பெண்களுக்கு என்ன தேவை? குடும்பமா? செக்ஸா? - சேட்டன் பகத்

Image result for one indian women



இளைஞர்களின் இந்தியாவுக்குப் பிறகு சேட்டன் பகத் கோமாளிமேடைக்கு வருகிறார். இந்த விமர்சனப் பதிவு மூலம். 


கதை, அதே லைன்தான். உயர் கல்லூரிகளில் படிப்பு, நட்பு, கோல்டன் சாக் எனும்  முதலீட்டு நிறுவனத்தில் வேலை, காதல், பாலுறவு, பிரிவு, திருமணம் என சேட்டனிடம் என்ன எதிர்பார்த்து கிராஸ்வேர்டு கடையில் வாங்கினோமோ அத்தனை விஷயங்களும் நூலில் உண்டு. 
Image result for one indian women




ராதிகா மேத்தா என்ற படிப்பில் பட்டையை கிளப்பும் சுமார் மூஞ்சிப் பெண் கோல்ட்மேன் சாக் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். தன் மீதான தாழ்வு மனப்பான்மையில் தடுமாறுபவர்,  டெபனீஸ் சென் என்ற விளம்பரத்துறை இளைஞர் மீது காதலில் விழுகிறார். ஆனால் அவர், டிபிக்கல் பெங்காலி ஆள். காதலிக்கும் பெண் தன்னை விட ஒரு ரூபாயேனும் குறைவாக சம்பாதிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர். இதுதெரிய காதல் புட்டுக்கொள்கிறது. இது அமெரிக்காவில், ப்ரூக்ளின் நடைபெறுகிறது. உடனே ட்ரான்ஸ்பர் கேட்க, கம்பெனி ஹாங்காங் போங்களேன் என்று சொல்லுகிறது. 
Image result for chetan bhagat

யெஸ். அங்கும் காதல்தான். ஆனால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நீல் குப்தாவுடன் கிறுக்குத்தனமான ஆனால் ராதிகா மேத்தா விரும்பும் செக்ஸ் கிடைக்கிறது. ஆனால் குடும்பம், குழந்தைகள் உள்ளிட்ட உரிமைகள் கிடைக்காதே என ராதிகா டென்ஷனாகிறார். இந்த உறவை ராதிகாவே முறித்துக்கொள்கிறார். அடுத்த வரன், வீட்டில். 

பிரிஜேஸ் குலாத்தி என்ற ஃபேஸ்புக் இளைஞர், வீட்டினரால் நிச்சயிக்கப் படுகிறார். எல்லாம் நன்றாகத்தான் போனது. ஆனால் டெபு, நீல் ஆகிய இருவரும் திடீரென ராதிகாவைப் பார்க்க கோவா வருகிறார்கள். அடுத்தநாள் ராதிகாவுக்கு பிரிஜேஸூடன் திருமணம். சங்கீத் வரை முடிந்துவிட்டது. ராதிகா டெபு, நீல், பிரிஜேஸ் என யாரைத் தேர்ந்தெடுத்தார் எனபதே. 


டெபு, நீல் இரண்டுபேரும், கணவராகப்போகும் பிரிஜேசை விட புத்திசாலிகள். ராதிகாவை விரும்புவர்கள்தான். ஆனால் என்ன வித்தியாசம் என ராதிகா கஃபேயில் பேசும் வசனம் செம துணிச்சல். 



காதல், பிரிவு, ஏக்கம், வெறுப்பு என உலவியர் இம்முறை பெண்ணியம் பேசியிருக்கிறார். நல்லவேளையாக அது உறுத்தால் வொர்க்அவுட் ஆகியிருக்கிறது. 

ஆண், பெண் பாலின வித்தியாசம் காட்டும் குடும்பம், பெண்ணின் அறிவு குடும்பம் நடத்த தேவையில்லை எனும் டெபுவின் நம்பிக்கை, இளமை தீராமல் இருந்தால் போதும் என நினைக்கும் நீலின் கருத்து, எல்லாமே கடந்து போகும் என நம்பும் பிரிஜேஷ் என அத்தனை கேரக்டர்களும் நினைவில் நிற்கிறார்கள். 

கேரக்டர் அப்படி வலுவாக உள்ளது. உண்மையில் ஒரு இந்தியப்பெண் தன் வாழ்க்கையை தீர்மானிப்பதில் எத்தனை தூரம் உறுதியாக இருக்கிறாள், என்ன சுதந்திரம் கிடைக்கிறது என்பதை பளீரென வெளிப்படையாக எழுதியுள்ளார் சேட்டன் பகத். 


தமிழில் நூல் இதே துணிச்சலோடு தணிக்கையின்றி வருமா என்று கேட்டால் எங்களிடம் எந்த பதிலுமில்லை. 

நன்றி: கோமாளிமேடை

படம்: TheIndianTalks

பிரபலமான இடுகைகள்