இடுகைகள்

தந்தமூக்கு மரங்கொத்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகளவில் அழியும் நிலையிலுள்ள உயிரினங்களில் முக்கியமானவை.....

படம்
  அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள்! கடந்த பத்தாண்டுகளாக பருவச்சூழல் மாறுபாடுகளால் ஏராளமான உயிரினங்கள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த உயிரினங்களை காக்காவிட்டால், காடுகளின் பல்லுயிர்த்தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.  தந்த மூக்கு மரங்கொத்தி (ivory billed woodpecker) அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளின் ஊசியிலைக் காடுகளில் காணப்படும் மரங்கொத்தி. மரங்களின் பட்டைகளை இடைவிடாமல் அலகால் கொத்துவதால், இதனை நெசவாளர் என பறவையியலாளர்கள் செல்லமாக குறிப்பிடுகின்றனர். 1800 களிலிருந்தே காடுகள் அழிக்கப்பட்டதால் வாழிடம் இன்றி தந்த மூக்கு மரங்கொத்தி அழியத்தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டில் எண்ணிக்கை மிகவும் குறைந்து அழியும் நிலையில் உள்ளது. இறந்துபோன பைன், சிவப்பு மேபிள் மரங்களில் கூட்டை அமைக்கிறது.  வண்டுகளின் லார்வா புழுக்கள், பழங்கள், பருப்புகள் முக்கியமான உணவு. உலகளவில் 1-49 வரையிலான பறவைகள் மட்டுமே இருப்பதாக, சர்வதேச இயற்கைவள பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் (IUCN redlist) தகவல் தெரிவிக்கிறது.  ஸ்பிக்ஸ் மக்காவ் (Spix macaw) அண்மையில் அழிவின் விளிம்பில் உள்ள பறவை என மக்காவ் கிளி இனத்தை