ல. நிஜ வாழ்விலும் கூடத்தான்.

ஏதேன்ஸில் பதிப்பிக்கப்பட்ட தங்களுடைய திரைக்கதை நூலை வாசித்தேன். அப்பிரதியில் முதியவரின் மனைவி இயக்குநரின் அம்மாவோடு பெருமளவு ஒத்திருக்கிறாள். ஆனால் படத்தின் திரைக்கதைக்கும் அதற்கும் வேறுபாடு உள்ளது. அலெக்ஸாண்டர் நள்ளிரவில் ஏதோ தெருவில் கேட்கும் சத்தம் கேட்டு எழுகிறான். அவன் தெருவில் இறங்கி நடக்கும் போது ஜன்னலில் இருந்து நிர்வாணமான மனிதன் குதிக்கிறான். அவனது கைகள் பெரும் கடற்பறவை போல இருக்கின்றன. ஏன் இந்தக் காட்சிகளை வெட்டிவிட்டீர்கள்?

அந்தக் காட்சியை எடுத்துவிட்டு பின்னர் அதனை பயன்படுத்தாதற்கு காரணம் படத்தில் உள்ள இரு புனைவுகளை சமநிலைப்படுத்த வேண்டியதினால்தான். படத்தில் பெயர் முதற் கொண்டு படமே நாயகனுக்கு என உருவாகியிருந்தது. இயக்குநர் பக்கமிருந்த கதை முதியவரின் நிழல் குறித்த கதை. வேறு ஏதாவது விதத்தில் குறிப்பிட்ட காட்சி தொடர்ந்து வருமானால் உண்மையான அகத்தூண்டல் மற்றும் சரியான சமநிலைக்கான தேடுதல் ஆகியவற்றை மீறிச்சென்று விடும்.

இயக்குநராக உள்ள அலெக்ஸாண்டர் அவனைச்சுற்றியுள்ள மனிதர்களை தனது புனைவில் மாற்றியமைக்கிறான். இது படைப்புத்திறன் எனும் கலையில் முதல் மற்றும் முழுமையானது என்று கூறுகிறீர்களா?

யதார்த்தம் மற்றும் புனைவு எனும் இரண்டிற்கும் இடையிலான அழகான நம்பிக்கையற்ற ஒரு முயற்சியாக இணக்கம் பெறும் தருணங்களை கூற முடியும். இதனால்தான் இங்கு இசைக்கு முக்கியமான ஒரு பங்கு இருக்கிறது. இசை இந்தப்படத்தில் ஒரு சூழலைத் தொடங்குவதற்கு மட்டுமல்ல, படத்தின் அடிப்படை கட்டுமானமாகவும் இருக்கிறது.

பயணிக்கும் வீரர்கள், வகுப்பு போராட்டம் ஆகியவற்றினிடையே பாடல்களிடையே ஒத்த விஷயங்கள் உண்டு. இங்கு இளைஞன் ஒருவனின் கதை எதிரே வயதான முதியவரின் கதை உள்ளது இல்லையா?

நான் அவர்களிருவரும் எதிரானவர்கள் என்று கூறவில்லை. அவர்கள் வேறுபட்டவர்கள். ஆமாம், அவ்வளவேதான். அவர்கள் பொருந்தக்கூடியவர்கள் முன்பு கூறியது போல இறுதியில் ஒன்றிணைகிறார்கள்.

சிதெராவிற்கு பயணம் படத்தினை உளவியல்பூர்வமாக அணுகும்போது வயதான முதியவராக நடித்த கட்ராகிஸ் ஒரு தூய்மையான தந்தை என்று கூறலாமா?

என்னுடைய முந்தைய படங்களான மறுகட்டமைப்பு அல்லது பயணிக்கும் வீரர்கள் ஆகியவற்றை விட இந்த ஒன்று உயிர்ப்பானது என்று கருதுகிறேன். அவரது மகன், இயக்குநர் தூய்மையான அவரது பிம்பம் மற்ற கதாபாத்திரங்களிடையே அதிக தூரம் கொண்டுள்ளது. இரு மாறுபட்ட தன்மைகள் ஒன்றாக தந்தை கதாபாத்திரத்தில் பயணித்து அது கடந்த காலம் தனிப்பட்ட வரலாறு (அ) வேறுவிதமான செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது. நீங்கள் இதனை அழிக்கலாம் அல்லது கொன்றுவிடலாம் அல்லது அதன் தூய்மைத்தன்மையை உயர்ந்த தன்மைக்கு கொண்டு செல்லலாம். இந்த தன்மையில்தான் முதிய தம்பதிகள் இளைஞனுக்கு தன் பயணத்தை பூர்த்தி செய்வதற்கான கதவைத்திறந்து வைக்கின்றனர் என்பதை படம் முழுவதும் நீங்கள் காணமுடியும்.

திரைப்படம் சரியாக தருகிற விளக்கம் என்பதை கடந்த காலத்தை தூய்மைப்படுத்துகிறது, அல்லது அதை விலக்குகிறது என்று கொள்ளலாமா?

கடந்த காலத்தை தூய்மை செய்வதோடு அதில் ஒரு அமைதியையும் உருவாக்குகிறது. இது கிரீக் பார்வையாளர்களுக்கு இறந்த கால அதிர்ச்சிகளுக்கு ஆட்படாமல் எதிர்காலத்தை பார்க்க இயலும் வாய்ப்பைத் தருகிறது.

பட இயக்குநராக உள்ள அலெக்ஸாண்டர் தன் கதாபாத்திரங்களை தேடுகின்ற ஒரு வெளித்தெரியும் எழுத்தாளரும் கூட. எ.கா முதியவருக்கான திரைத்தேர்வில் கலந்துகொள்ளும் ஒரு காலகட்டத்தில் புகழ்பெற்றவர்களாக இருந்த நடிகர்கள் இன்று திரையில் கேமராவின் முன்நின்று ‘ஈகோ இமே ‘ இது நான்தான் என்று தொடர்ந்து கூறுவது பரிகசிக்கும்படி இருக்கிறதே?

நிஜமா அல்லது கனவா என்று தெளிவாக தீர்மானிக்க முடியாத மற்றொரு காட்சி என்று இதனைக் கூறலாம். பல பொருள்களைத் தரும் இக்காட்சியின் பொருளை என்னவென்று பார்வையாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

‘ஈகோ இமே ‘ எனும் இரு வார்த்தைகள் படத்தில் பலமுறை தொடர்ச்சியாக திரும்பத்திரும்ப வருகிறது. முதலில் முதியவர்  ரஷ்ய கப்பலிலிருந்து வந்த பிறகு மீண்டும் ஒருமுறை, கிராமத்தில் அவருடைய மனைவி வீட்டில் தன்னைத்தானே பூட்டிக்கொண்டுவிட்ட அவரைக் கண்டுபிடிக்கும்போது என நீள்கிறது. இது மந்திர உச்சாடனம் போல் உள்ளதே?


அல்லது மந்திர பிரார்த்தனை என்று கூட கொள்ளலாமே! ஏன் கூடாது?

பிரபலமான இடுகைகள்