பிட்ஸ் - இஸ்ரோவின் சாதனைகள்!


Image result for chandrayaan 2 launch




இஸ்ரோ - சாதனைத் துளிகள்


1981ஆம் ஆண்டு, இஸ்ரோவின் ஆப்பிள் செயற்கைக்கோள் மாட்டுவண்டியில் வைத்துக் கொண்டுவரப்பட்டது. மோட்டார் வண்டிகளில் கொண்டு வரும்போது, அதிலுள்ள உலோகங்களோடு ஆன்டெனாவின் சிக்னல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.

2013 ஆம் ஆண்டு இஸ்ரோ, செவ்வாயை ஆராய்வதற்கான விண்கலமாக மங்கல்யானை விண்ணில் ஏவியது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற இத்திட்டத்தின் செலவு 450 கோடி ரூபாய்.

2008ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்ற சந்திரயான் 1, நிலவில் தடம் பதித்த நாடுகளில் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியாவுக்குக் கொடுத்தது.

இஸ்ரோ கடந்த நாற்பது ஆண்டுகளாக செய்த பணிகளுக்கான செலவுத்தொகை, நாசாவின் ஓராண்டு பட்ஜெட்டில் அடங்கிவிடும்.
இஸ்ரோவின் வர்த்தக ராக்கெட் ஏவும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் (Antrix), 2008 ஆம் ஆண்டு இந்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்றது.

2016 -2019 வரையில் 239 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, 6,289 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.

 இஸ்ரோ, பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சுபார்கோ தொடங்கியபிறகு ஆறு ஆண்டுகள் கழித்து தொடங்கப்பட்டது. இன்று இஸ்ரோ, 65 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. பாகிஸ்தான் இரண்டு செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளது.

இஸ்ரோ, புவன் எனும் பூமியை 2டி, 3டி வடிவில் பார்க்கும் வசதியை உருவாக்கியுள்ளது. இது கூகுள் எர்த் வசதியை ஒத்தது.
2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் இஸ்ரோ 104 செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி சி37 ராக்கெட்டில் ஏற்றி அனுப்பி சாதனை செய்தது. செயற்கைக் கோள்களின் மொத்த எடை 1380 கி.கி.


நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா