இடுகைகள்

பிளேக் நோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் பிளேக் நோய்!

படம்
  2005ஆம் ஆண்டுக்குப் பிறகு பிளேக் நோய், வளர்ப்பு பிராணியான பூனை மூலம் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரேகானில் பிளேக் நோயை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உயிர் எதிரி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பிளேக் நோயை ஏற்படுத்திய பூனைக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அதை காப்பாற்ற முடியவில்லை. ஐரோப்பாவில் 1346 -1353 காலத்தில் ஏற்பட்ட பிளேக் நோயால் 50 மில்லியன் மக்கள் இறந்தனர். இதை கருப்பு மரணம் என்று அழைத்தனர்.  பிளேக் நோய், யெர்சினா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா விலங்குகளிடம் காணப்படுகிறது. அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த பாக்டீரியா நுண்ணுயிரிகளை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பில் பார்க்க முடியும்.  நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் கடிப்பதன் வழியாக, அதன் உடலில் உள்ள எச்சில், மலம், சிறுநீர் வழியாக, பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து கிருமிகள் மனிதர்களின் நுரையீரலுக்கு செல்வதன் மூலம் என பிளேக் நோய் பரவ மூன்று காரணங்கள் உள்ளன. ஒருவரின் உடலில் பாக்டீரியா சென்ற பிறகு, அவருக்கு காய்ச்சல், தலைவலி, பலவீனம், உடலில் வலி, தளர்ச்சி ஆகிய அறி