இடுகைகள்

நாசா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூரிய வெளிச்சத்தை தடுக்க தடுப்பரணாக அமையும் கண்ணாடி தாள்!

  பூமியைக் காக்க விண்வெளியில் தடுப்பு அரண் உலகை காக்க நிலப்பரப்பில், நீர்ப்பரப்பில் செய்யும் பல்வேறு திட்டங்களுக்கு ஜியோ எஞ்சினியரிங் என்று பெயர். ஆனால் இந்த திட்டங்கள் அங்கேயே நின்றுவிடக் கூடியவை அல்ல. விண்வெளியிலும் இந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என சில அறிவியலாளர்கள் முயன்றுள்ளனர். இவை கோட்பாடு அளவில் வியப்பு ஏற்படுத்துவனதான். ஆனால் சாத்தியமா என்பதுதான் யோசிக்க வேண்டியதாக உள்ளது. இன்று பூமியைக் காக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. அதில் முக்கியமானது, சூரியனின் வெப்பத்தை எப்படியாவது பிரதிபலித்து வெப்பத்தையும், புற ஊதாக் கதிர்களையும் தடுப்பது. இந்த வகையில் ஒரு முயற்சியை ஜேம்ஸ்   என்பவர் 1989ஆம் ஆண்டு செய்தார். அதாவது பூமியின் புவி வட்டப்பாதையில் சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகளை உருவாக்கி பொருத்திவிடுவது…. இதன் மூலம் அந்த சூரிய வெளிச்சம் அப்படியே விண்வெளிக்கு சென்றுவிடும். கதிர்வீச்சும்தான். இதனால் பூமி எளிதாக வெப்பமயமாதல் பாதிப்புக்கு உட்படாது. மக்களும் பாதிப்படைய மாட்டார்கள். கதையின் மையம் என தந்தி அளவுக்கு சுருக்கமாக சொல்லும் விவகாரம்தான். ஆனால் செய

டைம் 100 - சாதித்த மனிதர்கள் - பார்க்கர், சோனியா, கிரிகோரி, பன்செல்

படம்
  சோனியா கிரிகோரி  பார்க்கர் பன்செல் கான்டாஸ் பார்க்கர்  விழிப்புணர்வோடு இயங்கும் விளையாட்டு வீரர் கான்டாஸ் பார்க்கர் கதை அடுத்த தலைமுறை வீரர்களை பெரும் உற்சாகப்படுத்தக்கூடியது. அவர் இரண்டாவது முறையாக டபிள்யூ என்பிஏ சாம்பியன்ஷிப்பை வென்றது மறக்க முடியாத தருணம். இதனை அவர் சிகாகோ ஸ்கை என்ற அணியில் இடம்பெற்று சாதித்தார். தான் விளையாடிய விளையாட்டுகளில் புரட்சியை ஏற்படுத்தியவர் எனலாம். நான் அவரது சக விளையாட்டு வீரர் என்ற முறையில் அவரின் ஆற்றலை உணர்ந்துள்ளேன். அவரது ஆர்வத்தை மதிக்கிறேன். அவர் தான் விளையாடும் இடங்களுக்கு தன் மகளைக் கூட்டிச்செல்வார்.  பாலின சமத்துவம் பற்றி வெளியாகியிருக்கும் டைட்டில் 9 என்ற ஆவணப்படத்தையும் கான்டாஸ் தயாரித்திருக்கிறார். தனது செயல்பாடுகள் மூலமாக தொடர்ந்து அவர் வளர்ந்துகொண்டே இருக்கிறார். தனது வாழ்க்கையை வெளிப்படையாக முன்வைப்பது எளிதானதல்ல.  டிவைன் வேட்  2 சோனியா குவாஜாஜாரா sonia guajajara அமேஸானின் பாதுகாவலர்  சோனியாவின் பெற்றோர் படிப்பறிவற்றவர்கள். எனவே சோனியா தனது பத்தாவது வயதில் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறினார். புள்ளியியலில் பட்டம் பெற்றார். 500 ஆண்டுகள்

