செக்ஸ் இல்லாத ஜப்பானியர்கள்!





Related image
askmen.com



செக்ஸ் அனுபவம் இல்லாத இளைஞர்கள் - இது ஜப்பான் கூத்து


ஜப்பானில் புதிய பிரச்னை தலைதூக்கியுள்ளது. ஆம். பத்தில் ஒருவர் அங்கு செக்ஸ் அனுபவமே இல்லாமல் வாழ்கிறார் என்கிற பகீர் செய்திதான் அது. முப்பதுகளில் வாழும் வாலிபர்கள் செக்ஸ் அனுபவமின்றி வாழ்வது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.


ஜப்பானில் தேசிய கருத்தரிப்பு மையம் இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. காலகட்டம் 1987 - 2015. இதனை மேற்பார்வை செய்தது  ஜப்பான் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

2015 ஆம்  ஆண்டு 30- 34 வயதுக்குள்ளான பெண்கள் 11.9%, 12.7% ஆண்கள் ஆகியோர் எந்தவித செக்ஸ் அனுபவமுமின்றி இருந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 35-39 வயதுக்குள்ளான ஆண், பெண் பிரிவில் 8.9%(பெண்), 9.5%(ஆண்) சதவீதம் பேர் பாலுறவு அனுபவம் பெறாதவர்கள் என்கிறது இந்த ஆராய்ச்சி.


18-39 வயதுக்குள்ளான பிரிவில் கால்பகுதி ஆண்,பெண்களுக்கு பாலுறவு அனுபவம் கிடைக்கவில்லை என்று ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது டோக்கியோ பல்கலைக்கழகம். இந்த நிலைக்கு முக்கியக் காரணம், ஜப்பானில் குறைந்து வரும் மக்கள்தொகை விகிதமே. தற்போது ஜப்பான் அரசு, இந்த பிரச்னையைத் தீர்க்க மக்களுக்கு குழந்தைப் பிறப்புக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவெடுத்துள்ளது. இது வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு ஆதரவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருபது சதவீத த்தினருக்கு மேலாக பாலுறவு அனுபவமின்றி திருமண வாழ்வைத் தேர்ந்தெடுத்தெடுத்துள்ளனர்.

TOI


பிரபலமான இடுகைகள்