பகிர்ந்து வாழ்வதே மில்லியனிய லட்சியம்!
பகிர்ந்து வாழ்வோம் - தப்பே இல்லை!
நீங்கள் சொந்தமாக வீடு வைத்திருந்தால் பெருமையாக இருக்கும். ஆனால் அதற்கான பராமரிப்பு என்ற விஷயம் வரும்போதுதான் செலவு தேள் கடித்தாற்போல கடுகடுக்கும். மாருதி காரே வைத்திருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறையேனும் அதனை ஓட்டிப் பார்ப்பது, சர்வீஸ் செய்வது என செலவுகள் இழுக்கும். இப்போது இப்படி யோசியுங்கள்.
சென்னையில் கட்டி வைத்த வீடுகளில் ஒன்றை வாடகை அல்லது லீசுக்கு பேசி வாடகைக்கு பர்னிச்சர்களை தரும் ஸ்டார்ட்அப்களில் பணம் கட்டி பொருட்களை வாங்கினால் எந்த பிரச்னையும் கிடையாது. அவர்களே கொண்டு வந்து கொடுத்துவிட்டு பின்னர் எடுத்துக்கொண்டும் சென்றுவிடுவார்கள். மேலும் இதற்கு நமக்கு தேவைப்படுவது தேய்மானச்செலவு மட்டுமே.
இன்று வேலை காரணமாக அங்குமிங்கும் ஏரியாவாரியாக அலையும்போது நாம் வாங்கி குவிக்கும் பொருட்கள் பெரும் சுமை.
1980 களில் ஒருவரிடம் என்ன இருக்கும்? நிலம், வீடு, தங்கம், கால்நடை என இருக்கும்.
ஆனால் இன்றைய இளைஞர்களிடம் லேப்டாப், ஹெட்போன், உடைந்த திரை கொண்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பார்கள். எங்கேனும் செல்வதற்கு சைக்கிளில் செல்வார்கள். வாழ்க்கை சுமை கொண்டதாக மாற்றிக்கொள்ள யாரும் தயாராக இல்லை என்பதே காரணம்.
வேலையும் கூட குறிப்பிட்ட இடம் சார்ந்ததாக இல்லாமல், இணையம் சார்ந்ததாக யோசிக்கிறார்கள். இடம் என்பது இன்று பொருட்களை ஸ்டோர் செய்து வழங்குவதற்குத்தான் தேவை. ஆனால் இன்றைய தொழில்துறையில் டெலிவரி சேவைக்கான வேகம்தான் அதிகம் தேவை. இதற்கு யோசிக்க உதவுவது வாடகை கம்பெனிகள்தான்.
வெளியே போக பைக், கார் வேண்டுமென்றால் அதனையும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அல்லது பீக் அவர் தவிர்த்து ஓலா, உபரை அழைக்கலாம். \
உறவுகளையும் இவ்வகையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என்ன சென்னையில் வீட்டு ஓனர்கள் இன்னும் இதற்கு செட் ஆகவில்லை. நாளைக்கு கூட நிலைமை மாறும். விடுங்கள்.
நன்றி: ஃப்யூச்சரிசம்
படம்: interwhao.co.jp