விலங்குகள் தப்பித்து பிழைத்து வாழ முடியுமா?
பிபிசி |
அழிவிலிருந்து விலங்குகள் தாமே தப்பித்துக்கொண்டுவிட முடியுமா?
நிச்சயமாக முடியாது. காரணம், நீங்களே லேஸ் சிப்ஸ் வாங்குகிறீர்கள். அதில் நண்பர்களுக்கு பகிர்ந்தது போக உங்கள் வீட்டு பெட் செல்லம் வாலாட்டி கெஞ்சினால் சிறிது கொடுப்பீர்கள். ஆனால் அதில் மிச்சம் வைத்து தூக்கிப்போடுவது வாய்ப்பில்லை அல்லவா?
அதேதான் கான்செப்ட். ஒரு விலங்கு பசிக்காக வேட்டையாடும்போது, அதில் முழுமையாக இறங்கிவிடும். அந்த இனம் அழிவில் இருக்கிறதா என்பது பற்றி இங்கு கவலை அவசியமில்லை. பசி தீர்ந்தால்தான் அந்த விலங்கு உயிர்பிழைக்கும்.
பரிணாம வளர்ச்சி என்பது அடுத்தநொடி நிகழ்ந்துவிடாது. பல்லாண்டுகள் அதற்குத் தேவை. இதற்கும் கூட நம்மிலும் வலிய விலங்குகள், நோய்கள், இயற்கை இடர்பாடுகளைத் தாங்கி நடந்தால்தான் அது சாத்தியமாகும்.
குறிப்பிட்ட விலங்குகளை மட்டுமே வேட்டையாடி உண்ணும் விலங்குகள், பறவைகள் இயற்கையில் தாக்குப்பிடித்து வாழ்வது கடினம். நியூசிலாந்தில் ஹாஸ்ட் எனும் கழுகு, மோவா என்று பறக்கமுடியாத பறவையை மட்டும் வேட்டையாடி உண்ணும். அங்கு மனிதர்களின் பெருக்கம் அதிகமானபோது, இறைச்சிக்காக அப்பறவையை வேட்டையாடி அழித்தனர். இதனால், உணவின்றி ஹாஸ்ட் கழுகு இனம் அழிந்து போனது.
இதிலும் தப்பித்து வாழ்ந்து வருவது நுண்ணுயிர்களான பாக்டீரியா, வைரஸ்கள்தான். இவற்றின் பரிணாம வளர்ச்சி ஏற்படுத்தும் பிரச்னைகளை நாம் இன்று சந்தித்து வருகிறோம் அல்லவா?
நன்றி: பிபிசி