செவ்வாயில் கேட்ட ஒலியை பதிவு செய்யும் நாசாவின் முயற்சி

படம்
  செவ்வாயில் கேட்ட ஒலி! பல்லாண்டுகளாக செவ்வாய் கோளின் தரையில் என்ன ஒலி கேட்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அமெரிக்காவின் நாசா அமைப்பு, இதை ஆராய மார்ஸ் போலார் லேண்டர், பீனிக்ஸ் ஆகிய திட்டங்களை உருவாக்கியது. ஆனால் இவை ஒலியை பதிவு செய்யமுடியாமல் தோல்வியுற்றன. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாசாவின் பர்சீவரன்ஸ் ரோவர் (Perseverance Rover), செவ்வாயில் தரையிறங்கியது.  ரோவரில் உள்ள 2 மைக்ரோபோன்களின் மூலம் செவ்வாயின் தரைப்பரப்பு ஒலி, பதிவு செய்யப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் கூடுதலாக பதிவான ஒலிக்கோப்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதன்மூலம், செவ்வாய் கோளில் காற்றில் ஒலி எப்படி பரவுகிறது என்ற தகவல்களை அறிந்துகொண்டனர்.  செவ்வாயில் காற்றின் அழுத்தம் 0.6 கிலோ பாஸ்கல் ஆகும். பூமியை விட செவ்வாயில் காற்றின் அழுத்தம் 200 மடங்கு குறைவு. கரியமில வாயு நிறைந்துள்ள சூழலில் வெப்பநிலை - 63 டிகிரி செல்சியஸாக உள்ளது. செவ்வாயில் குளிர் அதிகம் என்பதால், ஒலி நொடிக்கு 240 மீட்டர் வேகத்தில் செல்கிறது.  பூமியில், ஒலி நொடிக்கு 340 மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. செவ்வாயில் கேட்கும் ஒலி பற்றி

அமெரிக்காவின் முதல் விண்கலம் - ஸ்கைலேப்

படம்
  அமெரிக்கா உருவாக்கிய முதல் விண்கல ஆராய்ச்சி மையம், ஸ்கைலேப். 1973ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி, நாசா இதனை விண்ணில் ஏவியது. மூன்று விண்வெளி வீர ர்களுடைய குழு இந்த விண்கல ஆராய்ச்சிக் கலத்தில் நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சிகளை செய்தனர். இதில் புவிவட்டபாதை, பூமியைப் பற்றிய ஆராய்ச்சி, சூரியனைப் பற்றிய ஆய்வக ஆய்வு என நிறைய விஷயங்களை அங்கு செய்தனர் . ஸ்கைலேப் விண்ணில் ஏவப்பட்டு பதினொரு நாட்கள் கழித்து மே 25 அன்று மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு கிளம்பினர். சார்லஸ் கான்ராட், பால் வெய்ட்ஸ், ஜோசப் கெர்வின் ஆகியோர் தான் கிளம்பிய மூவர். இவர்கள் விண்கலத்திற்கு சென்று நிறைய பழுதுகளை நீக்கினர்.மைக்ரோமெட்ராய்ட் கவசம், சோலார் பேனல் பழுதுப்பட்டிருந்தது  அடுத்த குழுவினர் 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணுக்கு கிளம்பினர். இவர்கள் அங்கு சென்று 59 நாட்கள் இருந்தனர். பணியாற்றினர்.  1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்ற மூன்றாவது குழுவினர். 84 நாட்கள் விண்ணில் இருந்தனர். பிறகு மெல்ல ஸ்கைலேப்பின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. நாசா, கீழிருந்து அனுப்பிய கட்டளைகள் மூலம் விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது. பூமிய

விண்வெளியை ஆக்கிரமிக்கும் செயற்கைக்கோள்!

