இடுகைகள்

இசைவிழா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹிப்பி திருவிழா - 1969 வுட்ஸ்டாக் கொண்டாட்டம்!

படம்
அரை நூற்றாண்டுக்கு முன்பு இசைக்கலாசாரம் ஒன்று தொடங்கியது. இதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விநோதர்கள் கலந்துகொண்டனர். ஆம் இவர்கள்தான் இசை, ஆன்மிகம் என நாடோடியாக அலைந்து திரிந்த கேசுவல் ஹிப்பிகள். எல்எஸ்டி போர்டு வைத்து அதனை விற்று காசு சேர்த்து ஜமாய்த்த கில்லாடிகள். அமைதியும் இசையும் என்ற பெயரில் இந்த இசை விழாக்கள் அக்காலத்தில் மரபு ஆட்களையும் அமைப்புகளையும் அதிரடித்தன. அதைப் பலரும் பின்பற்றி இசையமைத்து பாடல்களும் வெளியிட்டனர். வுட்ஸ்டாக் இசைவிழாவை மைக்கேல் லாங், ஆர்டி கான்ஃபெல்ட், ஜோயல் ரோசன்மென், ஜான் ராபர்ட்ஸ் ஆகியோர்தான் தொடங்கினர். இவர்கள் பல்வேறு இசை நட்சத்திரங்களை அணுகி, நிகழ்ச்சி நடத்தக் கேட்டனர். ஆனால் அவர்கள் ஏதோ காரணத்தால் மறுத்துவிட்டனர். ஆனாலும் இளைஞர்களை சந்திக்க முடியும் காரணத்தினால் புகழ்பெற்ற சிலர் இசைந்தனர். இதன் விளைவாக, அவர்கள் புகழின் உச்சத்தைத் தொட்டனர். வால்கில் எனுமிடத்தில் விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவர்களும் ஒரு கட்டத்தில் இசைவிழாவுக்கு இடம் தர மறுத்துவிட்டனர். பின் பெதல் பகுதியில் நிலமுள்ள பால்பண்ணை விவசாயி இடம் தர முன்வந்தார். அதற்கும்