கணித்தமிழ் மின்னிதழ் வெளியீடு - தமிழ் இணையக் கல்விக்கழகம்
தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் - டிஜிட்டல் நூலகப்பக்கத்தில் கணித்தமிழ் என்ற மின்னூல் வெளியாகி இருக்கிறது. இருபத்தி இரண்டு பக்கங்கள் கொண்ட இதழில், தமிழ் இணையக் கல்விக்கழகம் மேற்கொண்ட முக்கியமான தமிழ் வளர்ச்சிப் பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மின்னிதழ் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளோர் வாசியுங்கள்.
தொகுப்பாற்றுப்படை என்ற பக்கத்தில் சித்த மருத்துவ நூல்கள், அண்ணாவின் படைப்புகள் ஆகியவை உள்ளன. ஆர்வம் இருப்பவர்கள் சென்று நூல்களை வாசியுங்கள். அல்லது தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக