ஈகுவடார் அரசு.. பனாமா பேப்பர்ஸ் விவகாரம்
பனாமா பேப்பர்ஸ்.... இந்திய தொழிலதிபர்கள் அனைவரும் தங்கள் பணத்தை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று உரக்க சொன்ன ஒரு செய்தி.
மெல்ல ஊடகங்கள் இதனை மறக்க வைத்துவிட்டன. ஏனெனில் ஊடகங்களை நடத்துபவர்களே பெரிய தொழிலதிபர்கள். அல்லது தொழிலதிபர்களின் பங்குகள் அதில் உள்ளன. விளம்பரம் தருகிறார்கள். அரசியல் லாபம் என பல்வேறு விஷயங்கள் இதில் உண்டு.
பெட்ரோ ஈகுவடார் என்ற கம்பெனியில் நடந்த தில்லுமுல்லுகளை கொண்டுவந்ததில் பத்திரிகையாளர் மோனிகா அல்மெய்டாவுக்கு முக்கிய பங்குண்டு. அவரிடம் பேசினோம்.
உங்களது ஈகுவடார் பத்திரிகையாளர் குழு என்ன சவால்களை எதிர்கொண்டது?
இன்று இணையத்தில் ஈகுவடார் என்று டைப் செய்ததில், பதினாறாயிரம் வார்த்தைகள் முடிவுகள் கிடைக்கும். நீங்கள், வழக்கு தொடர்பான க்ளூக்களை தேடி பொறுமையாக இருந்து உண்மையைத் தேடுகிறோம்.
நாங்கள் வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை எடுத்துள்ளோம். இதுதொடர்பான ஆளுமைகளை நேர்காணல் செய்துள்ளோம். இதனை நீங்கள் ஒப்பிட்டுப்பார்த்தாலே உண்மை தெரிந்து விடும். அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் உண்மை பேச தயங்குவதால் நிறைய தாமதம் ஆகிறது.
நாங்கள் இதுதொடர்பாக ரகசியம் காத்தோம். இதுதொடர்பாக தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல் என எதையும் செய்யவில்லை. காரணம் அரசின் கண்காணிப்பு எங்களை சூழ்ந்திருந்ததை நாங்கள் அறிந்திருந்தோம். ஈகுவடார் பிரதமர் ரஃபேல் கொரியா சுதந்திரமான ஊடகங்கள் தன்னுடைய எதிரி என பகிரங்கமாக அறிவித்தார். இத்திட்டம் பற்றி மூன்று பேர் மட்டுமே அறிந்திருந்தோம்.
சுதந்திர பத்திரிகையாளர் குழுவில் நாங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களோடு இணைந்து பணியாற்றினோம்.
ஈகுவடார் அரசு இந்த விசாரணையை எப்படி எதிர்கொண்டது?
அரசு அதிகாரி ஈகுவடார் அரசு நேர்மையான நடத்தை கொண்டது என கூறினார். அதேசமயம் பிரதமர் கொரியா பனாமா பேப்பர்ஸ் தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற தன் தொண்டர்களை ஏவினார். ட்விட்டர் வழியில் அதனை ஊக்குவித்தார். எங்கள் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்கள் வரத்தொடங்கின. உடனே நான் அவர்களுக்கு பாதுகாப்புகளை வழங்கி அமைதியாக இருக்க வலியுறுத்தினேன்.
ஏப்ரல் பதினாறு அன்று பனாமா பேப்பர்ஸ் விஷயங்களை வெளியிட முயற்சித்தபோது, நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. இதனால் மே மாதம் அதனை வெளியிடும் சூழல் ஏற்பட்டது.
கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?
ஆறு பத்திரிகையாளர்கள், எட்டு பத்திரிகையாளர்கள் என்று பணியாற்றிய எனக்கு நூறு பத்திரிகையாளர்களோடு பணியாற்றியது புதிய அனுபவம். மேலும் கோப்புகளை பெற்று, ஆராய்ந்து தொகுக்கும் பணி ஆற்றலையும் உழைப்பையும் கோரியது. இதோடு இதுபற்றிய எந்த தகவல்களையும் வெளியிடாமல் பார்த்துக்கொண்டது சவாலாக இருந்தது.
நன்றி: குளோபல் வாய்ஸ்