புயல் பாதிப்பால் செக்ஸ் தொழிலுக்கு மாறும் மொசாம்பிக் மக்கள்!




A boy watches the distribution of aid in the remote village of Bopira, Mozambique, April 6, 2019. © 2019 AP Photo/Cara Anna)





மொசாம்பிக் நாட்டை இடாய் எனும் புயல் தாக்கியதால் பெரும் சேதம் விளைந்துள்ளது. கட்டிடங்கள் இடிந்து வாழ்வாதாரம்  சிதைந்துள்ளது. உள்ளூர் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிபெற்று தராமல் தங்களை மட்டும் காப்பாற்றிக்கொண்டனர். இதனால் பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்கள் கற்பை விலைபேசி உயிர்வாழும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். அதுவும் ஒரு மூட்டை அரிசிக்காக.

இடாய் தாக்கியுள்ள இடங்களில் பெண்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற தங்கள் கற்பையே இழக்க முன்வந்துள்ள அவலம் தவிர்க்கப்பட வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்கிழக்கு ஆசியப்பகுதி இயக்குநர் டேவா மாவ்ஹிங்கா கூறியுள்ளார்.

பெய்ரா, மணிகா, சோஃபாலா ஆகிய ஆகிய கிராமங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இதன் விளைவாக 1.85 மில்லியன் பெண்களும், குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் ஐ.நா மொசாம்பிக் அரசுடன் இணைந்த உணவு, குடிநீர் உள்ளிட்ட  தேவைகளை செய்ய முன்வந்துள்ளது. ஆனால் சுயநலவாதிகளான உள்ளூர் தலைவர்கள், அங்கு இடர்ப்பாட்டில் சிக்கி பட்டினியில் சிக்கிய பெண்களை தம் காமவெறிக்கு பலியாக்கி உள்ளனர்.

அங்குள்ள பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவு போதுமானதாக இல்லை. அது குறித்து பெண் ஒருவர் உள்ளூர் தலைவரிடம் கேட்டபோது, அவர் நீ என்னுடன் செக்ஸ் வைத்துக்கொண்டால் உதவுகிறேன் என கூறியிருக்கிறார். பசி எதை பார்க்கும்? வேறு வழியின்றி சதையை பரிமாற, பசியாறிய அந்த கழுகு அரசு அளித்த ஒரு கிலோ பீன்ஸை அளித்துள்ளது. இது குறைவான அளவு என்று அந்த அபலை அழ, நாளைக்கு வந்தால் அதிகம் தருகிறேன் என்று உள்ளூர் தலைவர் சொல்லியுள்ளார். இதனை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பதிவு செய்துள்ளது.


படம் செய்தி: ஹியூமன்ரைட்ஸ் வாட்ச்