புலிகளை பாதுகாக்க பாடுபட்ட வால்மிக் தாப்பர் - அஞ்சலிக் கட்டுரை
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும், புலிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளருமான வால்மிக் தாப்பர் காலமாகியுள்ளார். செரிமான உறுப்புகளில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார். உலகில் காடுகளை பாதுகாக்கும் செயல்பாட்டாளர்களில் முக்கியமானவராக வால்மிக் தாப்பர் இருந்துள்ளார். இரண்டு டஜன் நூல்களை புலிகளைப் பற்றி எழுதியுள்ளார். பிபிசி வெளியீடான லேண்ட் ஆப் டைகர் (1997) என்ற ஆவணப்படம் இவரது ஆளுமையை உலகிற்கு வலுவாக சொன்னது. வால்மிக் தாப்பர் கானுயிர்கள் பற்றி முறையாக கற்று அறிந்தவர் அல்ல ரந்தம்பூரில் உள்ள புலிகளைப் பார்த்து ஆய்வு செய்து ஐம்பது ஆண்டுகளாக அறிவை சேமித்து அதை உலகினரோடு பகிர்ந்து கொண்டார். 1987ஆம் ஆண்டு, ராந்தம்பூர் பவுண்டேஷன் என்ற தொண்டூழிய நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் வழியாக காடுகளை பாதுகாக்கும் செயல்பாடுகளை செய்தார். மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தஸ்ட்கர் என்ற மற்றொரு தொண்டூழிய நிறுவனத்தை தொடங்கி நடத்தினார். 2012ஆம் ஆண்டு டைகர் மை லைப், ராந்தம்பூர் அண்டு பியான்ட் என்ற நூலை எழுதினார். இரைச்சல் இல்லாத மனிதர்களிடமிருந்து தள்ளி தொலைவிலுள்ள இடங்களில் புலிகள் வாழ்கின்றன, வாழ விரும்புகின்றன என ச...