உணவுச்சங்கிலி, உணவு இணையம் வேறுபாடு என்ன?


உணவு இணையம்
உணவுச்சங்கிலி








உணவுச்சங்கிலி, உணவு இணைப்பகம் இரண்டுக்குமான வேறுபாடு என்ன?

உணவுச்சங்கிலி என்பது தாவரம், மான், புலி என்று அமைந்திருக்கிருக்கும். முதல்நிலை, இரண்டாம் நிலை என்று இதனைக் குறிப்பிடுவார்கள். அதனை அடிப்படை அறிவியல் நூலில் வாசித்திருப்பீர்கள். இப்போது ஆராய்ச்சி நிலையில் இருப்பது, இந்த தாவரம், மான், புலி ஆகியவை எப்படி குறுக்கும் மறுக்குமாக ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்றன என்பதைத்தான். இதைத்தான் உணவு இணைப்பகம் என்று குறிப்பிடுகின்றனர்.


எளிமையாக சொன்னால் புல்லை மான் மேய்கிறது என்பது உணவுச்சங்கிலி. ஒரு மரத்தைச் சார்ந்து வாழும் பறவை, புழு, இவற்றைத் தின்னவரும் பறவை ஆகியவற்றைப் பற்றியது உணவு இணைப்பகம். உணவுச்சங்கிலி என்பது ஒருவழிப்பாதை போல. உணவு இணைப்பகம் என்பது பல்வேறு கண்ணிகளால் இணைந்த சிலந்தி வலை போல. ஒரு கண்ணி அறுந்தாலும் அதற்கான பாதிப்புகளை இயற்கையில் பார்க்கலாம்.

நன்றி: சயின்ஸ்பாப்

பிரபலமான இடுகைகள்