சிரிய சிறைகளில் என்ன நடக்கிறது தெரியுமா?




He's Bringing the Horrors of Syrian Prisons to the Stage





நம்பிக்கை நாயகர்கள்!  - அலி அபு டென்



சிறை. இருட்டில் முழ்கிய அறைக்குள் இருந்தால் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாது. அலி அபு டென் அப்போதுதான் தூங்கி எழுந்தார். சிறிது நேரத்தில் காலை உணவுக்கான அழைப்பு வந்தது. ஒரு முட்டையை வேகவைத்து ஐந்து பேர் சாப்பிட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. கதவுகள் திறக்கப்பட உணவுக்கூடத்திற்கு சக கைதிகளோடு வந்தார். அங்கு கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது. சிறைக்காவலர் சோறு, கோழிக்குழம்பில் சிறுநீர் பெய்துகொண்டிருந்தார். தாயோழி என லெபனான் கைதி ஆவேசமாக முன்னேற, அபு உடனே அவரைத் தடுத்தார். உணர்ச்சியை கட்டுப்படுத்தியபோதுதான் அக்கைதி உணர்ந்தார். தான் அப்படி காவலரை சத்தமாக சொன்னால், எலும்புகள் மொத்தமாக நொறுக்கப்படும் என்று.

Watering 7
திரைப்படத்தில் ஒரு காட்சி!


இது அபுவுக்கு மட்டுமல்ல; சிரியாவில் சிறைப்பட்ட கைதிகள் தினசரி சந்தித்து வந்த கொடுமைகள்தான் அவை. அவற்றை அபு பின்னாளில் திரைப்படமாக்கியபின்தான் அக்கொடூரங்களை உலகம் அறிந்தது. சிறை என்பது தனி உலகம். பெரும்பாலும் எந்த நியதிகளுக்கும் கட்டுப்படாத அங்கு, உருப்படியான செயல்கள் நடக்கும் என குழந்தை கூட நம்பாது. சிறையிலிருந்து விடுதலையான அபுவுகுக்கு இன்று 69 வயது.

2005 இல் இவர் உருவாக்கிய அரசியல் கைதிகள் மீட்பு இயக்கம் 1975-90 காலகட்டத்தில் சிறைதண்டனை வழங்கப்பட்ட கைதிகளை மீட்கும் முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக அரசிடம் பேசி, செயற்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவரது அமைப்பு, உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி ஒரு திரைப்படம் , மற்றும் இரண்டு நாடகங்களை உருவாக்கியது. இதன்மூலம் உள்நாட்டுப் போர் பாதிப்பை உலக மக்களிடம் கொண்டு சென்றது. அரசு இவர் பேசும் உண்மையை மறைக்க வீட்டில் ரெய்டு சென்றது. சிறைச்சாலை கொடுமையால் நெருங்கிய ஐந்து நண்பர்களை பறிகொடுத்தார்.

சிறை மீண்டபிறகும், தன் குழந்தைகளை அவரால் நினைவுகூர முடியவில்லை. இந்த சிரமங்களைக் கடந்தும் போர்க்கொடுமைகள், சித்திரவதைகளை அவர் மக்களுக்கு கூற நினைத்தார். இதற்கு ஜெர்மனியைச் சேர்ந்த மோனிகா போர்க்மனைச் சந்தித்தார். இவர்தான் அபு திரைப்படம் எடுக்க ஊக்கம் கொடுத்தார். இன்று தான் நினைத்த விஷயங்களைச் செய்துவிட்டார். பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளின் இறப்புக்கான சாட்சியாக அபுவின் படம், சிரியாவின் சிறைக் கொடுமையை உலகிற்கு சொல்லிக்கொண்டிருக்கிறது.

நன்றி: Ozy - Mat nashed