இடுகைகள்

சிறப்பு அந்தஸ்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜம்மு காஷ்மீரில் வெற்றிபெற்றுள்ள அசாதாரண மனிதர்கள்! - மருத்துவர் முதல் ஆசிரியர் வரை

படம்
                  காஷ்மீரில் சட்டக்கல்லூரி மாணவர் முதல் பல்மருத்துவர் , ஆசிரியர் என பல்வேறு நபர்கள் அரசியல் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் . அவர்களி்ல சிலரை நாம் இங்கு பார்ப்போம் . சபிர் அஹ்மது லோன் ரோஹமா பரமுல்லா தேசிய மாநாட்டு பணியாளராக 1999 ஆம் ஆண்டு தொடங்கி பணியாற்றினார் . பொதுமக்களுக்கான அமைதி சட்டம் அடிப்படையில் கைதான அரசியல்வாதிகளில் லோனுக்கும் முக்கிய இடமுண்டு . ஆறுமாதம் ஶ்ரீநகர் சிறைவாசம் அனுபவித்தவர் , மாநிலம் யூனியன் பிரதேச அந்தஸ்து பெற்றபிறகு விடுதலையானார் . மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நோக்கி போராடுவோம் என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸகூர் அஹ்மது மிர் , என்பவரை எதிர்த்து நின்று 1500 வாக்குகள் அடிப்படையில் வென்றுள்ளார் . 2014 இல் உருவாக்கப்பட்ட சாலைகளை மேம்படுத்துவேன் என்று கூறியுள்ளார் . இர்பான் ஹபீஸ் லோன் சங்ராமா , வடக்கு காஷ்மீர் 2007 இல் காஷ்மீர் பல்கையில் சட்ட மாணவராக படித்துக்கொண்டிருந்தார் . சிந்து ந்தி நீர் ஒப்பந்தம் காரணமாக காஷ்மீருக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி போராட்டம் செய்தார் . 13 ஆண்டுகாலமாக அரசியல்

இந்தியாவில் உருவாகிறது பெருஞ்சுவர்!

படம்
ஜனநாயக நாடுகளிலேயே அதிக நாட்கள் இணையம் தடைசெய்யப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. ஏறத்தாழ ஐந்து மாதங்கள் முற்றாக இணையம் துண்டிக்கப்பட்டு காஷ்மீரிலுள்ள தொழில்கள் அனைத்தும் துடைத்து அழிக்கப்பட்டன. இப்போதும் நீதிமன்ற உத்தரவுப்படி சில பகுதிகளில் மட்டும் இணைய வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்களை மட்டுமே இணையத்தில் காஷ்மீர் பயனர்கள் பார்க்க முடியும். மேலும் இம்முறையில் 301 வலைத்தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 4, 2019 அன்று இணைய இணைப்பு காஷ்மீரில் தடைசெய்யப்பட்டது. பின்னர், கார்கில் பகுதிகளில் டிசம்பர் 27, 2019 அன்று இணைய இணைப்பு வழங்கப்பட்டது. பிரச்னை ஏற்படுத்தாத பயனர்களுக்கு மட்டும் ஜன.25, 2020 அன்று 2ஜி இணைய இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அரசு அனுமதிக்கும் இணையதளங்களை மட்டுமே காண முடியும். மேலும் தகவல் அனுப்புவதற்கு என்கிரிப்ஷன் வசதியுள்ள வாட்ஸ் அப் போன்ற செயலிகளை தடை செய்துள்ளது மத்திய அரசு. அதற்கு பதிலாக அரசுக்கு ஆதரவான ஜியோ சாட் செயலியைப் பயன்படுத்தலாம். இதில் தகவல்களை அரசு இடைமறித்துப் படிக்க முடியும். அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், தனியார் நிறு

காஷ்மீரில் இணையம் நிறுத்தம்!

படம்
சிறப்பு அந்தஸ்து விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு, ஏறத்தாழ 60 நாட்களுக்கு மேலாக அங்கு இணையம் செயல்படவில்லை. அனைத்து சமூக வலைத்தளங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காரணம் கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு வன்முறை ஏற்படும் பயம்தான். இனி பியூட்டிஃபுல் காஷ்மீர் என நிச்சயம் பாட முடியாது. மாநிலமே கொந்தளிப்பில் கிடக்கிறது. எனவே அங்கு செயல்பட்டு வந்த இணைய இணைப்பு பற்றிய டேட்டா இதோ..... அக்டோபர் 3 ஆம் தேதியோடு அறுபது நாட்கள் காஷ்மீரில் இணையம் தடைசெய்யப்பட்டு இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு 180 முறை இணையம் தடை செய்யப்பட்டு உள்ளது. 2019 இல் இதுவரை 55 முறையும், கடந்த ஆண்டில் 68 முறையும் இணையம் தடை செய்யப்பட்டுள்ளதாக மென்பொருள் சுதந்திர சட்ட மையம் தகவல் கூறுகிறது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் இணைய இணைப்பு துண்டிப்பு 196 முறை நடைபெற்றிருக்கிறது.இதில் இந்தியாவில் மட்டும் 134 முறை நடந்திருக்கிறது. பாகிஸ்தான் என்று கேள்வி வருமே? ஆம் அங்கு 12 முறை இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. புர்கான் வானி படுகொலையான பின்னர் மொபைல் இணையம் 133 முறை காஷ்மீரில் தடை செய்யப்பட்டுள்ளது. - இந

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கான போராட்டம் நடந்ததா?

படம்
ஜம்மு காஷ்மீர் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களாக செயல்படவிருக்கிறது. சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தால் கட்டுப்படுத்தப்படும்படி மாநிலம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் வரவில்லையா? ஊடகங்கள் எதிலும் இத்தகைய காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது.  அரசு விசுவாசம்தான் இதற்குக் காரணம். ஆனால் பிபிசி, அல்ஜசீரா ஆகிய டிவி நிறுவனங்கள் உண்மையை வெளிக்காட்டி விட்டன. பத்தாயிரம் பேர்களுக்கு மேல் பங்கேற்ற பேரணியைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு, ரப்பர் மூடி கொண்ட தோட்டாக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். மேற்சொன்ன வீடியோக்கள் பொய் தேசபக்தி டிவி சேனலான ரிப ப்ளிக் டிவி கூறியது. கூடவே ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் இதற்கு சமூக வலைத்தளத்தில் போலிச்செய்தி என சப்பைக் கட்டு கட்டினர்.  உள்துறை அமைச்சகம் நடந்த போராட்டம் உண்மை. அதில் 20 பேர்தான் இருந்தனர் என விநோதமான காரணத்தைக் கூறியது. ஆனால் உண்மை என்ன என ஆல்ட் நியூஸ் வலைத்தளம் களமிறங்கி விளக்கியது. வீடியோவில் காணப்படும்  அங்கிருந்த விளம்பரப்பலகை, ஜீனப் சாயிப் பசூதி,  பேனரிலுள்ள போராட்ட வாச