அசுரகுலம்- சாலி சலான்








அசுரகுலம் -  சேலி சலான்

சேலி சலான் ஒன்றும் செய்யவில்லை. கணவரை சுத்தியால் இருபதுமுறை தலையில் அடித்து கொன்றார். அப்புறம் குற்ற உணர்வு தாங்காமல் தற்கொலை செய்ய முயற்சித்தார். போலீஸ் அவரை கைது செய்தது. அவருக்கு மனநிலை பிரச்னை உள்ளதா என்று சோதித்தது. இறுதியில் தந்தையைக் கொன்றதைக் கண்டுகொள்ளாமல் அவரது மகன்களே தாயை பிணையில் எடுக்க முயற்சித்தனர்.

நடந்தது என்ன?

சாலி தன் பதினைந்து வயதில் 22 வயதான ரிச்சர்டைச் சந்தித்தார். பேசினார்கள், பழகினார்கள். உள்ளம் கலந்தால் அப்புறம் என்ன அச்சம்? திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பிள்ளைகளும் தாம்பத்திய சந்தோஷத்தின் அடையாளமாக கிடைத்தார்கள்.

31 ஆண்டுகள் ஆனபிறகு கருத்து வேறுபாடு ஏற்பட ஓராண்டு இருவரும் பிரிந்து இருந்தனர். பின்னர் சமரசம் ஏற்பட்டது. இச்சம்பவங்களை நான் உங்களுக்கு சொல்லுவது 2010 ஆண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


அப்போது இருவரும் சாலியின் பெற்றோர் வீடு அருகே சந்தித்தனர். அந்த வீட்டை விற்றுவிட ரிச்சர்டு விரும்பினார். சாலியும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. அந்த வீட்டில் தங்கிய ரிச்சர்டு மனைவியிடம் பன்றி இறைச்சியும் முட்டையும் சமைத்து தரச்சொன்னார். சாலியும மகிழ்ச்சியோடு கடைக்குப் போய் இறைச்சி வாங்கி வந்து சமைத்தார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.


கைப்பையிலிருந்த பேக்கை எடுத்து ரிச்சர்டுவின் தலையை நோக்கி சுத்தியை உயர்த்தினார். இருபது முறை. ரிச்சர்டு அதற்குமேலும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றதும், மூச்சை சோதித்து திரைச்சீலையை கிழித்து உடலை அதில் சுருட்டினார். மெல்ல காரில் ஏறி கிளம்பினார். தன் சகோதரருக்கு போன் செய்து தற்கொலை செய்வதாக கூற உறவுகள் பதறின. ஒருவழியாக போலீஸ் ரிச்சர்டின் உடலை மீட்டு சாலியை கைது செய்தது.

கொலைக்கு காரணமாக சாலி கூறியது, மனைவிகள் கூறும் காரணம்தான். துரோகம். ஒரே வார்த்தையில் அப்படித்தான் கூறவேண்டும். சாலி இறைச்சி வாங்க சென்றபோது பேசத் தொடங்கிய ரிச்சர்டு அவள் வந்தபின்னும் இறைச்சி சமைக்கும்போதும் பேசிக்கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத சாலி சுத்தியலை தூக்கிவிட்டார்.

நீதிமன்றத்தில் அவர் பெண்களிடம் சம்சாரித்த சல்லாப இமெயில்களையும் வயாகரா மாத்திரைகளையும் தூக்கிப்போட்டார். தந்தையின் வக்கிர விஷயங்களை இரு மகன்களும் வேதனையோடு ஒப்புக்கொண்டனர். ஒருமுறை பார்ட்டியில் ரிச்சர்டின் நண்பர் மரியாதைக்காக சாலியை முத்தமிட அன்றிரவு சாலிக்கு நரகமானது. எப்படி அவன் உன்னை முத்தமிடலாம் என்று கூறி உடையை கிழித்தெறிந்து ரப் அண்ட் டஃபாக சாலியை பலாத்காரம் செய்தார் ரிச்சர்டு.


கணவர் மனைவியை பலாத்காரமா செய்வார் என்று கேட்காதீர்கள். மகன்கள் சொன்ன வாக்குமூலம் இது. விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனை நீங்கள் எப்படி தீர்ப்பீர்கள்.

சாலியின் வக்கீல், பல்லாண்டுகளாக கொடுமைப்படுத்தப்பட்ட பெண் தன்னையும் மீறிச்செய்த கொலை இது. நாங்கள் அந்த கொலையை நியாயப்படுத்தவில்லை. ஆனால் இது உளவியல் அழுத்த த்தினால் நடந்த சம்பவம். திட்டமிடப்பட்டதல்ல என்று கூறினர். இதற்காக நியமிக்கப்பட்ட நீதிமன்றம் சார்ந்த தடவியல் அறிஞர், இந்த கொலை சற்று எக்ஸ்ட்ரீமான ஒன்றுதான். ஆனால் சம்பந்தப்பட்டவர் இதனைசெய்யாத போது அவருக்கான முடிவு தற்கொலையாகத்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.


சாலிக்கு என்ன தீர்ப்பு கிடைக்குமோ தெரியாது. ஆனால் கணவன்மார்களே, மனைவியிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். இல்லையெனில் கபாலம் தெறித்து விடும்.


ஆக்கம்: பொன்னையன் சேகர்

நன்றி: க்ரைம் அண்ட் இன்ஸ்வெஸ்டிகேஷன்