மாற்றம் இங்கே தொடங்குகிறது: மாற்றம் தரும் இளைஞர்கள்!
சான்டியாகோ மார்டினெஸ் - கொலம்பியா
இந்த இளைஞர் டிசைன் யுவர் நேஷன் எனும் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். உலகின் முக்கியமான பிரச்னைகளுக்கான தீர்வுகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க இவர் உதவுகிறார். முழுக்க இவை டிஜிட்டல் வடிவில் இருக்கும்.
லிடரோட்டெகா எனும் பலரும் ஒன்றுகூடி எதிர்கால பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தரக்கூடிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார். ஐ.நா சபை திட்டங்களில் செயற்பாட்டாளர், டெட்எக்ஸ் பேச்சாளர் என பல்வேறு வகைகளிலும் சமூகத்தை முன்னேற்றுவதற்கான பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
ஸாம்பியா பல்கலையில் பொருளாதாரம் படித்து வரும் பெண் உரிமை செயற்பாட்டாளர். சிறந்த செயற்பாட்டாளருக்கான பரிசை தன் நாட்டில் பெற்றவருக்கு வயது 23தான் ஆகிறது. வுமன் தபூஸ் ரேடியோ, வானச்சி பவுண்டேஷன் ஆகிய அமைப்புகளை நடத்தி வருகிறார்.
யாஸ்மின் அல்மெய்டா
லோபெடா பிரேசிலிருந்து வந்து உலகம் காக்க வந்த இசைப்பறவை. போஸ்டன் பல்கலையில் உலக உறவுகள் மற்றும் அரசியல் அறிவியல் படித்துக்கொண்டிருப்பவருக்கு வயது 20தான். அகதிகுழந்தைகளுக்கான கல்வி, எல்லைகள் இல்லாத மருத்துவர்களுக்கான நிதியுதவி என பல்வேறு அமைப்புகளுக்காக இப்போதே குரல் கொடுத்து செயற்படத் தொடங்கிவிட்டார். தனது நாட்டின் அரசியல் தளத்தில் செயற்படுவதுதான் அவரது கனவு. அதற்காக மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கான நாளிதழை நடத்தி நிர்வாகம் பழகியிருக்கிறார். இன்று பல்கலையில் அவரது நாட்டு மாணவர்களுக்கான சிறந்த மாணவர் தூதர் இவர்தான்.
அகதி குழந்தைகளுக்கான கல்வி முயற்சிக்கு பல்வேறு அனிமேஷன் படங்கள் உட்பட செய்துகொடுத்தவர் சமூகச்செயற்பாடுகளிலும் காட்டும் வேகம் அசாத்தியமானது.
விக்கி க்வய்னர் - கானா
21 வயதுதான் ஆகிறது இந்த இளம்பெண்ணுக்கு. குழந்தைகள் உரிமை , சுகாதாரம், பாலியல் கல்வி என கானா நாட்டு மக்களுக்கு எந்த வழியில் செய்திகளை கொண்டு சேர்க்கமுடியுமோ அத்தனை வழிகளிலும இவர் செயற்பட்டு வருகிறார். பத்திரிகை, டிவி, இணையம் என கட்டற்று விரிகிறது இவர் பணி. க்யூரியஸ் மைண்ட்ஸ் என்ற அமைப்பின் வழியாக யுனிசெஃப் உதவியுடன் நாட்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்.
நன்றி: global-changemakers.net