மாற்றி யோசி வெற்றி ஈஸி - வெற்றி விதிகள்




Image result for வெற்றியின் விதிகள் - நெப்போலியன் ஹில்







வெற்றியின் விதிகள்- நெப்போலியன் ஹில்


வெற்றி என்பது மனிதர்களுக்கு தனியாக கிடைப்பதல்ல. மனிதர்களை குறிப்பிட்ட லட்சியத்திற்காக ஒன்றிணைத்து சாதனை செய்தவர்களை மட்டுமே சாதனையாளர் என்று கூறமுடியும்.

அப்படி வென்றவர்களை பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து இந்த நூலை நெப்போலியன் ஹில் எழுதியுள்ளார். எழுதிய சிறிது காலத்திலேயே நூல் விற்பனை சரிந்தது. காரணம், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்கம். அதற்காக, யோசி, வெற்றி பெறு என்ற நூலை எழுதி மக்களுக்கு உற்சாகமூட்டி இருநூல்களையும் வெற்றி வரிசையில் இணைத்திருக்கிறார்.

நூலைவிட நெப்போலியன் ஹில்லின் இக்கதை பெரும் உற்சாகம் தருகிறது. சரி நூலில் என விளக்குகிறார்.


பதினைந்து விதிகளைச் சொல்லித் தருகிறார்.

அவற்றில் பல காலத்திற்கொவ்வாததாக இன்று இருக்கலாம். ஆனால் சாதனையாளர்களின் வாழ்க்கையில் இது முக்கிய பங்காற்றியுள்ளது.


நோக்கம், உற்சாகம், பணியாளர்களிடையே இணக்கம், வேலை செய்வதில் காட்டும் தீவிரம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை முக்கியமாக கொள்ளலாம்.


இதற்கான எடுத்துக்காட்டுகளை ஃபோர்டு, ஜி.எம். மோட்டார், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களை வைத்து சொல்கிறார்.

மோசமில்லை. எழுத்து பழையதாக இருந்தாலும் வெற்றியாளர்களின் அடிச்சுவட்டை வரலாற்றில் பொறிக்க உதவிய விதிகள் என்பதால் படிக்கலாம். நோக்கம் என்பதை ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸை வைத்து புரிந்துகொள்ளலாம். ஆப்பிளின் உறுப்பினர்கள், பங்கு தார ர்களுக்கு கம்பெனி நிறைய சம்பாதித்தால் நமக்கு லாபம் என்று நினைத்தார்கள். ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ், கணினி விற்பனை என்பதைக் கடந்து அடுத்த தொழில்நுட்ப புரட்சியில் ஆப்பிளின் இடம் என்ன என்று யோசித்தார். ஐபாட், ஐபோன் உருவானது. இன்று டிம் குக் தலைமையில் ஸ்மார்ட் வாட்ச், பயன்படுத்தி ஐபோன்களுக்கான மார்க்கெட் என பயணிக்கிறது.

ஐபாட், ஐபோன் கண்டுபிடிக்க ஸ்டீவ் ஜாப்சுக்கு பணம் மட்டும் காரணமாக இல்லை. அவருக்கு இசை கேட்க பிடிக்கும். தரமான இசை. அதற்காக மினிமம் பட்டன்களுடன் ஐபாட் உருவானது. ஐபோனும் அப்படியே. ஏறத்தாழ இச்சமயத்தில் ஸ்டீவ் புத்த துறவி போல குறைந்தளவு பொருட்களுடன் ஃபிளாட்டில் வாழ்ந்து வந்தார்.


அதனையே போனுக்கும் அப்ளை செய்தார். அதன் வளர்ச்சிதான். போனிலுள்ள ஹெட்போன் ஜாக் போன்றவற்றை நீக்கும் மேம்பட்ட முறைகளின் நீட்சி.


இதுபோலவே ஊதியத்திற்கு அதிகமாக பணியாற்றுவதையும் நெப்போலியன் பல்வேறு எ.கா களுடன் நிறுவுகிறார். இதன் பொருள், நிறைய வேலைகளை கற்றுக்கொள்ள நேரம் கிடைக்கும் என்பதுதான்.


உங்களை எப்படி தலைவராக மாற்றிக்கொள்வது என்பதே வெற்றி விதிகள் நூல் சொல்லும் கருத்து. மாறவேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது. இந்த முடிவுக்கு நீங்கள் நூலை வாசித்தபின் வந்துவிடுவீர்கள். அதுதான் நூலின் வெற்றியும் கூட.


படம்:தன்னம்பிக்கை.ஆர்க்
நன்றி: பெ.பாபு அகரம், டெலிகிராம் தமிழ் புத்தக குழு.




பிரபலமான இடுகைகள்