உளவியல் ரீதியாக அகதிகளை மேற்கு நாடுகள் வதைத்து வருகின்றன- அகதியின் குரல்!
நேர்காணல்
இரானிய குர்தீஸ் எழுத்தாளர் பெருஸ் பூசானி
ஆஸ்திரேலியாவிலுள்ள மானுஸ் முகாமில் வசித்து வருகிறார் பெருஸ் பூசானி. அங்குள்ள வாழ்க்கையை தொடர்ச்சியாக உலகின் பார்வைக்கு கொண்டு வருவதில் இவர் முக்கியமானவர்.
பெரும்பாலான அகதிகளை நாடுகள் குற்றவாளிகள் போலவேதான் நடத்துகின்றன. நீங்கள் என்ன அனுபவங்களைப் பெற்றுள்ளீர்கள்.
சிறையில் நீங்கள் இருந்தால் உங்களுக்கென அங்கு சில உரிமைகள் உண்டு. மேலும் எத்தனை நாட்கள் அங்கிருப்பீர்கள் என்பதற்கு ஒரு கணக்கு உண்டு. அகதிகள் முகாமில் அதற்கான வாய்ப்பு இல்லை. போன் பேசக்கூட அனுமதி பெறவேண்டும். இங்கு பல்வேறு உரிமைகள் உங்களுக்கு அளிக்கப்படாது.
நேரம் இங்கு செல்வதே கடினம். தீவிரமான உளவியல் பாதிப்பை நீங்கள் எதிர்கொள்வதாக இருக்கும்.
எப்படி நிலைமையை சமாளிக்கிறீர்கள்?
இங்கு நடக்கும் அநீதிகளுக்கு இரண்டு வகையில் பதிலளிக்கலாம். ஒன்று போராட்டம். இரண்டு அதனை எழுத்தாக்குவது. இங்கு நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நடத்தியுள்ளோம். இது பொதுவான முறைதான். உடலை ஆயுதமாக்கி போராடுவது புதிதா என்ன?
2015 முதல் 2017 வரையில் நாங்கள் அதிகாரிகளால் நான்கு முறைக்கு மேல் தாக்கப்பட்டுள்ளோம். இவர்கள், உள்ளூர் மக்களை வைத்து எங்களை தாக்க வைக்கிறார்கள். நாங்கள் அவர்களின் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குகிறோம் என்பது போன்ற பார்வையை சூழ்ச்சியாக உருவாக்குகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
பயத்தை வைத்து மக்களை பிரிப்பதாக எப்படி கூறுகிறீர்கள்?
பயத்தை வைத்துத்தான் முகாம்களை மக்களிடமிருந்து பயப்படுத்தி வைக்கிறார்கள். முகாம் மக்கள் வெளியில் போனால்தான் உள்ளூர் மக்களை சந்தித்து இந்த பயத்தைப் போக்க முடியும்.
நியூசிலாந்து அரசு 150 அகதிகளை ஏற்பதாக கூறியும் ஆஸி. அதை ஏற்கவில்லை. ஏன்?
காரணம், முகாம்களை வைத்துச் செய்யும் அரசியல்தான். தாராளவாத கட்சி முகாம்கள் இருக்கவேண்டுமென நினைக்கிறது. நாங்கள் இங்கு இல்லை எனில் அகதிகள் படகில் வந்து இறங்கிவிடுவார்கள் என்று மக்களிடம் பிரசாரம் செய்கிறது. முகாம்களை வைத்து பல பில்லியன் டாலர்கள் வணிகம் நடைபெறுகிறது. இதனால்தான் முகாம் மக்களை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக தொல்லைகளுக்கு ஆளாக்குகின்றனர். முகாம் மக்களை கடத்தல் கும்பல் என்ற ஒற்றை வார்த்தையால் குறிப்பிடுவது தவறு என ஆஸி.அரசுக்கு புரியவில்லை. மேற்கத்திய நாடுகள் அகதிகளுக்கு இடமளிப்பதால், மக்கள் கருத்தில் ஒளிவட்டத்தில் வாழுகிறார்கள். ஆனால் உண்மை அப்படி அல்ல.
ஸ்விட்சர்லாந்தில் ஆஸி. அகதி ஒருவருக்கு பரிசு கிடைத்துள்ளது. ஆனால் பிறருக்கு இது குறித்து விழிப்புணர்வு கிடைக்கவேயில்லையே?
ஆறு ஆண்டுகளாக நான் அகதி மக்களின் வாழ்க்கையை எழுதி வருகிறேன். எனது நூல் 25 நாடுகளில் விற்கப்படுகிறது. படம் கூட திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகிறது. இதுபோலவே பலரும் எழுதி வருகிறார்கள்.
நன்றி: குளோபல் வாய்ஸ் - ஃபிரெட் பெட்ரோசியன்