தியோ ஏஞ்சலோ பைலோஸ் நேர்காணல் அத்தியாயத்தின் இறுதிப்பகுதி
ஏன் அவனை நீங்கள் தனிமைப்படுத்தி விரிவாக்குகிறீர்கள்? இன்னொருவரின்
ஆதரவை அவருக்கு ஏன் தரவில்லை?
காரணம் என்னவென்றால் அவன் தன்னுடைய
பிரச்சினைகளுக்கான தீர்வை அவனே கண்டறியவேண்டும் என்பதுதான். அதுதான் அவனுக்கு
இருக்கும் ஒரே வாய்ப்பு. யாரும், எதுவும் இதில் அவனுக்கு உதவ முடியாது.
வெளியிலிருந்து எதுவும் காதல் உட்பட அவனுக்கு உதவ முடியாது. இது அவனுக்கான ஒரு தனித்துவ
உயிர்வாழ்வதற்கான துண்டித்துக்கொண்டு தப்பிக்கும் முயற்சி எனலாம்.
ஆனால் நீங்கள்
தொடர்பிற்கான நம்பிக்கையற்ற அழுகை என்பதைப் பற்றி கூறினீர்கள். நான் இந்த தத்துவத்தை
ஒருவர் எதுவும் இல்லாது இருந்தால், அல்லது அவரில்லாத போது யாரும தராமல் இருப்பது
என்பது என்று நிகழ்வுகளைப் புரிந்துகொள்கிறேன். என் உள்ளுணர்வு ஒருவருக்கானது
என்பதினை இன்னொருவரோடு தொடர்பு கொண்டு இருக்கிறார் என்று கருதுகிறேன். அல்லது
ஒருவரினும் அதிகமாக ஒருவர் நிச்சயம் அதனைச் செய்யக்கூடும். சரியான ஒரு மனிதர்
இருந்தால் கூட கடவுள் உலகினை அழிக்கமாட்டார். எனவே தனிமை என்பது கிடையவே கிடையாது.
எப்படி அவர்கள் தொடர்பு கொண்டு உணர்வார்கள்? மேலும் நாம் பழங்கால மிருகங்கள்தானே?
பிரச்சனைகளை ஒவ்வொரு
மனிதனும் தானாகவே தீர்த்துக் கொள்ளவேண்டும். அறிவுப்பூர்வமான சிந்தனையில்
யாருக்காக என்பதை விட புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகிறது. உங்களை நீங்கள்
புரிந்துகொள்ளவேண்டும். தொடர்பு பொறுத்தவரையில் குறைந்தபட்சம் இருவர்
தேவைப்படுகின்றனர். ஒன்றை மக்கள் உருவாக்குகிறபோது அவர்களுக்கிடையில் என்ன
நிகழ்கிறது?
சிதெராவிற்கு பயணம் படத்தில் அலெக்ஸாண்டர் அவனால் யாருடனும் தொடர்பு
கொள்ள முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறானே?
படத்தின்
இறுதியில் படம் முடிந்துவிட்டது என்று கூறவில்லை என்பதை நீங்கள் நினைவில்
கொள்ளவேண்டும். இந்தப்படங்கள் தொடர்ந்து ஏதாவது கூறிக்கொண்டு செல்வதாகவே
நினைக்கிறேன். பெலினி, அன்டோனியோனி படங்களை ஒத்தது; ஏனெனில் அவையும் முடிவுறுவதே இல்லை. இவை
படங்களை காண்போருக்கு பல்வேறு காட்சி பிம்பங்களை தருகிறது. ஆனால் இவை எங்கு சென்று
முடிகிறது என்பதை கூற முடியாது. அலெக்ஸாண்டர் அடுத்து என்ன செய்வான் என்று
எனக்குத் தெரியாது.
