நண்பனுக்காக ஆக்சன் அவதாரம் - டைகர்
iQlikmovies |
டைகர் (2015)
இயக்கம்: வி ஆனந்த்
ஒளிப்பதிவு: சோட்டா கே நாயுடு
இசை எஸ்எஸ் தமன்
சினிமாவில் நண்பர்கள் எதற்கு தேவைப்படுவார்கள்? காதலுக்குத்தானே. அதைத்தான் இதில் சந்தீப் கிஷன் தமனின் மாஸ் பிஜிஎம்மில் வில்லன்களை குமுறுகஞ்சி காய்ச்சி நமக்கும் பாடம் எடுக்கிறார்.
ராகுல் ரவீந்திரன், கல்லூரியில் படிக்கும்போது அவரின் அமுல் பேபி லுக்குக்கு மயங்கி காதலிக்க டார்ச்சர் செய்கிறார் காலேஜ் சேர்மனின் மகள். யெஸ் சீனியரின் காதல் டார்ச்சர்தான். அதற்காக கற்பனையாக டிவியில் வரும் பாடலின் சிச்சுவேனை இணைத்து கங்கா, வாரணாசி இந்து பல்கலைக்கழகம் என சொல்லி அச்சமயம் தப்பிக்கிறார். காலம் போட்ட கணக்கில் எல்லாமே மாறுகிறது. அவரின் கல்லூரிக்கு போட்டிக்காக வருகிறார் கங்கா என்ற பெண். யாரென்று பார்த்தால் யெஸ சீரத் கபூர்.
காலேஜே ராகுலின் காதலியைச் சேர்த்து வைக்கத் துடிக்க, கங்காவுக்கு தலைகால் புரியாமல் டென்ஷனாகிறது. ஒருவழியாக ஒரு வாரம் சேர்ந்து காதலியாக நடிக்க ஒப்புக்கொள்ள, ஒரே பாடல் வழியாக விஷ்ணு(ராகுல் ரவீந்திரனின்) காதல் மனசு அவருக்கும் புரிகிறது. அப்புறம் என்ன கட்டிப்பிடி வைத்தியம் பாடல்தான்.
காதலிக்கு ஐடி கம்பெனியில் வேலையும் வாங்கிக் கொடுக்க, முட்ட முட்ட காதலில் திளைக்கிறது ஜோடி. அப்போது என்ட்ரி கொடுத்து சந்தேகத்தீயை சந்தீப் கொளுத்திப் போட காதல் விரிசல் காண்கிறது. தொடர்ச்சியான சந்தீப்பின் நடவடிக்கைகள் ராகுலுக்கு எரிச்சலூட்ட நட்பும் பணாலாகிறது.
அப்புறம் ஒரு விபத்தில் சிக்குகிற ராகுலுக்கு, பிரச்னைகளை சமாளிக்க டைகர்(சந்தீப்பின் ) உதவி தேவைப்படுகிறது. நம்பரைச் சொல்லி நினைவிழக்கிறார். சந்தீப் என்ன செய்தார், காதல் கைகூடியதா, நட்பு புதுப்பிக்கப்பட்டதா என்பதே கதை.
இதெல்லாம் ஒரு கதையா ப்ரோ என டென்ஷன் ஆக கூடாது. நாங்க பார்த்தோமில்ல நீங்களும் பார்க்கறீங்களோ இல்லையோ இதை படிச்சே ஆகணும்.
படத்தில் ட்விஸ்ட் அப்படிங்கறது எதுவுமே கிடையாது என்பது இப்படித்தின் ஸ்பெஷல். தமனின் பிரமாண்ட பிஜிஎம் சந்தீப்புக்கு பொருந்தவேயில்லை. பரவாயில்லை படத்தில் ஒரே ஆறுதல், தமனின் இசை மட்டுமே.
நட்பு, காதல் என இரண்டையும் சொல்லும் விதத்தில் ஒரு உருப்படியான காட்சியைக் கூட இயக்குநர் உருவாக்கவில்லை.
-கோமாளிமேடை டீம்