படம்
  புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் அதிகரித்து வருகின்றன.  செயல்படாத செயற்கைக்கோள்களின் மோதலைத் தவிர்க்கவும், அதன் போக்குவரத்தைச்  சீர்படுத்தவும் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் முயன்று வருகின்றன.  தற்போது உலக நாடுகளில் ஆய்வுக்காகவும், இணையச்சேவை சார்ந்தும் ஏராளமான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால் புவி வட்டப்பாதையில் ஏராளமான செயற்கைக்கோள்கள் சுற்றி வருவதால், புதிய செயற்கைக்கோள்களுக்கு இடமேயில்லை என்ற சூழ்நிலை உருவாகிவருகிறது. உலகநாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மைய பொறியாளர்கள் விண்வெளியில் இயங்கும், செயல்படாத செயற்கைக்கோள்களின் போக்குவரதை ஒழுங்கு செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 22ஆம் தேதி சர்வதேசி விண்வெளி மையத்திற்கு எச்சரிக்கை ஒன்று வந்தது. பூமிக்கு 400 கி.மீ . தொலைவுக்கு மேலே செயற்கைக்கோளின் பாகம் ஒன்று,  விண்வெளி நிலையத்தை தாக்க வருவதாக ஆய்வாளர்கள் கூறினர். உடனே நிலையத்திலிருந்த ராக்கெட்டை உசுப்பி ஆய்வாளர்கள் மோதலிலிருந்து தப்பினர். 1999ஆம் ஆண்டு தொடங்கி சர்வதேச விண்வெளி நிலையத்தி

விண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி!

படம்
  விண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்கலத்திற்காக புதிய வகை பேட்டரிகளை கண்டுபிடித்துள்ளது.  நாசா நிறுவனம் விண்வெளிக்கு பல்வேறு விண்கலங்களை தயாரித்து அனுப்பி வருகிறது. இவை செயல்படுவதற்கான ஆற்றல் தேவைக்கு சோலார் பேனல்கள், பேட்டரிகள், அணு பேட்டரிகள் உதவி வருகின்றன.  விண்கலத்தில் உள்ள கேமராக்கள், ரோவர்கள், வழிகாட்டும் வசதிகள் செயல்பட ஆற்றல் தேவை. இதனை சூரிய ஆற்றல் மட்டும் நிறைவு செய்துவிட முடியாது.  ஒளி படாத இருளிலும் ஆராய்ச்சிகள் தடைபடாமல் இருக்க பேட்டரிகள் உதவுகின்றன. கோள்களில் இருளான பகுதிகளில் ஆராய்ச்சி தடைபடாமல் இருக்க கொசுவர்த்தி சுருள் போல மெதுவாக ஆற்றல் செலவிடும்படியான பேட்டரிகள் தேவை. இதற்காக நாசா நிறுவனம், புளோரிடா பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் சார்ந்த இரண்டு குழுக்களுக்கு ஆராய்ச்சி செய்ய நிதியுதவி அளித்து வருகிறது.  செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஆப்பர்சூனிட்டி, ஸ்பிரிட் என இரண்டு ரோவர்களிலும் சோலார்பேனல்கள், பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் இவை செவ்வாயில்  நிலவிய தூசிப்புயல் சூழல்களுக்கு தாக்குப்பிடிக்கவில்லை. அடு

நிர்வாகத்தில் சாதித்த பெண்கள்! - கீது வர்மா, கீதா கோபிநாத், மாதுலிகா குகாதாகுர்தா, கிருத்திகா ரெட்டி, ரேவதி அதுவைத்தி

