காதல் என்பது என்ன? - பிரேமா இஷ்க் காதல்!
யூட்யூப் |
பிரேம் இஷ்க் காதல்
பவன் சடினேனி
ஒளிப்பதிவு: கார்த்திக் கட்டமனேனி
இசை: ஸ்ரவண்
கஃபே இசைக்கலைஞன், உதவி இயக்குநர், ரேடியோ தொகுப்பாளர் என மூன்று ஆண்கள் மூன்று பெண்களை காதலிக்கிறார்கள். அவர்களின் காதல் அவர்களது வாழ்க்கையில் நிகழ்த்தும் மாற்றங்கள்தான் கதை.
கஃபே இசைக்கலைஞனாக இருப்பவனை கல்லூரி நிகழ்ச்சிக்கு இலவசமாக அழைக்க காதல் தூண்டில் போடுகிறாள் சரயூ. முதலில் மறுப்பவன், பின் பெண்ணின் சமூகம் சார்ந்த பணிகளால் ஈர்க்கப்பட்டு கல்லூரி நிகழ்ச்சிக்கு ஓகே சொல்லுகிறான்.
நிகழ்ச்சி செய்தபின் காதல் சொல்லுகிறான். ஒகே ஆகிறது. சில நாட்களில் அவனுக்கு இசை ஆல்பம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. வேண்டாம் என்பவனை அதனை செய்யச்சொல்கிறாள் சரயூ.
லிரிக் கேலக்ஸி |
ஆனால் இசைப்பணியின்போது ஷாப்பிங், ஓட்டல் என அழைத்துச்செல்ல முயல, கஃபே கலைஞன் இசையில் மூழ்கிவிடுகிறான். அதேதான். காதல் பிரிவு. இசையா, நானா என சுயநலமாக சரயூ பேச காதல் டைட்டானிக் கடலில் மூழ்குகிறது.
ராயல் ராஜூ, கிராமத்து ஆள். நகரப் பெண்ணை காதலித்து மணக்க நகருக்கு வருகிறார். அங்கு, நண்பனின் திரைப்பட வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேற நினைக்கிறான். அங்கு காஸ்ட்யூம் டிசைனரை சந்திக்கிறான். அப்பெண்ணை முன்தினம் இரவு விபத்திலிருந்து காப்பாற்றி வீடு சேர்த்தது அவன்தான். இதே காரணத்திற்காக அவர்கள் நெருக்கமாக, ஒருநாள் மதுபோதையில் செம்புலப்பெயர் நீராக ஒன்று சேர்கிறார்கள். ராஜூ, கல்யாணம் எப்போ என கேட்க, அப்பெண் லூசாப்பா நீ என அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறாள். காதல் புட்டுக்க, ஜெயிச்சு காட்டுவேன் என ராயல் ராஜூ உறுதி எடுக்கிறான்.
ரேடியோவில் அர்ஜூன், பார்க்கும் பெண்களை பாத்ரூம் கூட்டி சென்று புரட்டி எடுத்த அந்த நேரத்து சுகம் அனுபவிப்பவன். இவனுக்கும் டேக்கா கொடுத்து காய வைப்பது தமிழ் பெண் சாந்தி. இவளை மேட்டர் செய்ய காதலிப்பது போல நாடகமாடுகிறான் அர்ஜூன். ஆனால் அவள் இந்த மேட்டரில் எவ்வளவு பெரிய கில்லி என பின்னரேஅவனுக்கு புரிகிறது.
சற்று போல்டான கதை. பெண்களை உறுதியானவர்களாக காட்டியதற்கு இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆண்கள் முன்னர் எடுத்த முடிவை இன்று பெண்கள் எடுப்பதை காட்சி படுத்தியிருக்கிறார். நடித்த பெண்கள் அனைவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.
இசை, கேமிரா அசத்தியிருக்கிறது. ஜாலியாக பார்த்து சமூகம் இப்படியாச்சுதே என வருந்துங்கள்.
-கோமாளிமேடை டீம்