இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே டெக்னாலஜி!





If we had today's technology 2,000 years ago, what would technology be like today? © Dan Bright
பிபிசி




ஏன்? எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி

இன்றுள்ள அனைத்து தொழிற்நுட்பங்களும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருந்தால் எப்படியிருக்கும்?

ஜாலியான கற்பனைதான். ஆனால் இன்றுள்ள உலகம் நமக்கு கிடைத்திருக்காது. அப்போதே தொலைபேசி, அட்வான்ஸ் வாகனங்கள் என்று போரிட்டு உலகை உடைத்து கடாசியிருப்பார்கள். 

நம் முன்னோர்கள் வழியாக கத்தி, வாள், கோடாளி என போரிட்டு இன்று லேசர் கதிர்களை ஆயுதமாக்குவது வரை முன்னேறியிருக்கிறோம். இன்று உலகில் உள்ள மக்கள்தொகையில் அன்று 4 சதவீதம் மட்டுமே இருந்தனர் என்பதை மனதில் கொள்ளுங்கள். 

அதேசமயம் கரிம எரிபொருட்களின் ஆபத்தை உணர்ந்த முன்னோர்களால் நாம் இன்று முழுக்க சூழலுக்கு உகந்த பொருட்களை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உட்பட பயன்படுத்த தொடங்கியிருப்போம். குறைந்தபட்சம் அதிக மாசுபாடு பிரச்னைகளைக் குறைத்திருக்கவும் வாய்ப்புண்டு. 

வேக்குவம் ட்யூபில் மணிக்கு 8 ஆயிரம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டிருப்போம். பேசாமல் மூளை - கணினி இணைந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலை பார்க்கும் நுட்பம் வந்திருக்கும் என ஆச்சரியங்கள் நிறைந்த வாழ்க்கையாகவும் இருக்க வாய்ப்புண்டு. 

நன்றி: பிபிசி

பிரபலமான இடுகைகள்