பௌர்ணமி மனிதர்களுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்யுமா?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
பௌர்ணமி நிலவு நம்மை பைத்தியமாக்குமா?
நிலவுக்கும் மனநிலைக்குமான தொடர்பு இன்று தொடங்கவில்லை. குறிப்பிட்ட தினத்தன்று மனநிலை மருந்துகளை சாப்பிடுவது என்பது சிலரின் பழக்கம். ஆனால், கிரேக்கர்கள்தான் இதிலும் முன்னிலை வகிக்கிறார்கள். 2300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் அரிஸ்டாட்டிலின் கருத்தான நிலவு, நம் எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது என்பதை நம்பினர். அதோடு, தொழுநோய் போன்றவற்றுக்கும் நிலவுக்கும் தொடர்புள்ளதாக கூறிவந்தனர்.
ஆனால் இதற்கு வலுவான எந்த அறிவியல் ஆய்வும் கிடையாது. ஆனால், மூளையிலுள்ள நீர்மத்தில் நிலவின் ஈர்ப்புவிசை பௌர்ணமியன்றி மாறுதல்களை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால் அது குணநலன்களில் மாறுபாடு ஏற்படுத்தும் அளவு வலிமையானதல்ல என்கிறது அறிவியல்துறை.
தற்போது நடைபெற்றுவரும் ஆராய்ச்சிப்படி, பௌர்ணமி தினத்தன்று ஒப்பீட்டளவில் கொலைகள் குறைந்து வருவதாக கூறுகிறது. எப்படிங்க ப்ரோ என்று கேட்டுவிடாதீர்கள். ஆய்வுகள் அப்படித்தான் டக்கென ஒரு விஷயம் சொல்லிவிட்டு செல்லும். பௌர்ணமி அன்று முடிந்தவரை உற்சாகமாக இருக்க முயற்சியுங்கள். அப்படியாவது பக்கத்து சீட் நண்பரை வெறுப்பேற்றுவோம்.
நன்றி: பிபிசி