மக்களுக்காக பணியாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை
நேர்காணல்
நவீன் பட்நாயக், ஒடிஷா முதல்வர், ஒடிஷா.
இருபது ஆண்டுகளாக ஓடிஷாவை ஆண்டுவருகிறார் நவீன் பட்நாயக். பிற தலைவர்களைப் போல ஆக்ரோஷமான பேச்சு, சூறாவளிப் பிரசாரம் ஆகியவற்றை இவரிடம் பார்க்க முடியாது. தேர்தலில் எப்படி வெல்கிறார்? மக்கள் இவரை நம்புகிறார்கள். அவ்வளவுதான்.
இம்முறை தேர்தலில் வென்றால் ஐந்தாம் முறை முதல்வராகும் வாய்ப்புள்ளது.
பிஜூ ஜனதா தளம் மக்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. வளர்ச்சி, மேம்பாடு, நலம் ஆகியவற்றை மட்டுமே நாங்கள் முன் வைக்கிறோம்.
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?
பிஜூ பாபுவை மக்கள் விரும்பினார்கள். காரணம், மாநிலத்தில் அரசு சரியாக செயல்பட்டதுதான்.
ஒடிய மொழியில் சரளமாக பேசுபவரல்ல நீங்கள். மேலும் அமைதியாக வேலைசெய்பவரும் கூட. எப்படி மக்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள்.
நான் மக்களைப் புரிந்துகொள்கிறேன். மக்கள் என்னைப் புரிந்துகொள்கிறார்கள். அவ்வளவுதான்.
இம்முறை தேர்தலில் மக்களுக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் என்ன?
சமூகத்திலுள்ள அனைத்து பிரிவினருக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம், விவசாயிகளுக்கு காலியா என்ற திட்டத்தையும், கர்ப்பிணிகளுக்கு மமதா என்ற திட்டத்தையும் தயாரித்து உள்ளோம். இவை தேசிய அளவிலும் கவனம் பெற்றுள்ளன.
உங்களது காலியா திட்டம் பிற மாநில அரசுகளையும் கூட ஈர்த்துள்ளதே. எப்படி பிறந்தது விவசாயிகளுக்கான இத்திட்டம் என்று சொல்லுங்களேன்.
நான் இங்கு முதல்வராக இருந்தபோது, மாநிலம் உணவுக்காக பிற மாநிலங்களிடம் கையேந்தி நின்றது. இது என்னை பெரிதும் வருத்தியது. எனவே விவசாயத்துறையை நவீனமாக்க திட்டமிட்டு உழைத்து, இன்று கிரிஷி சம்மான் விருது பெறும்படி முன்னேறியுள்ளோம். 2009 ஆம் ஆண்டில் உணவு உற்பத்தியில் ஒடிஷா தன்னிறைவு கொண்ட மாநிலமாக மாறியுள்ளது.
விவசாயிகளுக்கு, நிலமற்ற விவசாயிகளுக்கு உதவும்படி காலியா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் பெண்கள் நிற்பதற்காக மூன்று சதவீத இடங்களை நீங்கள் ஒதுக்கியுள்ளீர்கள். பிற கட்சிகள் தயங்கும் நிலையில் எப்படி பெண்களை வேட்பாளர்களாக்க முடிவு செய்தீர்கள்?
இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. பெண்களை வேட்பாளராக்கினால் மாநிலம் வளம் பெறும் என நம்பி இதனைச் செய்துள்ளோம்.
ஒடிஷாவில் கூட பழங்குடி ஆண், தன் மனைவியை தோளில் தூக்கி வைத்து வரும் நிலை நாளிதழில் வெளியானதே, ஏன்?
அது நிச்சயம் மோசமான சம்பவம்தான். நாங்கள் எங்கள் சேவையை இன்னும் மேம்படுத்த முயற்சிக்கிறோம். செயல்களின் வழியாக எங்கள் அரசை மக்கள் மனதில் பதியவைக்க முயற்சிக்கிறோம்.
பாஜக, பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று உள்ளனர். மோடியின் பெயரால் ஒடிஷாவில் வெற்றி பெற்றுள்ளனர. இதுபற்றி உங்கள் கருத்து?
ஏழை மக்களை மேம்படுத்தவே நாங்கள் உழைத்து வருகிறோம். மற்றபடி எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல நாங்கள் விரும்பவில்லை. அதற்கான பதிலை மக்கள்தான் கூறவேண்டும்.
தேர்தல் பரபரப்பில் உங்களை எப்படி ரிலாக்ஸ் செய்துகொள்கிறீர்கள்?
டிவியில் செய்திகள், படங்களைப் பார்பேன்.
ஒடிய படங்களா?
இல்லை,. ஆங்கிலப்படங்கள்.
அரசியலுக்கு வரும் முன்பே நீங்கள் மூன்று நூல்கள் எழுதியுள்ளீர்கள் அல்லவா.
ஆமாம். ஆனால் இப்போது எழுத முடியுமா என்று தெரியவில்லை.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: தி வீக் ஆர் பிரசன்னா.
படம்: கலிங்கா டிவி