குறைந்த வேலை நேரத்தில் உழைத்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி?
குறைந்த நேரம் உழைப்பு, அதிக நேரம் வாழ்க்கை
அணுக்க முதலாளித்துவத்தை கொண்டுள்ள இந்தியா, தொழிலாளர் சட்டங்களை ஏற்கெனவே திருத்தி, உரிமைகளை பறித்து வருகிறது. அப்படியும் கூட மனநிறைவு பெறாத மனச்சிதைவு கொண்ட பேராசைக்கார கிழவாடிகள், இன்னும் அதிக நேரம் உழைக்க வேண்டும் என ஊளையிட்டு வருகிறார்கள். அதாவது, உழைத்தால் அவர்களுக்கு நல்லது. சொத்து மதிப்பு ஏறும். தொழிலாளர்களுக்கு உடைந்த மண்சட்டி ஓடு கூட கிடைக்காது. மாதசம்பளக்காரர்களிடம் வருமான வரித்துறை ஜேப்படி திருடன் போல நடந்துகொள்கிறது.
இந்திய அரசு வரியை வெளிநாடுகள் அளவுக்கு வாங்கிவிட்டு மருத்துவம், கல்வி, என கேள்வி கேட்டால் தனியாரிடம் துரத்திவிடுவார்கள். கார்த்திக் நேத்தாவின் வரிகளில் சொன்னால் ஒரு கண்ணில் அகங்காரம், மறுகண்ணில் ஓம்காரம் என்பது அரசைப்பற்றி புரிய வைக்க சரியாக இருக்கும்.
1926ஆம் ஆண்டு ஹென்றி போர்டு, தனது கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஐந்து நாட்கள் வேலை. எட்டு மணி நேரம் உழைப்பு என்ற விதிகளைக் கொண்டு வந்தார். இதை ஒன்பது மணி தொடங்கி ஐந்து மணி வரையிலான வேலை என்று கூட குறிப்பிடும் வழக்கம் இருந்தது.
அதிக நேரம் உழைக்கும் நாடுகளைப் பற்றி நிறையப் பேர் கட்டுரைகளை எழுதிவிட்டார்கள். நாம் அந்தப்பக்கம் போகவேண்டாம். குறைவான நேரம் உழைக்கும் நாடுகளைப் பற்றிப் பார்ப்போம்.
ஆண்டுக்கு இத்தனை மணிநேரங்கள் என புரிந்துகொள்ளுங்கள்.
ஐஸ்லாந்து - 1,448
ஸ்வீடன் - 1,437
ஆஸ்திரியா - 1,435
நார்வே - 1,418
டச்சு நாடு - 1,413
டென்மார்க் - 1,380
ஜெர்மனி - 1,343
கருத்துகள்
கருத்துரையிடுக