இயக்குநர் ஏஞ்சலோ பவுலோஸ் நேர்காணல்





ஏஞ்சலோ பவுலோஸ்



நாம் அதனை அரசியலுக்கான உருவகம் என்று கருதலாமா?

அரசியல் விஷயங்களுக்கான விளக்கம் கருத்துகள் அனைத்து இடங்களிலும் உள்ளது. ஆனால் அதனை அதிகம் செய்துவிடக் கூடாது. இந்தக்கோணத்தில் வயதான மனிதர் ரஷ்யனாக அல்லது கிரீக் ஆக இறக்கிறார் என்பதல்ல. அவர் எந்த மொழியினைப் பயன்படுத்தி இருந்தாலும் வார்த்தைகள் ஒன்றுதான் அழுகிய ஆப்பிள்தான் அது. படப்பிடிப்புக்கான இடங்களைக் காண ஒர வீட்டிற்குள் சென்றபோது இந்த விஷயம் விபத்தாக எனது மூளையில் பளிச்சிட்டது. யாரோ ஒருவர் தளத்தில் தவறவிட்டுப் போன ஆப்பிள்கள் மெல்ல கெட்டுப்போகத் தொடங்கி இருந்தன. அந்த வாசனை ஆற்றல் கொண்டதாக, இணக்கமானதாக, வெம்மை கொண்டதாக மனித வாசனையாக இருந்தது. கவிதைப் பொருளின் தத்துவமாக சாரச்சுருக்கமாக படம் முழுவதும் பரவியிருக்கிறது.

சிதெராவிற்குப் பயணம் என்பதில் படத்திற்குப் படம் என்பதாக இயக்குநரும் நாடு கடத்தப்பட்டவர் போல தன் வீட்டிற்குத் திரும்பி 32 ஆண்டுகளாக இல்லாத தன் நாட்டினை திரும்ப அறிவதாகக் கொள்ளும் இது பல்வேறு தன்மைகளைக் கொண்டுள்ளது. ஒருவரின் அடையாளத்தை உடல்ரீதியாக அல்லது உணர்வுரீதியாக அல்லது அடையாளமாக கண்டறிவது என்பது சிக்கலானதும் கூட. ஜார்ஜ் செஃபேரிஸ் (கிரீக் கவிஞர், எழுத்தாளர், 1963 இல் இலக்கிய நோபல் பரிசு வென்றவர்) கூட இந்தக் கருத்து குறித்து எழுதியிருக்கிறார்.

நமது கலாச்சார மரபில் நினைவுகள் என்பது ஒரு பகுதி. ஹோமர் முன்பே வீட்டிற்கு பயணம் _ நாஸ்டிமன் இமர் என்ற நூலினை பரிந்துரைத்துள்ளார். சில காரணங்களால் கிரீக் மக்கள் நாடோடிகளாக இருந்தவர்கள்தான். கிரீக் மக்கள் இயல்பாகவே பயணித்துக்கொண்டே இருக்கிறவர்கள். அவர்கள் எங்கே போய் இறங்கினாலும் அங்கே தங்களுக்கான பகுதியை அமைத்துக்கொண்டு விடுவார்கள். இந்த பழைய கதை, வயதான மனிதனின் பாத்திர சித்தரிப்பில் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

வயதான மனிதன் அனைத்து கிரீக் மக்களும் நாடு திரும்புவதை குறிக்கிறார். வேறு நாட்டிலிருந்து இங்கு வருபவர்கள், அரசியல்ரீதியான நாடு கடத்தப்பட்டவர்களையுமா?

மிகச்சரியாக. ஸ்பைரோஸ் ஆஸ்திரேலியாவில் இருந்து 40 ஆண்டுகளுக்குப்பிறகு தன் தாய்நாடு திரும்புகிறான். அவன் புரட்சிக்காரனாக கம்யூனிசவாதிகளின் தரப்பிலிருந்து குடிமைப்போதை நடத்தும் பிரிவில் இருந்து போரிட்டவன். ஆனால் ஜெர்மனியில் வேலை செய்யும் கிரீக் மக்களோ அல்லது மற்றவர்களோ மிக எளிதாக ஸ்பைரோஸின் அனுபவங்களை அறிவதோடு பொருந்திச் செல்லமுடியும்.

கிரீக் பார்வையாளர்களுக்காக, பல பாடல்களை வெளிநாட்டில் இருப்பவர்களுக்கென இணைக்கப்பட்டுள்ளன. சிட்சானிஸ் ‘சான் அபோகிளிரோஸ் யிரிஸோ’ (துரதிர்ஷ்டசாலி போல திரும்பி வாருங்கள்) என்பதைப் பற்றிக்கூறுங்கள்?

