பாஜக அரசு தன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
kaleej times |
நேர்காணல்
நவ்ஜோத்சிங் சித்து
தமிழில்: ச.அன்பரசு
இப்போதுள்ள மக்களின் மனநிலை என்னவென்று நினைக்கிறீர்கள்?
பிரதமர் மோடி தன்னை எப்படி காவலாளி என்று கூறிக்கொள்கிறார் என்றே எனக்குப் புரியவில்லை. நான் அதுபோல ஒரு சூழ்நிலையைக் காணவில்லை. ஏழையின் வீட்டு வாசலில் நீங்கள் காவலாளியைப் பார்த்திருக்கிறீர்களா? பிரதமர் 0.1% சதவீத மக்களுக்கான தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய ஆர்வமாக உள்ளார்.
பிரதமர் ஆர்வம் காட்டிய கங்கை தூய்மைத் திட்டம் என்னவானது? விவசாயிகளின் கடன் தள்ளுபடியின் நிலை என்ன? புல்லட் ரயில் கனவு நனவானதா? இன்று தேர்தல் பிரசாரத்தின் இறுதி நிலையில் பாஜக தலைவர்கள் ஒருவர் கூட மேம்பாடு குறித்து பேசவில்லை. இது மிகவும் வேதனை தரும் நிகழ்வு. வேலை இழப்பு, விவசாயிகள் தற்கொலை, ரஃபேல் ஒப்பந்த மோசடி என மக்களை வருத்தும் பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன.
தேர்தல் பேரணியில் பிரசாரம் செய்து வருகிறீர்கள். இதில் என்ன மாற்றத்தை உணர்ந்துள்ளீர்கள்.
மக்கள் நிறைய மாறியுள்ளனர். நான் பேசும் பிரசார கூட்டங்களில் பகடி, அங்கதம் கூடியுள்ளதாக நினைக்கிறேன். முதலில் ரஞ்சித் சிங் உள்ளிட்ட ராஜாக்களின் கதைகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகளைச் சொல்லி பேசினேன். இன்று மக்களின் பிரச்னைகளுக்கான சாத்தியமான தீர்வுகளை எடுத்துவைத்து பேசுகிறேன். எதிர் அணியினர் பலர் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
பாஜகவின் தேசியவாதத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள். என்ன திட்டம் உள்ளது?
பாஜகவினர் தேர்தலுக்கு முன் கூறிய 250 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இன்னும் கூட நிறைவேற்றப்படவில்லை. அவர்கள் முயற்சிக்காத, இன்னும் செயல்பாட்டில் நிறைவு காணாத திட்டங்கள் நிறைய உள்ளன. பாஜக அரசு நிறைய திட்டங்களில் படுதோல்வி அடைந்துள்ளது. தீவிரவாதத்தை பாக். அரசு திட்டமிட்டு செய்யவில்லை என்று கூறிய கருத்து பாஜக அரசின் ராஜ்நாத் சிங் கூட ஆதரித்து பேசினார். ஆனால் பாஜக அரசு தன் பாதுகாப்புத் தோல்வியை மறைக்க என்னை தேச விரோதியாக சித்திரிக்க முயற்சிக்கிறது.
நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா - விபோர் மோகன்