வெல்வாரா நகைச்சுவை நடிகர்- உக்ரைன் தேர்தல் அப்டேட்







தேர்தலில் வெல்வாரா நகைச்சுவை நடிகர்!


நகைச்சுவை நடிகர்களுக்கும் அரசியலுக்கும் அவ்வளவு பொருத்தப்பாடு கிடையாது. கட்சி சார்ந்தவர்கள் நடிகர்களாக இருந்தால் வாய்ப்பு கிடைப்பது கடினம். உலகில் வேறு நிலைமை. உக்ரைனில் நடைபெற்றுவரும் தேர்தலில் காமெடி நடிகர் வெல்லும் உறுதியில் உள்ளார். நடப்பு தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏறத்தாழ 60% வாக்குப்பதிவுகளை இவர் பெற்றுள்ளார்.

இவருக்கு எதிராக நின்ற பெட்ரோ போரசென்கோ பெற்றது வெறும் 24 சதவீதம்தான். பொதுவாக நடிகர்கள் சினிமா தாண்டி அரசியலில் வெல்வதற்கு ரசிகர்களின் பின்னணி பலம் அவசியம். இதனை ரொனால்ட் ரீகன், அர்னால்ட், குத்துச்சண்டை வீரர் ஜெஸ்ஸி வென்சுரா ஆகியோர் நிரூபித்துள்ளனர்.


தற்போது போட்டியில் உள்ள ஸெலன்ஸ்கி 2015 ஆம் ஆண்டு டிவி நிகழ்ச்சி(தி சர்வன்ட் ஆப் பீப்பிள்) ஒன்றைத் தயாரித்தார். அதில் ஆசிரியராக ஊழல்களை எதிர்த்து போராடுபவராக நடித்தார். அதில்தான் மக்கள் அபிமானத்தை சம்பாதித்தார்.


2018 ஆம் ஆண்டு புது ஆண்டு பிறப்பின்போது, திடீரென ஸெலன்ஸ்கி தன் ரசிகர்களிடம் பேசினார். என் அன்பு ரசிகர்களே, உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். வரும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் என்று அறிவித்து அப்ளாஸ் அள்ளினார்.

உக்ரைனின் தினசரி வாழ்க்கை ஊழல்களால் நிலைகுலையும் நிலை ஏற்படத்தான்  ஸெலன்ஸ்கிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. அவர் வென்றால், ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு அணைகட்டும் வேலையை திடமாக செய்யவேண்டும். அதோடு அவர் கோலோமொய்ஸ்கி என்ற தொழில் அதிபரின் பினாமி என்ற கறையும் பின்தொடர்வதை துடைத்தெறிய வேண்டும்.


குறிப்பு: ஸெலன்ஸ்கி தேர்தலில் 75 சதவீத வாக்குகளுடன் வென்றுவிட்டார். போட்டியாளர் பெட்ரோ 25 சதவீத வாக்குகள் பெற்றுளார். “இன்னும் நான் அதிபர் ஆகவில்லை. உக்ரைன் மக்கள் தாழ்ந்து போக நான் அனுமதிக்க மாட்டேன்” என்று பிரஸ் மீட்டில் மக்களுக்கு தெம்பூட்டியுள்ளார்.

படம் செய்தி: குளோபல் வாய்ஸ்