இடுகைகள்

இந்தியா ஜார்விஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிலோமீட்டர்களை கணக்குப்போடாமல் பயணம் போகலாம்! கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்

படம்
      கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்     கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர் ஜியோ பேபி இசை சூரஜ் குரூப் பின்னணி சுஷ்யந்த் சியாம் கேரளத்தில் உள்ள சொந்த ஊரில் சின்ன மோட்டார்கள், வண்டிகளை பழுத்து பார்த்து வேலை செய்து வருகிறான் ஜோஸமோன். அவனுக்கு உள்ள கடமைகளில் முக்கியமானது. தங்கைக்கு கல்யாணம் செய்வது. அதற்கு காசுவேண்டுமே? இதற்காக அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலா பயணி கேத்திக்கு ஊரைச்சுற்றிக்காட்ட அப்பச்சன், ஜோஸமோனை தேர்வு செய்து அனுப்புகிறான்.  ஜோஸமோனுக்கு ஒரே ஆசை, அவனது அப்பாவின் புல்லட்தான். அதை அவனுடைய தந்தையாக பார்க்கிறான். ஆனால் அதனை பணமுடைக்காக விற்கும் சூழலில் கேத்தியின் வருகை அதனை தடுக்கிறது. சந்தோஷமாக வண்டியில் கேத்தியை கூட்டிக்கொண்டு செல்கிறான். கேத்தியைப் பொறுத்தவரை வாழ்க்கையும் காசுதான் முக்கியம். காசு இருந்தால் எல்லாமே வரும் என நம்புகிறாள். ஜோஸமோனுக்கு காசும் முக்கியம். உறவுகளும் முக்கியம் என்ற எண்ணம் மனதில் வலுவாக இருக்கிறது. இந்த இருவரும் செய்யும் பயணம் இருவருக்குள்ளும் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதுதான் படம். ஜோஸமோன் ஆக டோவினோ தாமஸ், அப்பச்சன் ஆக ஜோஜூ ஜார்ஜ், கேத்தியாக