பாலியல் தேர்வு என்பது முக்கியமா?
உளவியல் அறிவியல் கேள்வி பதில்கள் - மிஸ்டர் ரோனி பாலியல் தேர்வு என்பது முக்கியமா? இயற்கைக்கு முக்கியம். பொதுவாக பெண் விலங்குகள் முட்டையிட, குட்டி போட அதிக சக்தியை செலவிடுகின்றன. அப்படி பெறும் குஞ்சு, குட்டி எதிர்பார்த்த அளவுக்கு வலிமையாக இல்லையென்றால் இயற்கையை எதிர்த்து, அந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்டு உயிர் பிழைத்திருக்க முடியாது. ஆண்கள், பெண்களை ஈர்க்கவே பல்வேறு அழகான சிறகுகளைக் கொண்டிருக்கின்றன. பெரிதாக, எடை கூடுதலாக உள்ளன. இப்படி உள்ள ஆண்கள், அதிக பெண் இணைகளை அணுகி இனத்தைப் பெருக்க முடியும். பலவீனமான ஆண்களுக்கு பெண் இணைகள் கிடைக்காது. அப்படி கிடைக்காமல் பார்த்துக்கொள்வதில்தான் வலிமையான ஆணின் பெருமை உள்ளது. ஒரு ஆண், பெண்ணை ஈர்க்க அவளுக்கு நகைகளை வாங்கிக்கொடுப்பது, நல்ல உணவகத்திற்கு கூட்டிச்சென்று பிரியாணி வாங்கிக்கொடுத்து கையாலேயே பரிமாறுவது எல்லாம் எதற்காக? ஈர்ப்புக்காகத்தான். இணையை தன் அருகிலேயே வைத்துக்கொள்ளத்தான். ஐக்யூ டெ்ஸ்ட் என்றால் என்ன? இன்டெலிஜென்ஸ் கொசியன்ட். சிந்திக்கும் திறனை போட்டிகள் வைத்து சவால்களை தீர்ப்பதன் வழியாக முடிவு செய்து மதிப்பெண்களை வழங்குவார்கள். நினை...