முக்கியமான காட்சி இசையில் இருந்து ரெம்பெட்டிக்கோவை தாலரஸ் உருவாக்கினார். இது நாடோடி வாழ்க்கை, தனிமை, நினைவுகளை இழப்பது குறித்தவையாகும். இன்னொரு பாடலாக துறைமுகத்தில் பாடப்படுவது அதிக அரசியல் தன்மை கொண்டதாக இருக்கும். மக்களின் அடையாள சோதனையின்போது ஒலிக்கும் பாடல் அவர்களை கப்பல் பழுதுபார்க்கும் தொழிலாளர்களின் கொண்டாட்டத்தோடு அனைவரையும் ஒவ்வொருவரையும் இணையச் சொல்லி பாடப்படுவதாகும். அப்பாடல் அணைந்துபோன விளக்கு, கைவிடப்பட்டு சீர்குலைந்துபோன துருப்பிடித்த தொழிற்சாலை இயந்திரங்கள், வேலை நிறுத்தத்தை குலைக்க பயன்படுத்தப்படும் கருங்காலிகள் (நாங்கள் விட்டுத்தரமாட்டோம் – சாலைகளை, வெளிநாடு வாழ் மக்களை ) இதுபோன்ற கம்யூனிசப் பாடல்கள் பெரும் கொண்டாட்டங்களின் போது காதில் கேட்கும்.

தியோடோரக்சிஸ் ‘டு ட்ரெய்னோ பெவ்யி ஸ்டிஸ் ஆச்டோ’ (எட்டு மணிக்கு ரயில் கிளம்பும்) என்ற பாடலை நம்மால் மறக்கவே இயலாது...

ஆம். படத்தில் அவை காட்சிக்கான சூழலை சிறந்தமுறையில் உருவாக்குகின்றன.

கிரீசில் செனிடா வண்ணம் என்று அயல்நாட்டில் வாழ்பவர்களை குறிக்கிறார்கள். வயதான் மனிதர் புகழ்பெற்ற பாடலை ஒத்த சில வார்த்தைகளை கூறுகிறார். (முதல் ஆண்டு நல்லது, பிறகு இரண்டாவது, அடுத்து மூன்றாவது, மெல்ல தொலைவாக மிதந்து செல்கிறீர்கள், பிடித்துக்கொள்ள அங்கு ஏதுமில்லை முதலில் கிரீஸ் மற்றும் பலவும் மறைந்துபோகிறது... இறுதியில் நோயுறுகிறீர்கள் அதன் பிறகு ஒரு நாள் வெகுதூரத்திலுள்ள நிலப்பகுதி சார்ந்த பெண் உங்களது சட்டையின் பொத்தான்களை தைக்கிறாள். உங்களது துணிகளை துவைக்கிறாள்.. சூடான உணவை உங்களுக்குத் தருகிறாள். ) ‘பயணியே உனது லினன் துணியை நீ துவைத்துக்கொள் என்று பாடல் கூறுகிறது’ ...

உண்மையில் நாடு கடத்தப்பட்டவர்கள், ஆழ உள்ளுக்குள்ளும் நாட்டினை நினைக்கும் உரிமை பிடுங்கப்பட்டவர்கள் என்ற கருத்து உள்ளது. படத்தில் பழையகவிதை ஒன்றினை நான் முன்பு எழுதியிருந்தேன். அதை படத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் பயன்படுத்த முயன்றேன் ஆனால் அது முடியவில்லை. அது வேறு பல விஷயங்களையும் கூறுகிறது. நலமும் மகிழ்ச்சியும் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன் / ஆனால் உன் பணத்தோடு என்னால் இணைய முடியாது / நான் ஒரு விருந்தினனே / நான் தொடுபவை அனைத்தும் / உண்மையில் என்னை வருத்துகின்றன / இது என்னுடையதும் கூட அல்ல / எப்போதும் யாரேனும் கூறுவார்கள் / இது என்னுடையதென்று / எனக்கு என்னுடையதென ஏதுமில்லை.

ஒரு வெள்ளைக்கப்பல் பெரும் பறவை கடல்பரப்பில் பறக்கிறது (காட்சிக்கான குறிப்புகளை பயன்படுத்துவது) வயதான மனிதரை திரும்ப பிராகியஸ் பார்க்கிறோம். என்ன ஒரு அற்புதமான காட்சி. அந்தப் படகின் பெயர் உக்ரைன் என்று அமைந்தது எப்படி?

ஆமாம். ஆனால் நாங்கள் சோவியத் கப்பலான சமர்கண்டா எனும் கிரீஸ் அரசியல் அகதிகள் தங்கியிருந்த பகுதியின் பெயரைக் கொண்டிருந்ததில் காட்சிகளை படம்பிடிக்க திட்டமிட்டிருந்தோம். அதனைப் பயன்படுத்தாததின் காரணம் அதன் வருகை குறித்த விஷயங்கள்தான். எங்களது திட்டமிட்ட படப்பிடிப்பில் தற்செயல் என்று ஏதுமில்லை.


பிரபலமான இடுகைகள்