அல்ட்ரா சென்சிடிவ் தெர்மாமீட்டர்!
அல்ட்ரா சென்சிடிவ் தெர்மாமீட்டர்!
டெல்லியைச் சேர்ந்த ஜாமியா ஆராய்ச்சியாளர்கள் குழு 27 டிகிரி முதல் -196 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிராபீன் டாட்ஸ் முறையில் தயாரிக்கப்பட்ட தெர்மோமீட்டர் இது. இதில் மைக்ரோ கெல்வின் அளவிலான மாறுதலையும் கண்டுபிடிக்க முடியும்.
இந்த தெர்மோமீட்டரை ஷேக் எஸ் இஸ்லாம் என்ற நானோசயின்ஸ் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த இயக்குநர் தலைமையிலான குழு கண்டுபிடித்திருக்கிறது. செல்சியஸ் வெப்பநிலையில் மாறும் மாறுதல்களை 300 மில்லி செகண்ட்ஸ் வேறுபாட்டில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது இது.
ஓராண்டில் ஏறத்தாழ 50 சுழற்சி முறைகள் உண்டு. இதில் அல்ட்ரா ஃபாஸ்ட் முறையில் தெர்மோமீட்டர் செயல்படுகிறது.
நன்றி: நானோஸ்கேல் அட்வான்சஸ்
படம் - செய்தி: தி இந்து