இளைஞர்களை உடைக்கும் இணைய வாழ்க்கை - ஹே பிரபு!



Image result for hey prabhu
iwmbuzz






ஹே பிரபு!

எம்எக்ஸ் பிளேயர் வெப்சீரிஸ்

எழுத்து: நிகித் பாவே

இயக்கம்: சசாங்கா கோஷ்


ட்விட்டரில் கமெண்டுகளை அள்ளிவிட்டு ரசிகர்களைப் பெற்றவன் வாழ்க்கையில் ஜெயிப்பதுதான் கதை. இதுல என்ன பாஸ் கதை இருக்கு என்பவர்கள் ஹே பிரபு சீரிஸ் பார்க்க தகுதியான ஆட்களே.

தருண் பிரவு, ட்விட்டரில் யங் லார்டாய் தன் ரசிகர்களுக்கு செம தீனி போட்டுக்கொண்டிருப்பவர். அவருக்கு லைஃப்ஸ்டைல் இதழொன்றில் வேலை கிடைக்கிறது. அவருக்கு அதில் பெரிய ஈடுபாடு கிடையாது. அதில் முதல் நாள் செய்யும் தவறாமல் ஆசிரியர் மீடா அவர்மீது கொலைவெறி ஆகிறார். அப்போது அவரது செல்ல நாயை கண்டுபிடித்துக் கொடுத்து சினம் சேர்ந்தாரைக் கொல்லி எனச்சொல்லி வேலையைக் காப்பாற்றிக் கொள்கிறார் பிரபு.


Image result for hey prabhu
angel web


அதேநேரம், கரிஷ்மா என்ற அவரது காதலி ஸ்நாப்சாட்டில் காமம் பழகச்சொல்லி டார்ச்சர் செய்து, பாத்ரூமில் சுய இன்பம் அனுபவிக்க வைக்கிறார். ஆனால் பிரபுக்கு மோட்டார் வேலை செய்யாதது பின்னர்தான் கரிஷ்மாவுக்கு தெரிய வருகிறது. கரிஷ்மாவே ப்ளோஜாப் செய்தும் பிரபுவன் கம்பத்தில் கும்பத்தை கவிழ்க்கவே முடியவில்லை. டென்ஷனான கரிஷ்மா, ட்விட்டர் மூலமே பிரபு ஒரு ஆண்மை இல்லாதவர் என்பதை பென்னி பெனிஸ் என ட்விட் தட்டவைக்கிறார்.


அப்புறம் என்ன? தி நேஷன் வான்ட்ஸ் டு நோ மேட்டர் அதானே! ரிபப்ளிக் டிவி அர்னாப்பாக உலகமே அவரைக் கேள்வி கேட்கிறது. இந்த நேரத்தில் பிரபுவின் பேக்கில் இருந்த காண்டமை அவரது அம்மா பார்த்துவிட வீட்டில் வெட்டு குத்தாகிறது.


Image result for hey prabhu
movies dunia


இதனால் தனிவீடு பார்த்து போய்விடுகிறார் பிரபு. ஆனாலும் அம்மாவுக்கு பிரபுவின் நடவடிக்கை பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் அருணிமா என்ற இளம்பெண்ணை வேலை கற்றுக்கொள்ள நியமிக்கிறார் இதழ் ஆசிரியர் மீடா. ஆணும் பெண்ணும் என்ன வேலை பார்த்துக்கொண்டே இருப்பார்களா?  அருணிமாவுக்கு பிரபு மீது ஒரு க்ரஷ் இருக்கிறது. சமயம் பார்த்து பிரபு தயங்கி கிஸ் கொடுக்க, உடலும் மனமும் ஒன்றுசேர்ந்து கர்லான் பெட்டைத் தேடும்போது, ட்விஸ்ட். பிரபுக்கு இஞ்ஜின் வேலை செய்யாதது குறித்து நினைவு வருகிறது. ஐயோ அவமானம் என ஓடி வீட்டுக்கு வந்துவிடுகிறார். தீயை அணைக்கத் தெரிஞ்சவன்தானே பத்தவைக்கணும் என்ற நீல.பத்மநாபனின் தியரியை இந்தியில் படித்திருந்த அருணிமா, பிரபுவைத் தேடி வீட்டுக்கு வருகிறார். ஏன் என்று கேட்கிறீர்களா? பதினைந்துநிமிடம் பாக்கி இருக்கிறது என்ன செய்வது?