படம்
              சாதனைப் பெண்கள் கீது வர்மா ஆரோக்கியமான உணவுப்ப்பொருட்கள் பிரிவு தலைவர் , இந்துஸ்தான் யுனிலீவர் கீது வர்மா , நிறுவனத்தின் ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் பிரிவை விரிவாக்கியுள்ளார் . உலகமெங்கும் ஆரோக்கியமான பானங்கள் , உணவுப்பொருட்களுக்கான கவனம் அதிகரித்து வருகிறது . நாங்கள் இப்போது உள்ளூரில் விளையும் பல்வேறு பொருட்களை எங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தி வருகிறோம் , நோய் எதிர்ப்பைத் தூண்டும் விட்டமின் சி , ஜிங்க் ஆகியவற்றை நாங்கள் உணவுப்பொருட்களில் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம் என்றார் . 2018 ஆம் ஆண்டு நிறுவனத்தில் புதிய பொறுப்புக்கு வந்தார் கீது வர்மா . வெஜிடேரியன் பட்சர் , கிரேஸ் ஆகிய பிராண்டுகளை இவர் கையகப்படுத்தி நிறுவனத்தின் வருமான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளார் . நாங்கள் இப்போது இறைச்சியை தவிர்த்து தாவர புரதங்களில் இருந்து இறைச்சியை தயாரிக்க உள்ளோம் என்றார் . கீதா கோபிநாத் உலக நாணய நிதியத்தின் பெண் பொருளாதாரவியலாளர் ரகுராம் ராஜனுக்குப் பிறகு இரண்டாவது இந்தியராக உலக நாணய நிதியத்தில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர் கீதா . தனது ப

நாசா கண்டுபிடித்த அட்டகாசமான பொருட்கள்!

படம்
                  நாசாவின் மகத்தான கண்டுபிடிப்புகள் அமெரிக்காவின் நாசா அமைப்பு பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு அதன் விளைவாக பல்வேறு சாதனங்களை தயாரித்துள்ளது . அவை வெகுஜனத்தின் பயன்பாட்டிற்கும் வந்துள்ளது . அவற்றைப் பார்ப்போம் . கிராஷ் ஹெல்மெட் . 1966 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹெல்மெட் இது . இலகுவான பஞ்சினால் தயாரிக்கப்பட்டது . தலையை அடிபடாமல் காக்க ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்டது . கார்ட்லெஸ் டூல்ஸ் 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது . நிலவில் ஆய்வாளர்கள் சாம்பிள்களை எடுக்க உருவாக்கப்பட்ட கருவி . கீறல் விழாத குளிர் கண்ணாடி இதுவும் விண்வெளி வீரர்களுக்காகவே தயாரிக்கப்பட்டது . கணினி அப்போலோ திட்டத்தின்போது உருவாக்கப்பட்டது . நவீன கோல்ப் பந்து 1981 ஆம் ஆண்டு தரைப்பரப்பு சார்ந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது . ஜாய்ஸ்டிக் மினி பஸ் டிரைவரின் கியர் லிவர் போல பாவித்து கேம் விளையாடுபவர்களே , இந்த கண்டுபிடிப்பும் கூட நாசாவின் உபயம்தான் . இதனைப் பயன்படுத்தி அப்போலோ லூனார் ரோவர் இயக்கப்பட்டது . இதன் மூன்று திட்டங்களுக்கு பயன்

சூரியனை நெருங்குவது சாத்தியமா? மிஸ்டர் ரோனி

படம்
        மிஸ்டர் ரோனி சூரியனில் வேதிவினைகள் நடைபெறவில்லை என்றால் அதனை எளிதாக சென்றடையமுடியுமா? சாத்தியமில்லை. அதன் வெளிப்பரப்பு 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட்டில் கொதித்து வருகிறது. பீட்ஸா வேகும் ஓவனில் உள்ள வெப்பம் 700 டிகிரி பாரன்ஹீட்தான். சூரியன் பூமியிலிருந்து 9,30,00,00,000 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. 65 கி.மீ வேகத்தில் குளிர்பானம் குடிக்க கூட நிற்காமல் சென்றால் சூரியனுக்கு சென்று சேர 160 ஆண்டுகள் ஆகும். நிலவைப் போல நானூறு மடங்கு தூரம் கொண்டது சூரியன். விண்கலத்தில் சென்றாலும் கடினமான பயணமாகவே இருக்கும். அலுமினிய விண்கலத்தில் சென்றால் அதன் உருகும் வெப்பநிலை 1220 டிகிரி பாரன்ஹீட் வரைதான் பொறுத்துக்கொள்ளமுடியும். அதற்குமேல் விண்கலம் உருகிவிடும். அதன் வெப்பத்தை உள்ளிழுக்காமல் தடுக்கும் கவசங்கள் இருந்தால் மட்டுமே சூரியனுக்கு அருகில் செல்லமுடியும். இல்லையெனில் தேங்காய்க்குள் பொட்டுக்கடலை, வெல்லம் போட்டு சுட்டு சாப்பிடுகிறோம் அல்லவா? அதுபோல விண்கலத்தில் வீர ர்கள் வெ்ந்து கருகிவிடுவார்கள். வெப்பத்தோடு கதிர்வீச்சு பிரச்னையும் உண்டு. 2004இல் ஏவப்பட்ட மெர்குரி மெசஞ்சர் இந்த வகையில் 30 மில்லியன்

