மின்னூல் வெளியீடு :மனதேசப் பாடல் – கட்டுரைகள்

மனதேசப் பாடல் – கட்டுரைகள்

heartsong

ஜேம்ஸ் பாம்பிரே, லாய்டர் லூன்

மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com

சென்னை

Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆக்கம்: ஜேம்ஸ் பாம்பிரேலாய்டர் லூன்
தொகுப்பு: அரசுகார்த்திக்கிறிஸ் டோல்ட்
வகை: குறுங்கட்டுரைகள்
ஆக்கத்தலைமை: ராஜா சம்மார், கார்த்திக் வால்மீகி, ரஞ்சன் மஹர்
பதிப்பாளர்: தி ஆரா பிரஸ், இந்தியா.
தட்டச்சுப்பணி: அச்சுதை, ரோஸலின் ஸ்ரைக்
புகைப்படம் உதவி: பின்ட்ரெஸ்ட் இணையதளம்.
அட்டைவடிவமைப்பு: தி இன்னோவேஷன் பொட்டிக், இந்தியா.
ஒருங்கிணைப்பு: ஹெரிடேஜ் தமிழன்,கித்தான் முத்து,ஸ்பீடு செந்தில்.
வலைப்பூ அனுசரணை: Komalimedai.blogspot.in
மின்னஞ்சல்: sjarasukarthick@rediffmail.com

மின்னூலாக்கம் – சிவமுருகன் பெருமாள் – sivamurugan.perumal@gmail.com
கிரியேட்டிவ் காமன்ஸ் 4.0 2014 உலகளாவிய உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் இந்நூலினை யாரும் படிக்கலாம், பகிரலாம். இவ்வெழுத்துக்களை பயன்படுத்தும் போது வலைப்பூ முகவரி, மின்னஞ்சல் முகவரியினை குறிப்பிடவேண்டும்.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்

ஆசிரியர்கள் உரை

இந்த நூல் இதுவரை இல்லாத ஒரு தன்மையைக்கொண்டுள்ளது. வெளிப்படையான சில விமர்சனங்களை வைக்க முயல்கின்றது. இது யாருடைய மனதிலும், யாரைப்பற்றியுமான மோசமான கருத்தை உருவாக்குவதை நோக்கமாக கொள்ளவில்லை. குறிப்பிட்ட சூழலில் சிலரின் அறிவு, அவர்களின் வெளிவரும் ஆன்மாவின் தன்மை பற்றியது. எந்த முன்முடிவுகளோடு எழுதப்படவில்லை என்பதே இதை வாசிக்க ஒரு காரணமாக கொள்ளலாம். குறையாத அங்கதமும், சுய எள்ளலும்தான் இவற்றின் அம்சங்களாக வாசிப்பவர்கள் கூறக்கூடும்.
எங்கள் இருவருக்குமே இது ஒரு புதிய அனுபவம் என்று கூறலாம். லாய்ட்டர் லூன் ஒரு உல்லாச பேர்வழி பெரும்பாலும் அவர் படு கிண்டலான சம்பாஷனைகளை உருவாக்க மெனக்கெட்டார். பெண்களின் பேச்சு கேட்டால் ஒரே ஓட்டம்தான். அப்புறம் எங்கே எழுதுவது? அதனால்தான் மனதேசப்பாடல் கேட்க இவ்வளவு நாட்களாகிவிட்டது.
இருவரும் இணைந்து எழுதியதில் இது குறிப்பிட்ட வடிவம் பெற்றிருக்கிறது. வாசித்துவிட்டு கருத்துக்களை கூறுங்கள். இதை எழுத உதவிய சபர்மதி அறக்கட்டளை தலைவர் இரா. முருகானந்தம், எழுத்தாளர் என்.ஸ்ரீராம், வெளியிட்ட ஆரா பிரஸ் குழுவினருக்கும் நன்றி.
ப்ரியங்களுடன்
ஜேம்ஸ் பாம்பிரே
லாய்ட்டர் லூன்

நூல் அறிமுக உரை

இந்த நூல் நான் இலக்கிய வகையைச்சேர்ந்தது. அதாவது தனது வாழ்க்கைச்சம்பவங்களை தொடர்புபடுத்தி எழுதுவதுபோலவே செல்லும் தன்னை எழுதுதல் குறுங்கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது.
ஒருவரின் வாழ்வில் நிகழும் அரசியல் தொடர்பான விஷயங்களையும், லட்சியங்களை உறுதியான தொனியில் எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்று இரு வேறுபட்ட நபர்களிடையே நடப்பதாக அமையும் காபி..காரம்.. கச்சேரி வாழ்வியல் நன்னெறித் தொடர் கூறுகிறது.
நேரடியாக எதனையும் கூறாமல் ஒரு கதை உரையாடல் வழியே குறிப்பிட்ட சிலரின் குணங்களை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் சில கட்டுரைகள் சிறப்பாக அமைந்துள்ளன. சில மனிதர்களின் விட்டேத்தியான போக்கு பற்றிய விவரணையாக மதுபானக்கடை கட்டுரை அமைந்துள்ளது. குறிப்பிட்ட லட்சியவாதம் பேசும் மனிதர்களின் மறுபக்கத்தை காட்டும்விதமாக கலைத்தொப்பியின் தொடரும் விவரணைகள் உள்ளன.
ஏறத்தாழ மிக துயரமான கட்டுரைகளை இதில் வாசிக்க இடமில்லை. கொண்டாட்டமான தன்மை முன்னிலும் இதில் அதிகம். தினகரன் வெள்ளிமலர் கே.என்.சிவராமன், ஐந்து ரூபாய் டைம்பாஸ் ஆர்.சரண் ஆகியோர்களின் எழுத்தின் அதிதீவிர ரசிகரான லாய்ட்டர் லூனின் பங்களிப்பில், வேறெப்படி இந்த நூல் அமையும்? பல கட்டுரைகள் பல விஷயங்களை கடுமையான பரிகாசத்தொனியோடு பேசிச்செல்கிறது குறிப்பாக சோம்பானக்குறிப்பின் கடைசி பிராக்கெட்டில் உள்ள குறிப்பு. வங்க எழுத்தாளர்களை குறிப்பாக பந்தோபாத்தியாய வகைகளை விரும்பிபடிக்கும் ஜேம்ஸ் எழுதிய கட்டுரைகள் அந்த சாயல் கொண்டதாக இருக்கக்கூடும். பலபெயர்களை புனைந்துதான் எழுதுவேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு எழுதுபவர் இவர். வாசியுங்கள். நன்றி!
சார்லி ட்ராம்ப்
 தரவிறக்கம் செய்ய,
http://freetamilebooks.com/ebooks/mana-desa-padal/

பிரபலமான இடுகைகள்