குற்றம் செய்ய கனவு காணுங்கள்! - வலி இல்லைன்னா லைஃப் இல்லை!



Pain & Gain (2013) - Review - Lights Overhead



சினிமா விமர்சனம்

பெய்ன் அண்ட் கெய்ன் (2013)

இயக்கம், தயாரிப்பு - மைக்கேல் பே

திரைக்கதை - கிரிஸ்டோபர் மார்க்கஸ், ஸ்டீபன் மெக்ப்ளை

ஒளிப்பதிவு -பென் செரிசின்

இசை - ஸ்டீவ் ஜப்லான்ஸ்கி 

பீட்டே கோலின்ஸ் எழுதிய பெய்ன் அண்ட் கெய்ன் என்ற கட்டுரை நூலைத் தழுவிய படம். 

சன் ஜிம்மில் அதன் உறுப்பினர் எண்ணிக்கையை  300 சதவீதம் உயர்த்துவதாக சூடம் அணைத்து சத்தியம் செய்து வேலையில் சேருகிறார் லூகோ. அங்குள்ள ஜிம் ட்ரெய்னருக்கு பண ஆசை காட்டி தனது க்ரைம் வேலைகளுக்கு அடியாளாக மாற்றுகிறார். லூகோவிற்கு டக்கென பணக்காரனாக வேண்டும். பெண்களுடன் உல்லாசமாக வாழ வேண்டும் என்பதுதான் கனவு.

அதற்காக தனது ஜிம்மிற்கு வரும் பணக்காரர் ஒருவரை கடத்துகிறார். அமெச்சூர் தனமாக செய்யும் கடத்தல் பணியில் அவரது சொத்துக்களை ஜிம் ஓனரும் லூகோவும் ஆட்டையப்போடுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு தப்பைச் செய்கிறார்கள். அவரை உயிருடன் விடுகிறார்கள். அதன் விளைவாக லூகோ மற்றும் அவரது இரு நண்பர்களுக்கு நடக்கும் பிரச்னைகள்தான் படம்.

Sem Dor, Sem Ganho (Pain & Gain, Michael Bay, 2013) | Prós ...




மார்க் வால்பெர்க் படம் நெடுக்க பின்னியிருக்கிறார். இவருக்கு லொள்ளு மனோகர், யோகிபாபு போல டிவைன் ஜான்சன், ஆன்டனி மாக்கி நண்பர்களாக அமைகின்றனர்.

அவல நகைச்சுவை, கடுமையான வன்முறை காட்சிகள், போதைப்பொருட்களின் பயன்பாடு என நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத மைக்கேல் பே படம் இது.

ஆசை காட்டி ஸ்டெராய்டு பயன்படுத்தி பிரச்னையில் மாட்டும் ஆன்டனியை வசப்படுத்துவது, கிறிஸ்துவ மதத்திற்கு கட்டுப்படும் போதை அடிமையான ஜான்சனின் தாறுமாறு செயல்கள்  என படம் வேற லெவலில் இருக்கிறது. நண்பர்கள் இருவரையும் தனது குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி மேய்ப்பது என மார்க் வால்பெர்க் லூகோ கதாபாத்திரத்தில் கோலியாக சிக்சர் அடிக்கிறார்.

பதறாமல் சிதறாமல் குற்றம் செய்து அதுதான் அமெரிக்காவின் கனவு என தைரியமாக சிறையில் இருக்கும்போதும் சொல்லுகிறார் பாருங்கள். அதுதான் படம் சொல்லும் சேதி.

Dwayne Johnson and Mark Wahlberg Talk PAIN AND GAIN, G.I ...


உண்மைச்சம்பவங்களைத் தழுவிய படம் இது. எனவே தைரியமாக படத்தைப் பாருங்கள். செக்ஸ், வன்முறை, பணம், குற்றம் என அனைத்தும் ஓவர்டோஸில் உங்கள் மனதில் நிறையும்.

- கோமாளிமேடை டீம்