பிட்ஸ் - இஸ்ரோவின் சாதனைகள்!

படம்
இஸ்ரோ - சாதனைத் துளிகள் 1981ஆம் ஆண்டு, இஸ்ரோவின் ஆப்பிள் செயற்கைக்கோள் மாட்டுவண்டியில் வைத்துக் கொண்டுவரப்பட்டது. மோட்டார் வண்டிகளில் கொண்டு வரும்போது, அதிலுள்ள உலோகங்களோடு ஆன்டெனாவின் சிக்னல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கருதினர். 2013 ஆம் ஆண்டு இஸ்ரோ, செவ்வாயை ஆராய்வதற்கான விண்கலமாக மங்கல்யானை விண்ணில் ஏவியது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற இத்திட்டத்தின் செலவு 450 கோடி ரூபாய். 2008ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்ற சந்திரயான் 1, நிலவில் தடம் பதித்த நாடுகளில் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியாவுக்குக் கொடுத்தது. இஸ்ரோ கடந்த நாற்பது ஆண்டுகளாக செய்த பணிகளுக்கான செலவுத்தொகை, நாசாவின் ஓராண்டு பட்ஜெட்டில் அடங்கிவிடும். இஸ்ரோவின் வர்த்தக ராக்கெட் ஏவும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் (Antrix), 2008 ஆம் ஆண்டு இந்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்றது. 2016 -2019 வரையில் 239 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, 6,289 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.  இஸ்ரோ, பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சுபார்கோ தொடங்கியபிறகு ஆறு ஆண்டுகள் கழித்து தொடங்கப்பட்டது. இன்று இஸ்ர

நிலவுச்சாதனை - 50 வது ஆண்டு!

படம்
நிலவில் மனிதர்கள் கால் வைத்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. நாசாவின் பெயர் சொல்லும் வரலாற்றுச் சாதனையில் பிற மனிதர்களின் வல்லுநர்களின் பங்களிப்பும் உள்ளது. உலக வானியல் யூனியன் 1955 ஆம் ஆண்டு கூடியது. வானியலாளர் ஜெரார்டு குய்ப்பர், நிலவுக்கு செல்வதற்கான வழிமுறைகளையும் வரைபடங்களையும் பலரிடமும் இச்சந்திப்பில் கோரினார். ஏனெனில் அப்போது ஓவியமாக வரைந்த படங்கள்தான் நம்மிடம் இருந்தது. இந்த கோரிக்கைக்குப் பிறகுதான் நிலவைக் காண்பதற்கான தொலைநோக்கிகள் தயாரிக்கப்படத் தொடங்கின. டக்சனிலுள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் ஆய்வகத்தை அமைத்த ஜெரார்டு, நிலவை தொலைநோக்கிகள் மூலம் படம்பிடிக்கத் தொடங்கினார். அப்போது தேர்தலில் வென்ற ஜான் எஃப் கென்னடி, நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதே தனது கனவு என்று கூறி நாசாவை ஊக்கமூட்டினார். அதன்பிறகு ஜெரார்டு உழைப்பில் உருவான நிலவின் படங்கள் அரசின் தேசிய சொத்தாயின. இவருக்கு ஆங்கிலேயர் விட்டேகர் ஆராய்ச்சியில் உதவினார். அமெரிக்கா நிலவுக்கு அனுப்பிய ரோபோட்டிக் சர்வேயர் எடுத்த படங்களை விட இவரது தொலைநோக்கி படங்கள் பிரமாதமான தரத்தில் இருந்தன. அப்போலோ திட்டங்கள் தொடங

நிலவுக்கு போகலாமா?