ஒன்றை
மறுத்தல் என்பதான உணர்வுகள் படத்தில் வேறுபட்ட பயணத்தை தொடங்குகிறது. பயணம்
தொடங்குவது குறித்து அனைவரும் அதனளவில் அறிவார்கள். இது உண்மையில் சிதெராவிற்கு
பயணம் என்று கூறுவதை விட சிதெராவிற்கான பயணத்தை உருவாக்குவது என்று கொள்ளலாம்.
இதில் ஒரு முரண்பாடு உள்ளது. சிலர் தங்களின் படங்களை கேள்விப்பட்டு,
அவற்றினை வாங்கி பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரென்று நீங்கள் அறிய
மாட்டீர்கள். படமானது நம்பிக்கையினைத் தாங்கி நிற்கிறது என்று கூறலாமா?
உங்களுக்கு அவை முற்றிலும் முரணானவையாக
இருந்திருக்க கூடும். உத்தரவிடும் பொறுப்பில் நகரத்திலிருந்து நகரமாக கிரீஸ்
முழுக்க மாணவர்கள் சினிமா சங்கங்கள் பெரும் நகரங்களிலிருந்து சிறு கிராமங்கள் வரை
படத்தினை திரையிட்டு அது குறித்து கருத்துகளை விவாதித்தோம். மறுகட்டமைப்பு,
36 நாட்கள், பயணிக்கும் வீரர்கள் ஆகிய திரைப்படங்களுக்கு செய்தேன். வேட்டைக்காரர்கள்
படத்திற்குத்தான் இதுபோல கடைசியாக செயல்பட்டது. இன்றைய நாட்களில் அதுபோன்ற செயல்களைச்
செய்ய நான் விரும்பவில்லை. உத்தரவிடும் பொறுப்பில் இது மிகவும் பயன்படுவதாகவும், தேவையாகவும்
இருந்தது. சினிமாவில் பொதுவாக சாத்தியமாகக்கூடியவை உண்மையான தொடர்பு என்பதற்கு வெகு தொலைவில் இருந்தது. எனது படங்களை பார்க்கும் ரசிகர்களை நான்
அறிவேன். படம் என்பது கருவைத் தாங்கி நிற்கும் பிரதியல்ல அது ஒரு வாகனம் போன்றது.
சிதெராவிற்கு பயணம் படத்தில் அலெக்ஸாண்டரின் தாராளதனத்தை உணர்த்தும்
விதமாக மற்றொரு திரைப்படத்தை எடுக்க
ஆவலுற்று இருக்கிறீர்களா? உண்மையில் அவர் உணரும் உணர்ச்சிகளை கூறுவது குறித்து
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
முதல்பகுதி கேள்விக்கு பதில் உறுதியாக
ஆமாம் எனலாம். இரண்டாவது பகுதிக்கான பதில் தொடர்ந்து கண்டு பிடிக்க முயற்சி
செய்துகொண்டு இருக்கிறேன். வேதனை தோன்றாது கண்டுபிடிக்க முயலும் இம்முயற்சிதான்
இன்றுவரை என்னை கம்பீரமாக நடைபோட வைக்கிறது.
மிகச்சரியாக எனது உணர்வும் அதுதான். சிறிய நடனத்தை அவன் ஆடுவது
குறித்து முன்பே விவாதித்திருக்கிறோம். இது மற்றொரு படத்தில் தொடக்கத்தில்
வருகிறது. இன்னொரு வாழ்க்கை என்று அதனைக் கூறலாம். இன்றைக்கு முன்னர் உங்களைக்
குறித்து உங்களுக்கு மனைவி இருப்பது,நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், எங்கே இருக்கிறீர்கள்? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் படமானது
வாழ்வின் மிகச் சிறந்த மகிழ்ச்சி குறித்த உணர்வினைத் தருகிறது. இயற்கையுடனான
நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்துகிறது எனக்கு தெரிய வில்லை பூனைகள் ஒருவேளை....
உண்மையில் நான்
இப்போது தக்காளிகளை வளர்க்கத் தொடங்கியுள்ளேன்.