பேச்சே கிடையாது. உடனே கட்டிப்பிடித்து கில்மாதான். ஆனால், பிரபுக்குத்தான் ....... யெஸ் அதோடு ஆறு எபிசோட் முடிகிறது.

இதில் முழு ஸ்கோர் செய்வது தருண் பிரபுதான்(ரஜத் பரமேச்சா). உடான் படத்தில் நடித்த ரஜத் பரமேச்சா காதல், காமம், தவிப்பு, பெற்றோரின் அத்துமீறலை, பாசத்தை ஏற்பதா, வேண்டாமா என மருகுவது என அட்டகாசப்படுத்தி இருக்கிறார். இவருக்கு ஈடுகொடுத்து இவரை டார்ச்சர் செய்கிறார் கலாபக் காதலி கரிஷ்மா.

இதோடு இறந்தகாலத்தில் பத்திரிகையாளராக வாழ்ந்து இளைஞர்களை புரிந்துகொள்ள முடியாமல் வெறுப்பைக் கக்கும் ஆசிரியர் மீடா(அச்சின்ட் கௌர்), பொருத்தமாக நடித்திருக்கிறார். மற்றபடி பிரபுவின் ஆபீஸ் தோழர்கள் கச்சிதமாக நவீன பத்திரிகையாளர்களுக்கு ஏற்றபடி உள்ளனர். அதிலும் காதல் செய்த தோழனின் கழுத்துக் காயத்தை பாராட்டும் பிரபுவின் கமெண்ட் ஆசம். 

Image result for hey prabhu
imdb


அருணிமா(பருல் குலாத்தி), சிறப்பாக கட்டுரை எழுதினாலும் அவளை ஓல்டு ஸ்கூல் என கிண்டல் செய்து அப்டேட் பண்ணச்சொல்லும் சீன் செம. அதில் மெல்ல பிரபுபக்கம் சாய்கிறார் அருணிமா. அப்புறம் என்ன? ஆணும் பெண்ணும் நட்பாக ஒரே வயதில் இருப்பது மன்மதனுக்கே பொறுக்காது. ரைட்டாக,  காதல் அம்புகளை விடுகிறார்.

நேராக பப் விட்டு வெளியே வந்ததும் பிரபு பாய்ந்துவிடுகிறார். கீழேதான் என இழுக்காதீர்கள். மேலே வாய் வேலை செய்கிறதல்லவா? இழுத்து வைத்து இச் கொடுக்கிறார். ஆனால் மெஷின் தண்ணீர் இழுக்காது என தெரிந்தும் யாராவது அதனைப் போடுவார்களா? அவர் வேதனையில் விலகிப்போகிறார்.  உடனே ஓ.. தன்னைப் பிடிக்கவில்லையோ என சந்தேகத்தில் அருணிமாவும் பிரபுவைப் பின்தொடர. மீதியை வீடியோவில் பார்த்து மகிழ்ந்திருங்கள் மக்களே. 

Related image
imdb


வெறும் காதல், காமம் மட்டுமல்ல; வீடு, பெற்றோர், இளைஞர்களை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதற்கான காட்சிகள், குறைபாட்டினால் நிலைகுலையும் இளைஞர்களின் மனம், இணையம், யதார்த்த வாழ்க்கை  இரண்டையும் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பிரச்னை என அனைத்தையும் ஆறு எபிசோடுகளில் சொல்லி சாதித்திருக்கிறார் சசாங்கா கோஷ்.

மற்றபடி இதனை இளைஞர்கள் பார்க்கவேண்டும் என்ற உந்துதல் இல்லாமலேயே இதில் ஏராளமான அ....ஆ.. காட்சிகள் உள்ளன. சமயத்தில் கதையையும் கவனித்தால் உங்களுக்கு சம்போக இன்பத்தோடு காட்சி இன்பமும் காவிரியாக பொங்கிப் பெருகும்.

- கோமாளிமேடை டீம்