படம்
இஸ்ரோ சந்திரயானைத் தொடர்ந்து அதன் அடுத்த பார்ட்டுக்கு சென்றுவிட்டது. வரும் ஜூலை 15 ஆம் தேதி நிலவுக்கு அடுத்த பயணம் தொடங்குகிறது. சந்திரயான் 1 2008 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இத்திட்ட மதிப்பு 978 கோடி ரூபாய். ஜிஎஸ்எல்வி 3 சந்திரயான் 2 செயற்கைக்கோளை விண்ணில் கொண்டு செல்லவிருக்கிறது. 3.8 டன் எடை கொண்ட செயற்கைக்கோள் இது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செல்லும் இந்த ராக்கெட்டில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய கருவிகள் உண்டு. சந்திரயான் 2 செயற்கைக்கோளை சுமக்கும் ஜிஎஸ்எல்வி 4 டன் எடையைத் தூக்கிச்சுமக்கும் சமர்த்து கொண்டது. இதனை பாகுபலி என்று அழைக்கின்றனர். நிலவில் நிலவும் அசாதாரண சூழல்களைச் சமாளித்து ரோவர் அங்கு சரியாக இறங்குவது சாதனை. அத்தனை தகவல் தொடர்பையும் சரியாக ஒருங்கிணைப்பதும் அடுத்த சாதனை. இதில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 14 கருவிகளும், நாசாவின் கருவி ஒன்றும் உள்ளது. விக்ரம் எனும் ஆர்பிட்டரில் உள்ள ரோவர் நிலவில் இறங்கி 14 நாட்கள் சோதனை செய்ய உள்ளது. ரோவர் ஆர்பிட்டர் வழியே தகவல்களையும் படங்களையும் அனுப்ப உள்ளது. நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

நிலவுக்கு ரீஎன்ட்ரி அவசியமா?

படம்
நிலவுக்கு மீண்டும் செல்ல அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக நிதி ஒதுக்குவதற்கான மசோதா விரைவில் தயாரிக்கப்பட்டு காங்கிரசில் அளிக்கப்படவுள்ளது. 1972 ஆம் ஆண்டு விண்வெளி வீரர் ஜூன் செர்னன், உள்ளிட்டோர் அடங்கிய குழு நிலவுக்கு சென்றது. அதற்குப்பிறகு அமெரிக்கா வேறு வேறு கோள்களுக்கு விண்கலங்களை அனுப்பியது. தொலைநோக்கிகளை அனுப்பி கண்காணித்ததே ஒழிய நிலவைக் கண்டுகொள்ளவில்லை. அடிக்கடி ஒரே விருந்தினர் வீட்டுக்கு போனால் போரடிக்குமா இல்லையா? ஆனால் ட்ரம்ப் வெள்ளையர்களின் பெருமையை மீட்க வந்த பெருந்தகையல்லவா? எனவே நாம் மீண்டும் நிலவுக்கு போகப்போகிறோம். ரெடியாக இருங்கள். இதற்கான செலவு 1.6 பில்லியன் டாலர்கள். சீக்கிரமாக பட்ஜெட் தயாரியுங்கள் என உத்தரவிட்டு, அறிவிப்பையும் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்து விட்டார். திட்டத்தின் பெயர் ஆர்ட்டெமிஸ். இது அப்பல்லோவின் சகோதரி பெயர். எதற்கு இப்பெயர் சூட்டியுள்ளனர்? இந்த திட்டத்தில் முதன்முதலாக பெண் ஒருவரையும் இணைத்துக்கொண்டு செல்லவிருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. ஆனால் இதற்கு மக்களிடையே பெரிய ஆர்வமில்லை. கெ